பெப்ரவரி 24 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்:

  • 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.

  • 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.

  • 1582கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.

  • 1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.

  • 1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.

  • 1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.

  • 1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.

  • 1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.

  • 1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.

  • 1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.

  • 1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.

  • 1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.

  • 1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது.

  • 1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.

  • 1918எஸ்தோனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  • 1920நாட்சி கட்சி (Nazi Party) ஆரம்பிக்கப்பட்டது.

  • 1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

  • 1949 – 1948 அரபு – இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

  • 1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

  • 1971 – பா. கா. மூக்கைய்யாத்தேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.

  • 1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

  • 1989யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

  • 1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.

  • 1999 – கிழக்கு சீனாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.

     
  • 2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.

  • 2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

  • 2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

  • 2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார்.

  • 2009வாட்சப் (WhatsApp) கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

  • 2016 – கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்:

  • 1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558).

  • 1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700).

  • 1886ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்.

  • 1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019).

  • 1928ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977).

  • 1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்.

  • 1948செல்வி ஜெ. செயலலிதா, தமிழக முன்னாள் முதலமைச்சர், புகழ்பெற்ற நடிகை (இ. 2016).

  • 1955ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் (Apple) நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 2011).

  • 1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்.

  • 1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்.

இறப்புகள்:

  • 1810 – என்றி கேவண்டிசு, புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் (பி. 1731).

  • 1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர் (பி. 1765).

  • 1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1885).

  • 1986ருக்மிணி தேவி அருண்டேல், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர் (பி. 1904).

  • 2001 – கிளாடு சேனன், தகவல் கோட்பாட்டின் தந்தை (பி. 1916).

  • 2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929).

  • 2018ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்படப் புகழ்மிக்க நடிகை (பி. 1963).

சிறப்பு நாள்:

  • விடுதலை நாள் (எசுத்தோனியா).


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!