
சனவரி 24 (January 24) கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
- 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- 914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.
- 1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.
- 1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.
- 1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- 1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
- 1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
- 1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
- 1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
- 1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
- 1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை (Boy Scouts) ஆரம்பித்தார்.
- 1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
- 1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் ‘லெனின்கிராட்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
- 1961 – இரண்டு H-குண்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது; ஒரு ஐதரசன் குண்டின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.
- 1966 – ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 117 பேர் உயிரிழந்தனர்.
- 1968 – வியட்நாம் போர்: ஆத்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு தாக்குதலை ஆரம்பித்தது.
- 1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் 28 ஆண்டுகளுக்குப் பின் குவாம் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.
- 1978 – சோவியத் செய்மதி ‘கொசுமசு 954’ வளிமண்டலத்துள் எரிந்து கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தது.
- 1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் (Apple Macintosh) தனி மேசைக் கணினி விற்பனைக்கு வந்தது.
- 1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கி.மீ. தூரத்துக்குள் வந்தது.
- 1990 – சப்பான் ‘ஐட்டென்’ என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.
- 1996 – உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி பதவி விலகினார்.
- 2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
- 2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கொழும்பில் காணாமல் போனார்.
- 2009 – பிரான்சில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
- 2011 – மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலைய குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்:
- 1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர்.
- 1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
- 1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர்.
- 1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய் மற்றும் சாதனையாளர்.
- 1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர்.
- 1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர்.
- 1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்.
- 1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்.
- 1964 – ரேகா பரத்வாஜ், இந்தியப் பாடகி.
- 1974 – நவ்தீப் சிங், இந்திய துடுப்பாட்ட வீரர்.
- 1981 – ரியா சென், இந்திய நடிகை.
- 1984 – டி. இமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்.
- 1985 – ரேகா வேதவியாஸ், இந்திய நடிகை.
இறப்புகள்:
- 41 – காலிகுலா, உரோமைப் பேரரசர்.
- 817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை).
- 1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர்.
- 1961 – சி. கே. சுப்பிரமணிய முதலியார், தமிழறிஞர்.
- 1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர்.
- 1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர்.
- 2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர்.
- 2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர்.
- 2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர்.
- 2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்.
சிறப்பு நாள்:
- தேசிய பெண் குழந்தை நாள் (இந்தியா).
- இணைப்பு நாள் (உருமேனியா).
தகவல் உதவி: விக்கிப்பீடியா