100+ ஒத்தகருத்து சொற்கள்

வரிசை எண்சொல்ஒத்தகருத்துச் சொற்கள்
1அணிதல்சூடுதல், தரித்தல், புனைதல், புணல், மிலைதல்
2அந்தணர்பிராமணர், பார்ப்பார், பூசுரர், வேதியர், மறையவர்
3அமைச்சர்மந்திரிமார், மந்திரி, சூழ்வோர், நூலோர்
4அம்புகணை, வாணி, சரம், பாணம், அத்திரம், சசீமுகம்
5அரசன்மன்னன், வேந்தன், ஏந்தல், புரவலன், மகிபன், பதி, கோ, நிருபன்
6அரசிஇராணி, தலைவி, இறைவி
7அருள்கருணை, கிருபை, இரக்கம், தயவு, அபயம்
8அழகுவடிவு, வனப்பு, வண்ணம், வண்மை, கோலம், எழில், பொற்பு, கவின், சுந்தரம்
9அழுதல்பொருமல், விம்மல், புலம்பல், கலங்கல், கலுழ்தல், அழுங்கல், இரங்கல், அரற்றல்
10அறிவுஉணர்வு, ஞானம், மதி, உரம், மேதை, புத்தி, விவேகம், ஒளி, ஞாபகம், தீ
11அன்புநேசம், நேயம், பற்று, பரிவு, ஈரம்
12ஆகாயம்வானம், வான், விண், சேண், மாகம், மாதிரம், விசும்பு, அண்டம், அந்தரம், உம்பர்
13ஆசிரியன்ஆசான், குரு, உபாத்தியாயன், தேசிகன், குரவன்
14ஆசைஇச்சை, விருப்பம், வேட்கை, அவா, ஆவல், ஆர்வம், நகை, வாஞ்சை, பற்று, விழைவு
15ஆடுஅசம், கடா, மை, தகர், மேடம், மேழகம், ஓடு, உடு
16ஆபரணம்நகை, அணி, ஆரம், இழை, கலன், கலம், பணி, பூண்
17இடம்கண், விழி, உளி, வலம், பதி, தலம், களம், தளம்
18இடுகாடுகடலை, சுறக்காடு, மயானம், காடு, கபுர், நூறு, புதைகுழி
19இரத்தம்உதிரம், குருதி, கறை, சோரி, புலவு, செந்நீர், உயிர்ப்புனல், செம்பால், புண்ணீர்
20இன்பம்மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம், சந்தோசம்
21ஈகைகொடை, தானம், வண்மை, அளி, உபகாரம்
22உடல்உடம்பு, யாக்கை, குரம்பை, சட்டகம், குதகம், மேனி, பரம், தேகம், மெய், சரீரம்
23உணவுஉண்டி, போசனம், அசனம், ஆகாரம், ஓதனம், வாயாடை, வாயுறை
24உயிர்ஆன்மா, ஆவி, சீவன், அணு, சரீரி
25எருதுஇடபம், நந்தி, பகடு, விடபம், விடை
26ஒட்டகம்ஒட்டை, சோகம், அயவணம், இரவணம், தொறு, கணகதம், மயும்
27ஒலிஅரவம், ஓரை, ஓதை, தொனி, ஆர்ப்பு, கம்பலை, கலி, கடி, குரை, சுருதி
28ஒளிகதிர், காந்தி, சுடர், சோதி, ஒண்மை, ஒள், வில், நகை, எல், எறிப்பு
29கடவுள்இறைவன், இறையோன், ஈசன், பிரான், சர்வேசுவரன், நிமலன், தேவன், அமலன்
30கடல்சமுத்திரம், சாகரம், உவரி, ஓதம், பரவை, புனரி, முந்நீர், அத்தி
31கண்நயணம், நாட்டம், விழி, நோக்கல், நேத்திரம்
32கல்விவித்தை, கலை, கேள்வி, விஞ்ஞை
33களவுதிருட்டு, சோரம், கரவு, கரப்பு, படிறு, கரவடம்
34காக்கைகாகம், வாயுசம், சிகரம்
35காடுகானம், கானகம், வனம், அடவி, ஆரணியம்
36காரணம்ஏது, நிமித்தம், வழி, மூலம்
37காலன்இயமன், கூற்றுவன், மறலி
38கால்கழல், அடி, தாள், பாதம், பதம், சரணம்
39காற்றுவளி, பவனம், தென்றல், உளதை, மாருதம், கால்
40கிளிகிள்ளை, தத்தை, வன்னி, சுசம், அஞ்சுகம், அரி
41கீழ்மக்கள்தீயோர், புல்லர், அற்பர், தீயவர், சிறியர், நீசர், புரியர், அந்தர்
42குணம்இயல்பு, இயல், சீலம், சால்பு, தகை, தன்மை, நீர்மை, பண்பு
43குதிரைபரி, புரவி, துரகம், மா, அசுவம், அயல், பாய்மா, வாவி, அனி, அத்திரம்
44குயில்கோகிலம், மரகாகளம், காணகண்டம், மகரந்தம்
45குழந்தைபிள்ளை, குழவி, சேய், மகவு
46குளிர்ச்சிதண், சீதம், சீதளம், அளி, ஈரம், பனி, நளி, நளிர்
47குறைதல்அல்குதல், அஃகுதல், சுருகுதல், குன்றுதல், தேய்தல், சிறுத்தல்
48குற்றம்பிழை, தப்பு, ஆசு, ஏதம், இழிவு, களங்கம், கறை, குறை, தவறு, பழி, மாசு
49கூட்டம்சபை, அவை, குழாம், சமூகம், சமுதாயம், தொகை, தொகுதி, கோட்டம்
50கூந்தல்குழல், கேசம், கோதை, சுளகம், ஓதி
51கேடயம்கேடகம், மேழகம், மேடம், கடகம், கவசம், பலகை, பரிசை, கிடுகு
52கைம்பெண்விதவை, கைந்தலை
53கொக்குபலாகம், குரண்டகம்
54கொடிதுவசம், பதாகை, படம், நுசில், கோவை, ஈந்து, சென்டா
55கொல்லுதல்கோறல், தெறுதல், செறுத்தல், ஒழித்தல், படுத்தல், தொலைத்தல், மாய்த்தல்
56சங்குவளை, கம்பு, கூனல்
57சத்தியம்ஆணை, சபதம், பிரமாணம், சூழ்
58சந்திரன்மதி, அம்புலி, திங்கள், மதியம், நிலவு, பிறை, சோமன், வெண்கதிர்
59சரசுவதிகலைமகள், நாமகள், பாமகள், இரைமடந்தை, வாணி
60சருக்கரைகன்னல், சட்டி, பாகு
61சாதல்இறத்தல், துஞ்சுதல், பொன்றல், மடிதல், மாய்தல், மாளல்
62சிங்கம்அரி, ஆளி, கேசரி, கோளரி, சீயம், மிருகேந்திரன்
63சிரிப்புமுறுவல், மூரல், நகைப்பு, இளிப்பு, ஆர்ப்பு
64சினம்கோபம், சீற்றம், செற்றம், முனிவு, கதம், வெகுளி, குரோதம்
65சிநேகம்நட்பு, கேண்மை, நேயம், மித்திரம், தொடர்
66சுத்தம்தூய்மை, புனிதம், வால், சுசி
67சுவர்கக்கரம்சொர்க்கம், சொக்கம், துறக்கம்
68சூரியன்அருக்கம், ஆதவன், ஆதித்தன், வெய்யோன், இரவி, எல், தினகரன், கதிரவன்
69செல்வம்தனம், திரு, நிதி
70சொல்கிளவி, வாக்கு, கூற்று, மொழி, மாற்றம்
71சொல்லுதல்உரைத்தல், மொழிதல், விளம்புதல்
72சோலைபொழில், கா, கானம், தண்டலை
73சோறுஅன்னம், அமுது, அடிசில், சாதம், புற்கை, போனகம், பருக்கை
74ஞானம்அறிவு, ஆற்றல், போதம், உரம், விந்தை, தீ, ஞாபகம்
75தடாகம்குளம், தடம், வாவி, ஏரி, பொய்கை, கயம்
76தந்தைஅப்பன், அத்தன், தகப்பன், பிதா, தாதா, தாதை
77தமையன்அண்ணன், முன்னவன், மூத்தோன்
78தம்பிஇளவல், பின்னவன், இளையோன், பின்னோன்
79தரித்திரம்வறுமை, மிடி, நல்குரவு, இலம்பாடு, இரப்பு
80தலைசென்னி, சிரம், சிரசு, முடி
81தாமரைகஞ்சம், கமலம், அம்புயம், அரவிந்தம், பதுமம், பங்கயம், முனரி
82தாய்அன்னை, மாதா, மா, யாய், ஞாய், தம்மோய், அத்தை
83திருடர்கள்ளர், கள்வர், சோரர்
84துதித்தல்புகழ்தல், போற்றல், வழுத்தல், வியத்தல், ஏத்தல், பரவல்
85துன்பம்அல்லல், இடர், இன்னல், இன்னா, இடுக்கண், துயர், வேதனை
86தேன்மது, மட்டு, கள், கனி, நறவு, தேறல்
87தோழன்நண்பன், சிநேகன், பாங்கன், துணைவன், கேளவன், சகாயன்
88தோழிசேடி, சிநேகிதி, சகி, துணைவி, பாங்கி
89நரிசம்புகன், செந்து
90நன்மைநயம், நலம், உறுதி, விழுப்பம், விழுமம்
91நாய்ஞானி, குக்கல், உச்சி, சுனகன், ஞமலி, முருகல், மூடுவல்
92நாள்பகல், வைகல், தினம், எல்
93நித்திரைஉறக்கம், கண்படை, துஞ்சல், துயில், அனத்தல், சயனம்
94நீர்தண்ணீர், அப்பு, சலம், புனல், சிந்து, நீர்த்தம்
95நீதிநீதம், நியாயம், நடு, நெறி, தருமம்
96நூல்ஏடு, புத்தகம், பனுவல்
97நெருப்புதீ, அக்கினி, அங்கி, வாணம்
98நெல்யவன், வல்சி
99நெற்றிநுதல், இலாபம், அலீகம், பலம்
100பகைவன்ஒட்டார், ஒல்லார், ஒன்னார், அண்ணார், செறுவர், மாற்றலர்
101படுக்கைஅமளி, சயனம், சேக்கை, கண்படை, கிடக்கை, உறையுள்
102படைசேனை, தானை, தண்டு, தண்டம்
103பல்எயிறு, தந்தம், தசனம், முரல்
104பல்லக்குசிவிகை, தண்டிகை, தண்டு
105பல்லிகௌளி
106பாட்டுகவி, கவிதை, செய்யுள், தூக்கு, தொடர்பு, யாப்பு, பா
107பாம்புகடு, அரவு, அரவம், உரகம், கட்செவி, சர்ப்பம், கோள், பணி
108பாயிரம்அணிந்துரை, தந்துரை, புறவுரை, பதிகம், முகவுரை, நூன்முகம்
109பிரமன்திசைமுகன், நான்முகன், அயன் மலரோன்
110பிறப்புசென்மம், சனனம், சனிப்பு, உற்பவம், உற்பத்தி
111புகழ்கீர்த்தி, சீர்த்தி, இசை, ஒளி, மேம்பாடு, மீச் கூற்று
112புசித்தல்அயிறல், தின்னல், சுவைத்தல், அருந்தல், உண்ணல், துய்த்தல்
113புணர்தல்கலத்தல், புல்லல், கூடல், சங்கமித்தல், சம்போகித்தல்
114புலவர்தொகை, கவி, கவிஞன், பாடகன்
115புலிவேங்கை, வரி, வயமா, உழுவை, சித்திரகாயம், வல்லியம்
116புழுதிதூசி, துகள், தூளி, பூழி, பொடி
117பூமலர், புட்டம், தார், தாமம், போது, வீ
118பூமிபூ, புவி, புவனம், பொறை, தரணி, ஞாலம், காசினி, அகிலம்
119பூனைபில்லி, பூசை, எலிப்பகை
120பெண்மகடூஉ, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பாவை, பூவை
121பெருமைதகை, தகைமை, மாட்சி, மாண்பு, விரல், வீறு
122பொக்கிசம்களஞ்சியம், கஸானா, கருவூலம், பண்டாரம்
123பொய்தப்பு, படிறு, இழுக்கு
124பொழுதுகாலை, கால், வேலை, போது, போந்து, பருவம், பாணி
125பொன்சொர்ணம், சுவர்ணம், சுவனம், கனகம், கனம், காசு, தேசு, பொலம்
126போர்அமர், சமர், யுத்தம், செரு, மலைவு, இகல்
127மகள்குமரி, குார்த்தி, புத்தி, புதல்வி, தனையை
128மகன்குமரன், குமாரன், புத்திரன், மதலை, புதல்வன்
129மதில்அரண், சூரை, சூரல், நொச்சி, புரிசை, இஞ்சி
130மயக்கம்பித்தம், பிரமை, மயல், மருள், மைந்து, மோகம், அயர்வு
131மயில்மாயூரம், ஓகரம், சிகண்டி, பணிமுகம், மயூரன், மஞ்சை, தோகை
132மலைகிரி, குன்று, சிலம்பு, அசலம், நகம், குத்திரம், பொருப்பு, வரை
133மனம்உளம், உள்ளம், உள், அகம், நெஞ்சு, சித்தம், சிந்தை
134மனிதர்ஆடவர், நரர், மண்ணோர், மக்கள், மாக்கள், மானிடர், மாந்தர்
135மான்புல்வாய், கலை, இரலை, ஏணம், நவ்வி, உழை
136மாலைஅணி, அலங்கல், ஆரம், தொடை, தெரியல், மஞ்சரி, கண்ணி
137மிகுதிசால, உறு, தவ, நனி, கழி, கூர், அதிகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!