பெப்ரவரி 5 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 5 (February 5) கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
62 – இத்தாலியின் பொம்பெயி (Pompeii) நகரில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
789 – முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார்.
1597 – சப்பானில் அந்நாட்டு அரசால் கிறித்தவர்கள் பலர் சமூகத்திற்குக் கெடுதலானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1649 – இசுக்காட்லாந்து நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை அந்நாட்டின் மன்னனாக அங்கீகரித்தது.
1782 – எசுப்பானியப் படைகள் மெனோர்க்கா தீவைப் பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின.
1782 – ஒகைய்யோவில் வெள்ளை இனத்தவரால் 90 அமெரிக்கப் பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1782 – நான்காவது ஆங்கிலோ-இடச்சுப் போர்: பிரித்தானிய தூதுவர் ஹியூ பொயிட் கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டார்.
1783 – இத்தாலியின் கலபிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 32,000 முதல் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புகழ்பெற்ற ‘ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்’ பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
1859 – மோல்டாவியா மற்றும் வலாச்சியா பிராந்தியங்கள் ஒன்றிணைந்து இன்றைய ‘உருமேனியா’ உருவாவதற்கான சுயாட்சி மாநிலமாக மாறியது.
1869 – வரலாற்றில் மிகப்பெரிய வண்டல் தங்கம் ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1885 – பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக அறிவித்தான்.
1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழியான ‘பேக்கலைட்டு’ (Bakelite) கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1918 – செருமனியின் விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது; இது அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.
1922 – புகழ்பெற்ற ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ (Reader’s Digest) மாத இதழின் முதலாவது பிரதி வெளியானது.
1939 – இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.
1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கார் மிட்ச்செல் நிலவில் தரையிறங்கினர்.
1985 – ரோம் மற்றும் கார்த்திஜ் நகரங்களுக்கிடையே 2,131 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1997 – சுவிட்சர்லாந்து வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன.
பிறப்புகள்:
1840 – ஜான் பாய்டு டன்லப், டன்லப் டயர் நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர்.
1918 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி.
1933 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்).
1934 – வெ. யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி.
1976 – அபிஷேக் பச்சன், இந்தியத் திரைப்பட நடிகர்.
1985 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகப்புகழ் பெற்ற போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்.
1992 – நெய்மார், பிரேசில் கால்பந்து நட்சத்திரம்.
இறப்புகள்:
1898 – மு. கா. சித்திலெப்பை, இலங்கைத் தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர்.
2008 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிக குரு.
2021 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர் மற்றும் இதழாளர்.
2023 – டி. பி. கஜேந்திரன், தமிழகத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர்.
சிறப்பு நாள்:
காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்).
விடுதலை நாள் (சான் மரீனோ).
ஒற்றுமை நாள் (புருண்டி).
தகவல் உதவி: விக்கிப்பீடியா