ஒரு வானவில் போலே 28

ஒரு வானவில் போலே - 28

தொடர்கதை பாகம் 28

அஜந்தா German போன பின்பு இருபது வருடங்கள் தாண்டிய நிலையில் ஏதோ ஒரு நம்பிக்கையை தவிர மிகவும் களைப்படைந்து இருந்தேன். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தேடுவதை விட்டுவிட்டு நினைவுகளோடு வாழ பழகினேன். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள புதுக்குழப்பங்கள் மறுபடி என்னை சீண்டியிருந்திச்சு. தர்சன தனபாலனை சந்திக்க வேண்டும். அதே போல ஆறுமுகம் குணசேகரனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி கைக்கெட்டிய சில தகவல்களை வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். முதல் வாய்ப்பு கிடைத்தது. எனக்கென்னவோ சில முடிச்சுகளை அவிழ்க்கும் இறுதி கட்டம் போல இருந்திச்சு. அதாவது மதுபாசினி அவளது தந்தையை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தாள். ஹப்புத்தளை பகுதியில் அவளது வீடிருப்பதாக சொன்னாள். அவளுடன் எனது காரில் பயணித்தேன். அது ஒரு நீண்ட பயணம்…..

“மது… உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் player on பண்ணலாமா?”

என்றேன். சிரித்தவாறு on பண்ணினாள். எல்லாமே இந்த generation க்கு ரசிக்க முடியாத காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் மட்டுமே என்னிடமிருந்தது.

அதனது Volume னை கொஞ்சம் குறைத்துவிட்டு……

“என்கிட்ட இப்படியான song’s தான் இருக்கு sorry உன்னோட generation க்கு அதை ஜீரணிக்க முடியாம இருக்கும்”

என்றேன். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தவாறு அவள்….

“Sir ஒரு Suprise ஆ நான் உங்களோட Genetic relation தான்னு தெரிஞ்சா உங்களுக்கு எப்படி இருக்கும்?”

என்றதும் ஆழமாக அவளது முகத்தை பார்த்தேன். ம்ம்ம் நாடகத்தின் முற்றுப்புள்ளி நெருங்குகிறது. அல்லது நடத்தியவர்கள் அவர்களாக முடித்து வைக்க பார்க்கிறார்கள். 

“This is your opinion? அல்லது நான் தேடி வந்தது அருகில் இருக்கிறதா?”

என்ற என்னை பார்த்து….

“It’s time to untie the knots… உங்கள் குழப்பங்களின் முடிவுக்காக தான் அழைத்துச் செல்கிறேன்.” 

“அப்படியானால் இவ்வளவு நாளும் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்!”

என்றேன் கொஞ்சம் கோபத்தோடு….. 

சரி இப்படி ஒரு நாடகத்தை போட்டு என்னை குழப்பி சிக்கலை தீர்க்க நினைக்கும் அவசியம் தான் என்ன? 

“ஆறுமுகம் குணசேகரன் one of the company director board உன்னோட யாரு?” 

என்றதும்…. கொஞ்சம் ஆச்சரியத்தை அவளது முகம் வெளிப்படுத்தினாலும்….

“Great நீங்க அந்த இடத்துக்கே வந்துட்டீங்க! உங்களை ஏமாற்ற யாரும் எதுவும் செய்யவில்லை. அந்த நோக்கமும் அவங்களுக்கில்லை. ஆனால் சூழ்நிலைகளும் எதிர்பார்ப்புகளும் தீர்வை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி விட்டது! அதை எப்படி புரியவைப்பது? எப்படி புரிந்து கொள்வீர்கள்? என அவங்க மத்தியில குழப்பம் இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ளவில்லை…..ஆனால் என்னோட Involvement தான் உங்களை இப்படியே விட்டுவிட முடியாதென்ற நிலைக்கு அவங்களையும் கொண்டு வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களது சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்” என்றாள் அவள். அதற்கு பின் இருவரும் எதுவும் பேசவில்லை. என்னை முட்டாளாக்கி விட்டார்கள்! என்ற கோபத்தில் வாகனத்தை வேகமாக ஓட்டினேன்.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!