பெப்ரவரி 26 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.
1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆனார்.
1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.
1658 – வடக்குப் போர்களில் ஏற்பட்ட தோல்வியால் டென்மார்க்-நோர்வே அரசன் தனது நிலத்தில் பாதியை சுவீடனுக்கு வழங்கினான்.
1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
1815 – எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.
1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.
1876 – யப்பானிய வணிக வசதிக்காக கொரியாவில் மூன்று துறைமுகங்களை அமைக்க யப்பானுக்கும் கொரியாவுக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் காண்பிக்கப்பட்டது.
1935 – இராபர்ட் வாட்சன்-வாட் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை (Radar) உருவாக்க வழிவகுத்தது.
1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1952 – வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக (Earth Day) அறிவித்தார்.
1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.
1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கியப் படைகள் வெளியேறுவதாக சதாம் உசேன் அறிவித்தார்.
1993 – நியூயோர்க் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
2018 – பப்புவா நியூ கினியில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1593).
1802 – விக்டர் ஹியூகோ, புகழ்பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1885).
1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4-வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982).
1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979).
1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11-வது பிரதமர் (இ. 2014).
1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000).
1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், அரசியல்வாதி (இ. 2019).
1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12-வது அரசுத்தலைவர்.
1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்.
இறப்புகள்:
1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் (பி. 1865).
1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி. 1847).
1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர் மற்றும் அரசியல்வாதி (பி. 1883).
1969 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமானிய மெய்யியலாளர் (பி. 1883).
2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் (பி. 1944).
2017 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்துப் பாடகர், நாடகக் கலைஞர்.
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (குவைத்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா