இன்றைய நாள்: பெப்ரவரி 2 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

இன்றைய நாள்: பெப்ரவரி 2 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 2 (February 2) கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் நோர்சு இராணுவத்திடம் போரில் தோல்வியடைந்தார்.

  • 962 – முதலாம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

  • 1141 – லிங்கன் போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

  • 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.

  • 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் முடிவுக்கு வர ‘குவாடுலுப் கிடால்கோ’ உடன்படிக்கை எட்டப்பட்டது.

  • 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் முதல் முறையாக சான் பிரான்சிஸ்கோ வந்தடைந்தனர்.

  • 1868 – சப்பானியப் பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றி எரித்தனர்.

  • 1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

  • 1880 – அமெரிக்காவின் இந்தியானாவில் முதலாவது மின்சார வீதி விளக்குகள் நிறுவப்பட்டன.

  • 1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  • 1901 – பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

  • 1920 – எஸ்தோனியா மற்றும் உருசியா இடையே அமைதி உடன்பாடு கையெழுத்தானது.

  • 1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரில் செருமானியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன.

  • 1946 – அங்கேரியக் குடியரசு அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டது.

  • 1971 – ஈரநிலங்களின் பாதுகாப்புக்கான பன்னாட்டு ‘ராம்சர் சாசனம்’ ஈரானில் கையெழுத்திடப்பட்டது.

  • 1971 – உகாண்டாவின் இராணுவப் புரட்சிக்குப் பிறகு இடி அமீன் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார்.

  • 1972 – டப்ளினில் இருந்த பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

  • 1982 – சிரியாவின் ஹமா நகரில் நடந்த தாக்குதல்களில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

  • 1989 – ஒன்பது ஆண்டுகால முற்றுகைக்குப் பிறகு கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானிலிருந்து வெளியேறின.

  • 1990 – நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் டி கிளர்க் அறிவித்தார்.

  • 1998 – பிலிப்பீன்சில் நிகழ்ந்த விமான விபத்தில் 104 பேர் உயிரிழந்தனர்.

  • 2005 – கனடிய அரசு ஒருபால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியது.

  • 2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்:

  • 1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர்.

  • 1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர்.

  • 1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த அறிஞர்.

  • 1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் மற்றும் கவிஞர்.

  • 1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

  • 1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மெய்யியலாளர்.

  • 1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர்.

  • 1915 – குஷ்வந்த் சிங், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்.

  • 1933 – தான் சுவே, பர்மாவின் முன்னாள் பிரதமர்.

  • 1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர் மற்றும் கல்வியாளர்.

  • 1977 – சக்கீரா, உலகப்புகழ் பெற்ற கொலம்பியப் பாடகி.

  • 1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்:

  • 1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர்.

  • 1960 – மு. இராகவையங்கார், தமிழகத் தமிழறிஞர் மற்றும் கவிஞர்.

  • 1970 – பெர்ட்ரண்டு ரசல், நோபல் பரிசு பெற்ற மெய்யியலாளர் மற்றும் கணிதவியலாளர்.

  • 2009 – கே. கோவிந்தராஜ், ஈழத்து மலையகத் தமிழ் எழுத்தாளர்.

  • 2010 – கொச்சி ஹனீஃபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர்.

  • 2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்.

  • 2023 – கே. விஸ்வநாத், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்.

சிறப்பு நாள்:

  • உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day).

  • ஸ்டாலின்கிராட் சமர் வெற்றி நாள் (உருசியா).

  • கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து).


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!