இன்றைய நாள்: சனவரி 27 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

சனவரி 27 (January 27) கிரிகோரியன் ஆண்டின் 27 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது.
  • 1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
  • 1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார்.
  • 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின (சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்).
  • 1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.
  • 1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.
  • 1825 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது.
  • 1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.
  • 1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான (Incandescent light bulb) காப்புரிமம் பெற்றார்.
  • 1888 – தேசிய புவியியல் கழகம் (National Geographic Society) வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
  • 1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
  • 1916 – முதலாம் உலகப் போர்: இராணுவத்திற்கு கட்டாயமாக ஆள்சேர்க்கும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.
  • 1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
  • 1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
  • 1938 – நியூ யோர்க்கில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த 7,600 கைதிகள் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
  • 1951 – அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது.
  • 1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிரான இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
  • 1967 – பனிப்போர்: விண்வெளியில் அணுவாயுதத் தடை உள்ளிட்ட விண்வெளி அமைதி ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் இடையே கையெழுத்தானது.
  • 1967 – அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் விண்கலப் பரிசோதனையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர்.
  • 1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
  • 1996 – செருமனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது.
  • 1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
  • 2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சிய வெடிப்புச் சம்பவங்களில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
  • 2011 – அரேபிய வசந்தம்: யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின.
  • 2013 – பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதித் தீ விபத்தில் 242 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்:

  • 1756 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர்.
  • 1775 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர்.
  • 1832 – லூயிஸ் கரோல், ஆங்கிலேய எழுத்தாளர் (‘Alice in Wonderland’ ஆசிரியர்).
  • 1859 – செருமனியின் இரண்டாம் வில்லியம்.
  • 1890 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி.
  • 1909 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர்.
  • 1934 – எடித் கிரசான், பிரான்சின் 160-வது பிரதமர்.
  • 1935 – கோமல் சுவாமிநாதன், தமிழக எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.
  • 1941 – பியேத்ரிசு தின்சுலே, நியூசிலாந்து வானியலாளர்.
  • 1942 – தசுக்கு ஓஞ்சோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்.
  • 1945 – நெல்லைக் கண்ணன், தமிழகப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர்.
  • 1946 – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழக நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர்.
  • 1956 – மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை.
  • 1956 – அமர் சிங், இந்திய அரசியல்வாதி.
  • 1965 – ஆலன் கம்மிங், நடிகை.
  • 1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.
  • 1976 – சிரேயசு தள்பதே, இந்திய நடிகர்.
  • 1979 – டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்:

  • 1311 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர்.
  • 1596 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய கடற்படைத் தலைவர்.
  • 1814 – யோகான் பிக்டே, செருமானிய மெய்யியலாளர்.
  • 1851 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பறவையியல் வல்லுநர்.
  • 1893 – மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர்.
  • 1901 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர்.
  • 1922 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர்.
  • 1965 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிர்ப்புப் போராளி.
  • 1967 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர்.
  • 1979 – விக்டோரியா ஒகாம்போ, எழுத்தாளர்.
  • 1983 – லூயிசு டி புனெசு, பிரெஞ்சு நடிகர்.
  • 2008 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2-வது அரசுத்தலைவர்.
  • 2009 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர்.
  • 2010 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர்.
  • 2010 – ஓவர்ட் சின், அமெரிக்க வரலாற்றாசிரியர்.
  • 2014 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர்.
  • 2014 – இரா. அ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்.
  • 2015 – சார்லஸ். எச். டவ்ன்ஸ், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
  • 2018 – இங்வர் காம்பரத், ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனர்.
  • 2020 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர்.
  • 2023 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

சிறப்பு நாள்:

  • பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day).

தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!