மார்ச் 5 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
மார்ச்சு 5 (March 5) கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
363 – உரோமைப் பேரரசர் யூலியன் 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான்.
1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.
1616 – நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் ‘பரலோகக் கோளங்களின் சுழற்சி’ என்ற நூல் கத்தோலிக்கத் திருச்சபையால் தடைசெய்யப்பட்டது.
1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கலவரத்தில் ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.
1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.
1836 – சாமுவேல் கோல்ட் 34-கேலிபர் சுழல் கைத்துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்.
1857 – கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் கொழும்பு பழைய கலங்கரை விளக்கம் கட்டி முடிக்கப்பட்டது.
1906 – மோரோ கிளர்ச்சி: அமெரிக்க இராணுவம் பழங்குடி மோரோ மக்களின் கிளர்ச்சியை அடக்க பெருமளவு படையினரைக் குவித்தது.
1912 – இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களைப் படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.
1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடினார்.
1933 – செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது.
1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பத்தேவியாவைக் கைப்பற்றினர்.
1946 – வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் உரையாற்றும் போது “இரும்புத் திரை” (Iron Curtain) என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.
1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் காலமானார்.
1960 – இந்தோனேசிய அரசுத்தலைவர் சுகர்ணோ நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய நாடாளுமன்றத்தை அறிவித்தார்.
1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
1965 – பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1970 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் (NPT) 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.
1974 – யோம் கிப்பூர்ப் போர்: இசுரேலியப் படையினர் சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.
1979 – சோவியத் விண்கலங்கள் மற்றும் செருமனிய-அமெரிக்க விண்கலத்தை காமா கதிர் வெடிப்பு தாக்கியது.
1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.
1998 – இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
2012 – மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1512 – கிரார்துசு மெர்காதோர், பிளமிய கணிதவியலாளர், நிலப்படவியலாளர் (இ. 1594).
1871 – ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919).
1898 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (இ. 1976).
1913 – கங்குபாய், இந்துத்தானி இசைப் பாடகி (இ. 2009).
1916 – பிஜு பட்நாயக், இந்திய அரசியல்வாதி (இ. 1997).
1934 – டேனியல் கானமென், நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர்.
1955 – எஸ். பி. வெங்கடேஷ், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2026).
1956 – ஸ்ரீபிரியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
1958 – நாசர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.
1959 – சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்.
1976 – செல்வராகவன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
1984 – ஆர்த்தி அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2015).
இறப்புகள்:
1827 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1749).
1827 – வோல்ட்டா, மின்கலத்தைக் கண்டுபிடித்த இயற்பியலாளர் (பி. 1745).
1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878).
1966 – அன்னா அக்மதோவா, உருசியக் கவிஞர் (பி. 1889).
1994 – வ. பொன்னம்பலம் (காங்கேசன்துறை பொன்னம்பலம்), இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1930).
2006 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1926).
2013 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (பி. 1954).
2013 – ராஜசுலோசனா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1935).
2013 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், தமிழறிஞர் (பி. 1936).
சிறப்பு நாள்:
மர நாள் (ஈரான்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா