மார்ச் 6 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
மார்ச்சு 6 (March 6) கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
845 – இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1204 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார்.
1447 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார்.
1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
1665 – பிரித்தானிய அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
1788 – பிரித்தானியக் கைதிகள் அடங்கிய முதலாவது தொகுதி கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 – தமிழகத்தின் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1820 – மிசோரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.
1836 – அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1866 – இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1882 – செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.
1899 – செருமனியின் பேயர் நிறுவனம் “ஆஸ்பிரினை” (Aspirin) வணிகச் சின்னமாகப் பதிந்தது.
1902 – ரியல் மாட்ரிட் (Real Madrid) கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களைப் போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து வங்கிகளையும் மூடி வங்கி விடுமுறையாக அறிவித்தார்.
1940 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வான்படைகள் எசுத்தோனிய நகர் நர்வாவை குண்டுகளால் தாக்கி அழித்தன.
1945 – செருமனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1946 – ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்; அதன்படி வியட்நாம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்கப்பட்டது.
1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராக கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957 – கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964 – கிரேக்கத்தின் மன்னராக இரண்டாம் கான்சுடன்டைன் பதவியேற்றார்.
1964 – குத்துச்சண்டை வீரர் காசியசு கிளேயின் பெயரை முகம்மது அலி என எலிஜா முகம்மது மாற்றினார்.
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1967 – ஜோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987 – பிரித்தானியப் பயணிகள் கப்பல் ‘எரால்டு ஒஃப் பிரீ என்டர்பிரைசசு’ மூழ்கியதில் 193 பேர் உயிரிழந்தனர்.
1988 – மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2003 – அல்சீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.
2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் நிலநடுக்கங்களில் 70 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1475 – மைக்கலாஞ்சலோ, உலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஓவியர் மற்றும் சிற்பி (இ. 1564).
1508 – நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556).
1806 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861).
1927 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 2014).
1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014).
1937 – வலண்டீனா தெரெசுக்கோவா, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி.
1972 – கரு பழனியப்பன், தமிழகத் திரைப்பட இயக்குநர்.
இறப்புகள்:
1900 – காட்லீப் டைம்லர், செருமானியப் பொறியியலாளர் (பி. 1834).
1973 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892).
2005 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1906).
2008 – கி. சிவநேசன், இலங்கை அரசியல்வாதி (பி. 1957).
2016 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் (பி. 1971).
2019 – டைப்பிஸ்ட் கோபு, தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகர்.
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (கானா).
நிறுவன நாள் (நோர்போக் தீவு).
தகவல் உதவி: விக்கிப்பீடியா