பெப்ரவரி 9 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 9 (February 9) கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் (Dutch) கைப்பற்றினர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தைக் கிளர்ச்சி இடமாக அறிவித்தது.
1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
1825 – அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
1861 – ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1895 – வில்லியம் மோர்கன் ‘கைப்பந்தாட்டத்தை’ (Volleyball) கண்டுபிடித்தார்.
1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலைத் தொடங்கினர்.
1900 – இலங்கையிலும் இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1900 – புகழ்பெற்ற டேவிசுக் கோப்பை (Davis Cup) டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
1904 – உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.
1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
1951 – கொரியப் போர்: தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.
1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ‘ஆர்-7’ சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1971 – அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரை இறங்கிய பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பியது.
1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு மிக அண்மையில் (எட்டரைக் கோடி கி.மீ. தூரத்தில்) வந்தது.
1996 – லண்டன் குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்; ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்டது.
1996 – ‘கோப்பர்நீசியம்’ (Copernicium) தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
2018 – தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
பிறப்புகள்:
1737 – தாமஸ் பெய்ன், புகழ்பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளர்.
1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9-வது அரசுத்தலைவர்.
1910 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர்.
1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்.
1935 – வா. மு. சேதுராமன், தமிழகத் தமிழறிஞர் மற்றும் கவிஞர்.
1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்.
1943 – ஜோசப் ஸ்டிக்லிட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்.
1964 – ம. ஆ. சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்.
1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்.
1981 – டாம் ஹிடில்ஸ்டன், புகழ்பெற்ற ஆங்கிலேய நடிகர்.
இறப்புகள்:
1881 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உலகப் புகழ்பெற்ற உருசிய புதின எழுத்தாளர்.
1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்.
1984 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, தமிழகத்தின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்.
1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர்.
2001 – சாவி, தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர்.
2008 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர் (மெக்சேசே விருது பெற்றவர்).
2012 – ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழகப் புதின எழுத்தாளர்.
2016 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37-வது பிரதமர்.
தகவல் உதவி: விக்கிப்பீடியா