பெப்ரவரி 21 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 21 (February 21) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
வரலாற்று நிகழ்வுகள்:
362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.
1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது.
1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.
1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.
1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.
1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை (Communist Manifesto) வெளியிட்டனர்.
1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து (Telephone Directory) அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
1919 – செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.
1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.
1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை (Instant Camera) நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.
1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டத்தின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972 – சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.
1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.
1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.
2013 – ஐதராபாத் குண்டு வெடிப்புகள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1728 – மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762).
1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890).
1878 – மிரா அல்பாசா (அன்னை), பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973).
1894 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (இ. 1955).
1895 – என்ரிக் டாம், டென்மார்க்கிய உயிர் வேதியியலாளர் (இ. 1976).
1896 – நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961).
1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982).
1921 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002).
1924 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2-வது அரசுத்தலைவர் (இ. 2019).
1946 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016).
1958 – கிம் கோட்ஸ், கனடிய நடிகர்.
1964 – ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர்.
1970 – கருணாஸ், தமிழக நடிகர், அரசியல்வாதி.
1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்.
1987 – எலன் பேஜ், கனடிய நடிகை.
1988 – வேதிகா குமார், தென்னிந்திய நடிகை.
இறப்புகள்:
1829 – ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778).
1906 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855).
1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853).
1938 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர் (பி. 1868).
1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925).
1981 – ஏ. எஸ். ராஜா, இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்.
1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905).
2001 – நரேன் சந்து பரசார், இந்திய மொழியியலாளர் (பி. 1934).
2001 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (பி. 1916).
2011 – திருச்சி பிரேமானந்தா, சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951).
2012 – முத்துராஜா, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
2018 – பில்லி கிரகாம், அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளர் (பி. 1918).
சிறப்பு நாள்:
பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day)
தகவல் உதவி: விக்கிப்பீடியா