பெப்ரவரி 12 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 12 (February 12) கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
1502 – வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற்பயணத்தை லிஸ்பனில் இருந்து தொடங்கினார்.
1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா, தனது இராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.
1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரிய ஜேன் கிரே, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1689 – இங்கிலாந்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு பிரான்சுக்குத் தப்பியோடியதை அடுத்து, அவர் பதவியைத் துறந்ததாக நாடாளுமன்றம் அறிவித்தது.
1733 – அமெரிக்காவின் ஜோர்ஜியா, பிரித்தானியாவின் 13-வது குடியேற்ற நாடாக அமைக்கப்பட்டது.
1818 – சிலி தேசம் எசுப்பானியாவிடமிருந்து தனது விடுதலையை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1819 – கண்டிப் போர்கள்: இலங்கையின் கண்டியில் நிலவி வந்த இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.
1832 – கலாபகசுத் தீவுகளை (Galápagos Islands) எக்குவாடோர் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்; சீனாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
1947 – சோவியத் ஒன்றியத்தின் சிக்கோட்-ஆலின் பகுதியில் ஒரு பெரும் இரும்பு விண்வீழ்கல் விழுந்து பள்ளத்தை உருவாக்கியது.
1961 – சோவியத் ஒன்றியம் ‘வெனேரா 1’ விண்கலத்தை வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்திலிருந்து எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற ‘அலறல்’ (The Scream) ஓவியம் திருடப்பட்டது.
2001 – ‘நியர் சூமேக்கர்’ விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கி சாதனை படைத்தது.
2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஹேக் நகரில் தொடங்கின.
2016 – 1054 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சமயப்பிளவிற்குப் பிறகு முதல்முறையாகத் திருத்தந்தை பிரான்சு மற்றும் மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
பிறப்புகள்:
1804 – ஹைன்ரிக் லென்ஸ், ‘லென்ஸ் விதியை’ கண்டறிந்த இயற்பியலாளர்.
1809 – சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உலகிற்குத் தந்த ஆங்கிலேய இயற்கையியலாளர்.
1809 – ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்த அமெரிக்காவின் 16-வது அரசுத்தலைவர்.
1824 – சுவாமி தயானந்த சரசுவதி, ‘ஆரிய சமாசத்தை’ தோற்றுவித்த இந்திய ஆன்மிக குரு.
1922 – உசேன் ஓன், மலேசியாவின் 3-வது பிரதமர்.
1967 – என். ரவிகிரண், தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞர்.
1986 – ஆரி, தமிழகத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்:
1804 – இம்மானுவேல் கண்ட், உலகப் புகழ்பெற்ற செருமானிய மெய்யியலாளர்.
1908 – ஜி. யு. போப் (G.U. Pope), திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற தமிழறிஞர்.
1964 – சாம். அ. சபாபதி, யாழ்ப்பாணத்தின் முதலாவது முதல்வர்.
2009 – முருகதாசன், ஈழத்தமிழர்களுக்காக ஜெனிவாவில் தீக்குளித்து உயிர்நீத்த போராளி.
2013 – சங்கரலிங்கம் ஜெகந்நாதன், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காந்தியவாதி.
சிறப்பு நாள்:
டார்வின் நாள் (Darwin Day).
செங்கை நாள் (Red Hand Day – குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரான நாள்).
ஒன்றிய நாள் (மியான்மர்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா