ஒரு வானவில் போலே - 35
தொடர்கதை பாகம் 35 [ இறுதித்தொடர் ]
என்னோட புலணுணர்வுகளை என்னால் நம்பமுடியவில்லை! இது கனவா நிஜமா என புரியவில்லை! நடந்திருப்பது என்ன?
“அண்ணே! Sorry ஒரு Suprise ஆ இருக்கட்டும்னு என்னோட வாயையும் கட்டி வெச்சிட்டா கயல்விழி! “
என தங்கை செல்வி மெதுவாக சொன்னதும் கூட மிகுந்த சிரமப்பட்டுதான் உணர்வு மண்டலத்தை தொட்டிச்சு.
“அப்பா! இது நிஜம்தான்…. கொஞ்சம் அதிகமாவே குழப்பிட்டோம்.”
என்ற கயல்விழியின் குரல் ஓரளவு நிதானத்துக்கு கொண்டுவந்திச்சு. அருகில் வந்த தர்சன்….
“மச்சன் உள்ள போய் ready ஆகு கல்யாணம் உங்களுக்கு தான்”
என்றவும் ஒருவகை வெட்கமும் புதிதாக சேர்ந்து கொண்டது!
“இதெண்டா புதினமான கல்யாணம்தான்! மாப்பிளையும் பொண்ணும் ஒரே Room ல இருந்து ready ஆகி வரப்போகினம்! கதையெல்லாம் இருக்கெண்டு தொடங்கி… அப்படியே முதற்பகலை முடிச்சிட்டு வெளியாள வந்திடுவாங்களோ தெரியாது! இவயல்ட பார்வை கடுமையாத்தான் இருக்கு!”
என குணசேகரன் அண்ணா சொல்லவும் சிரிப்பொலி கலைகட்டியது.
உணர்வு விம்மல்களும் இருபது வருட ஏக்கத் தவிப்புகளும் சூழ உள்ளே நுளைந்தேன். வார்த்தைகள் வரவில்லை…
“Sorry கதிர்… எனக்கு அந்த operation க்கு பின்னாடி ten percent chance இருந்தாலும் அதிலயும் Brain ல Memory முழுசா போயிடும் சந்தர்ப்பம் அதிகம்னு தெரியவந்திது…. அதனால அந்த operation க்கு முன்னாடி ஒரு தடவை உன்னை பார்த்திட்டு போகத்தான் இலங்கைக்கு வந்தேன். என்னோட நினைவுகள் காணாமல் போய்விடும் என்பதை என்னால ஏற்க முடியவில்லை. வாழ்ந்த திருப்தி மனதில இருக்கிறதோட எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு வகையில இது ஒரு சுயநலம்னு கூட சொல்லலாம்….நீ சில நேரம் பாதிக்கப்படுவாய் என்பது தெரிந்தும் அப்படி செய்தேன். கடைசி ஆசையா உன்னோடு வாழனும்னு தான் நினைக்கிறேன் கதிர்…” என கொஞ்சம் விம்மலுடன் நிறுத்தினாள்.
“Daddy யும் Mummy யும் இல்லாட்டியும் குணசேகரன் Uncle ம் தமயந்தி Aunty யும் எங்கட கல்யாணத்தை நடத்துறது மனசுக்கு எவ்வளவு ஆறுதல்” என்றாள்.
நான் எந்த பதிலும் சொல்லாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன்.
என்ன நடந்ததென்பதை தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தாலும் அது அவளின் மனோ நிலையில் பாதிப்பை ஏற்படுத்துமென ஒரு ஊகம் சொல்லியது. அவளது பேச்சுக்கு மத்தியில் ஒரு வகை குழப்பத்தை கண்டேன். எனவே….
“உன்மேல நான் கொண்ட காதலும் வைத்த உறவும் கொண்ட நம்பிக்கையும் எப்போதும் ஏற்றத்தாழ்வானதல்ல. இப்போது கூட நீ கிடைத்தது தான் அதிஷ்டமாக தெரியுதே தவிர அதற்கிடையில நடந்த நடக்கின்ற துரதிஷ்ட சம்பவங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.”
என்றவாறு அவளை மெதுவாக அணைத்துக் கொண்டேன். கதவு தட்டப்பட்டது. சென்று திறந்தேன்.
“அவசரமா ready ஆகுங்க எல்லாரும் வந்தாச்சு. அப்பா கொஞ்சம் வாங்களேன்” என்றாள் கயல்விழி.
“Dear நீ முதல்ல ready ஆகிட்டு வா”
என்றுவிட்டு வெளியால் வந்தேன்.
“அப்பா அம்மாவ அதிகம் பேச விடாதீங்க. அவங்க full memory loss ல இருந்து முழுசா இன்னும் recover ஆகயில்ல. இந்த நிலமையில உங்களை சந்திக்க கூடாதின்னு தர்சன் Uncle ட்ட அந்த operation க்கு முதல் promise வாங்கியிருக்கா. இப்போதைக்கு உங்களை இரண்டாம் தடவை சந்திச்ச அளவுக்கு முன்னேறி வந்திருக்கா. இனிதான் படிப்படியா சரியாக வாய்ப்பிருக்குன்னு Doctor சொல்லியிருக்கிறார். அதிகமா tention குடுக்க கூடாதாம்…. குறிப்பா நான் யாரென்று கூட தெரியாது. Careful ஆ handle பண்ணுங்க”
என கயல்விழி சொல்லி முடியும் போதே அஜந்தா மணப்பெண் உடையில் வெளியே வந்தாள். இவர்களை கண்டதும் அருகில் வந்து….
“இது யாரு கதிர் என்னை மாதிரியே இருக்கிறாள்!?”
என்றவும் தான் எனக்கு நிலமை புரிஞ்சிச்சு.
“அது….முகூர்த்த நேரம் முடிய முதல் தாலி கட்டனும் அதுக்கு நீ மேடையில போய் இருக்கனும். என்றவாறு கயல்விழிக்கு கண்ணால் சைகை செய்ததும் அவள் அவசரமாக அவ்விடத்தை விட்டும் நகர்ந்து ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டாள். செல்லும் போது கயல்விழியின் கண்கள் கலங்கியதை கண்டதும் மனதுக்கு ஏதோ போல் இருந்திச்சு. இந்த காலத்தின் தண்டிப்பும் கொடுமையானதுதான்.
– முற்றும். –
எம்.யூ.அப்துல் ரஹீம்
இத்துடன் வானவில் போலே கதைத்தொடர் முடிவடைகிறது, இத்துடன் வானவில் போலே கதைத்தொடர் முடிவடைகிறது , எழுத்தாளர் எம்.யூ அப்துல் ரஹீம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.