இன்றைய நாள்: பெப்ரவரி 11 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 11 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 11 (February 11) கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்:

  • கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.

  • 55 – உரோமைப் பேரரசின் பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வழிவகுத்தது.

  • 1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

  • 1640 – இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் (Dutch) கைப்பற்றினர்.

  • 1790 – அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.

  • 1802 – சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் பினாங்கிற்கு (மலேசியா) நாடு கடத்தப்பட்டனர்.

  • 1826 – இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) தொடங்கப்பட்டது.

  • 1856 – அவத் இராச்சியத்தைப் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது; மன்னர் வாஜித் அலி சா நாடு கடத்தப்பட்டார்.

  • 1858 – பிரான்சின் லூர்து நகரில் பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு இடம்பெற்றது.

  • 1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான ‘லாத்தரன் உடன்படிக்கை’ இத்தாலிக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையே எட்டப்பட்டது.

  • 1933 – மகாத்மா காந்தி ‘ஹரிஜன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

  • 1938 – பிபிசி தொலைக்காட்சி உலகின் முதலாவது அறிவியல் புனைவு (Science Fiction) நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

  • 1943 – இரண்டாம் உலகப் போர்: டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாட்டு இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 1971 – பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் 87 நாடுகள் கையெழுத்திட்டன.

  • 1979 – அயத்தொல்லா கொமெய்னி தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.

  • 1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நெல்சன் மண்டேலா விடுதலையானார்.

  • 1996 – குமாரபுரம் படுகொலைகள்: திருகோணமலை குமாரபுரத்தில் இலங்கை இராணுவத்தால் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

  • 1999 – புளூட்டோ கோள் நெப்டியூனின் சுற்றுவட்டத்தைத் தாண்டிச் சென்றது; இது மீண்டும் 228 ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும்.

  • 2011 – எகிப்தியப் புரட்சி காரணமாக ஒசுனி முபாரக் பதவியிலிருந்து விலகினார்.

  • 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தனது பதவியைத் துறப்பதாக வத்திக்கான் அறிவித்தது.

பிறப்புகள்:

  • 1847 – தாமசு ஆல்வா எடிசன், மின்விளக்கைக் கண்டுபிடித்த உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர்.

  • 1865 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி மற்றும் வரலாற்றாளர்.

  • 1904 – எஸ். நடேசன், இலங்கை வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி.

  • 1911 – வ. சுப்பையா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

  • 1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர்.

  • 1924 – வி. வி. வைரமுத்து (நடிகமணி), ஈழத்தின் சிறந்த கூத்து நடிகர்.

  • 1969 – ஜெனிபர் அனிஸ்டன், அமெரிக்க நடிகை.

  • 1992 – டெய்லர் லாட்னர், அமெரிக்க நடிகர்.

இறப்புகள்:

  • 1650 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர் மற்றும் மெய்யியலாளர்.

  • 1946 – மா. சிங்காரவேலர், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி.

  • 1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர்.

  • 1974 – கண்டசாலா, புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்.

  • 1977 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5-வது குடியரசுத் தலைவர்.

  • 2001 – ஜெய்கணேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்.

  • 2010 – ஷாஹித் அஸ்மி, இந்திய மனித உரிமை வழக்கறிஞர்.

  • 2012 – விட்னி ஊசுட்டன், உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாடகி.

  • 2018 – அஸ்மா ஜெகாங்கீர், பாக்கித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

சிறப்பு நாள்:

  • அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்.

  • உலக நோயாளர் நாள் (கத்தோலிக்க திருச்சபை).

  • தேசிய நிறுவன நாள் (யப்பான்).

  • கண்டுபிடிப்பாளர் நாள் (ஐக்கிய அமெரிக்கா).


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!