ஒரு வானவில் போலே - 29
தொடர்கதை பாகம் 29
அவள் வேகத்தை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் நிதானத்துக்கு வருவது நல்லதாகப்பட்டிச்சு. சரி என்னதான் நடந்ததென பார்த்துவிட்டு முடிவுக்கு வரலாம்; என மனதும் சொல்லிச்சு.
“சரி உனக்கு தான் எல்லாமே தெரியுமே! பிறகு ஏன் இவ்வளவு தூரம்…?”
என்றேன் நான். அதற்கவள்….
” கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க நாங்க சிலதை பேசினதுக்கு அப்புறம் போகலாம்”
என சொல்லவும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளது முகத்தை பார்க்கவும் தொடர்ந்தாள்…..
“அப்படி இல்லை! எனக்கும் நிறைய மறைக்கப்பட்டு தான் இருந்திச்சு. எல்லாத்துக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்ட எனக்கு என்னோட பூர்வீகம் பற்றி எதுவும் சரியாக தெரியாது…தமிழ் பண்பாட்டோட தான் வளர்க்கவும் பட்டேன். திடீர்னு Wrong things in the native னதும் நானும் கோபப்பட்டேன்…. ஏன்னு கேட்டேன் அதுக்கு பிறகு தான்…. கொஞ்சம் சொன்னாங்க… அதுவும் முழுசா இல்ல. தெரிஞ்சவரை சொல்கிறேன்.”
என தொடர்ந்தாள்.
“உண்மையில ஒரு internal investigation ஒன்னுக்காக தான் குணசேகரன் grandpa என்னை இந்த branch க்கு எடுத்தாரு. இல்லைன்னா நான் மலேசியா branch ல தான் பொறுப்பா இருந்தேன். உலகத்தில ஆறு நாட்டில எங்க Company இயங்குது. இங்க இருந்திட்டு திருட்டு தனம் பண்ணிய சிலரை கண்டுபிடிச்சு தூக்கிட்டேன். புதுசா வந்த உங்க கூட இருந்து, சில நாள் running condition எப்படி போகுதுன்னு அவதானிக்க grandpa சொன்னாரு… அப்படி வந்தப் தான் உங்களோட பார்வை என் மீது பட்டிச்சு. அது ஆரம்பத்தில தப்பு போல தெரிஞ்சாலும் அதில தேடலும் ஏக்கமும் தான் தெரிஞ்சிச்சு தவிர தப்பு தெரியல! அப்பவே கொஞ்சம் Deep view உங்க மேல குடுத்திட்டேன்.”
என்றாள்.
ம்ம்ம் அந்த சில senior staff’s இவளுக்கு கொடுத்த hi respect க்கு இதுதான் காரணம்…. அவங்களுக்கு இவளை பற்றிய உண்மைகள் தெரியும். சரி என்னை பற்றி என்ன தேடினாள்? அவளே அதையும் சொன்னாள்…
“குணசேகரன் Grandpa கிட்ட கேட்டேன். அவர் ஆரம்பத்தில சொல்ல மறுத்திட்டாரு… பிறகு அப்பாகிட்ட கேளு என்றாரு. அதை கேக்கதான் இரண்டு நாள் leave போட்டு வந்தேன். அவர்கிட்ட கேட்டேன். உங்க பெயரை சொன்னதும் அதிர்ச்சி அடைஞ்சாரு! ‘கதிர் இன்னும் தனியாவா இருக்கிறான்? அவனுக்கு family இல்லையான்னு’ கேட்டாரு…. தான் இப்படி நடந்திருக்க கூடாதுன்னு சொன்னாரு! பெரிய தப்பு செஞ்சிட்டதா feel பண்ணினாரு!…. அப்புறமா அவர் சொன்ன விசயம் தான் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திச்சு!”
“நான் உன்னோட அப்பா இல்லை தாய் மாமன் என்றார்! என்னோட தாய் தன்னோட தங்கச்சின்னு சொன்னார்! அவங்க ஒருத்தரோட குடும்ப வாழ்க்கைய பகிர்ந்துகிட்டதாவும் சில வாக்குறுதிகளையும் இரகசியங்களையும் காப்பாத்த தான் இப்படி நடந்துகிட்டதாவும் சொன்னாரு! அது யாருன்னும் சொன்னாரு! அதை தவிர எதுவும் என்கிட்ட சொல்லல…அதுக்கு பின்னாடி தான் இந்த drama வை single ஆ நான் செஞ்சேன்.”
தொடர்ந்தும் அவள் என்னிடம்…….
“Now you have come to a conclusion as to who I am.”
என்றுவிட்டு எனது முகத்தை பார்த்து சிரித்தாள்…… இவள்!!! Oh my god!!! அப்படியானாள் இவள் எனது மகள் என அப்போதுதான் எனக்கு புரிஞ்சிச்சு. அஜந்தாவுக்கும் இவளுக்கும் ஏதாவது Inheritance relationship இருக்குமென மட்டுமே சந்தேகப்பட்டேன் தவிர இவ்வளவு நெருக்கமான உறவு இருக்குமென சத்தியமாக நினைக்கவில்லை. இயற்கையோடும் விதியோடும் இரகசியங்களால் மோத முடியாது! என தெளிவா தெரிஞ்சிரிச்சு. ஆனாலும் எனக்கும் அஜந்தாவுக்கும் மட்டுமே தெரிந்த சில சம்பவங்களை நினைவு படுத்தினாளே! அப்படியானால் அஜந்த எங்கோ இருக்கிறாளென மனசு அடித்துச் சொன்னது.
தொடரும்……
எம்.யூ.அப்துல் ரஹீம்