
சனவரி 22 (January 22) கிரிகோரியன் ஆண்டின் 22 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
- 613 – கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான்.
- 1506 – 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக் கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.
- 1517 – முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர்.
- 1555 – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது.
- 1808 – போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் பிரேசில் வந்து சேர்ந்தனர்.
- 1840 – பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
- 1849 – இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது; கடைசி சீக்கியப் படை சரணடைந்தது.
- 1863 – உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
- 1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாப்பிரிக்காவின் சூலுப் படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தன.
- 1889 – கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.
- 1899 – ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.
- 1901 – விக்டோரியா மகாராணி காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
- 1905 – இரத்த ஞாயிறு: உருசியப் பேரரசருக்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது; 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1906 – பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 130 பேர் உயிரிழந்தனர்.
- 1915 – மெக்சிக்கோ, குவாதலஹாரா நகரில் தொடருந்து விபத்தில் 600 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன.
- 1927 – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் துப்ருக் நகரை நாட்சிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்தது.
- 1945 – இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன்முதலாகக் கூடியது.
- 1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது.
- 1964 – கென்னத் கவுண்டா வடக்கு றொடீசியாவின் முதலாவது அரசுத்தலைவரானார்.
- 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்குச் சென்றது.
- 1969 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.
- 1973 – அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.
- 1973 – நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 – நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் ஆந்திரே சாகரவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
- 1987 – பிலிப்பீன்சு பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
- 1992 – சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
- 1999 – ஒரிசாவில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
- 2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
பிறப்புகள்:
- 1552 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர்.
- 1561 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி.
- 1573 – ஜான் டன், ஆங்கிலேயக் கவிஞர்.
- 1711 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர்.
- 1788 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர்.
- 1870 – சேசாத்திரி சுவாமிகள், தமிழகச் சித்தர்.
- 1891 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி.
- 1898 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர்.
- 1906 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர்.
- 1909 – ஊ தாண்ட், ஐநாவின் 3-வது பொதுச் செயலர்.
- 1926 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர்.
- 1958 – கிருஷ்ண முரளி, தெலுங்குத் திரைப்பட நடிகர்.
- 1976 – டி. எம். கிருஷ்ணா, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்.
- 1985 – யோகி பாபு, தமிழ் நகைச்சுவை நடிகர்.
தகவல் உதவி: விக்கிப்பீடியா