இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடை – பகுதி 1)

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடை -பகுதி 1)

  1. இலங்கை இறைவரித் திணைக்களம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
    1932 (வருமான வரி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது).

  2. உலகில் ஷியா (Shia) முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாழும் நாடு எது?
    ஈரான் (Iran).

  3. இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?
    திரௌபதி முர்மு (Droupadi Murmu).

  4. இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?
    அனுர குமார திஸாநாயக்க.

  5. அண்மைய பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்ற வாக்கு வீதம் எவ்வளவு?
    61.56%.

  6. நிலப்பரப்பு அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரிய தேசியப் பூங்கா எது?
    வில்பத்து தேசியப் பூங்கா (Wilpattu National Park).

  7. இலங்கை பாராளுமன்றத்திற்கு அதிக மற்றும் குறைந்த உறுப்பினர்களை தெரிவு செய்யும் மாவட்டங்கள் எவை?
    அதிகம் – கொழும்பு (18 உறுப்பினர்கள்)
    குறைவு – திருகோணமலை (04 உறுப்பினர்கள்)

  8. SpaceX நிறுவனத்தின் நிறுவனர் யார்?
    ஈலோன் மஸ்க் (Elon Musk).

  9. இலங்கையில் அதிக மாவட்டங்களுடன் எல்லையைப் பகிரும் மாவட்டம் எது?
    அனுராதபுரம் மாவட்டம் (9 மாவட்டங்கள்).

  10. பருத்தித்துறை முனை மற்றும் தெய்வேந்திர முனை அமைந்துள்ள மாவட்டங்கள் எவை?
    பருத்தித்துறை முனை – யாழ்ப்பாணம் மாவட்டம்
    தெய்வேந்திர முனை – மாத்தறை மாவட்டம்

  11. SAARC நாடுகளில் இலங்கையை விட நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடுகள் எவை?
    பூட்டான் மற்றும் மாலைத்தீவு.

  12. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தற்போதைய தலைவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    ஜெர்மனி. (தற்போதைய தலைவர் – தோமஸ் பாக், Thomas Bach).

  13. UNESCO “Forbidden City” என அறிவித்த தளம் எந்த நாட்டில் உள்ளது?
    சீனா – பெய்ஜிங்.

  14. காசா பகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்?
    பலஸ்தீனியர்கள் (Palestinians).

  15. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு முறைமை பெயர் என்ன?
    அயன் டோம் (Iron Dome).