நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் எவ்வளவு? பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட அதிரடி விபரங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் எவ்வளவு? பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட அதிரடி விபரங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இன்று (19 பெப்ரவரி 2026) நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களைப் பட்டியலிட்டார்.

எம்.பி-க்களின் மாதாந்தக் கொடுப்பனவு விபரங்கள்:

  • அடிப்படை கொடுப்பனவு: 54,285 ரூபா.

  • அலுவலகக் கொடுப்பனவு: 1,00,000 ரூபா.

  • தொலைபேசிக் கொடுப்பனவு: 50,000 ரூபா.

  • போக்குவரத்துக் கொடுப்பனவு: 15,000 ரூபா.

  • சாரதிக் கொடுப்பனவு: 3,500 ரூபா (அமைச்சின் ஊடாக சாரதி வழங்கப்படாத பட்சத்தில்).

  • உபசரிப்புக் கொடுப்பனவு: 1,000 ரூபா.

கூட்டங்களுக்கான விசேட கொடுப்பனவுகள்: நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு தலா 2,500 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்கும் இதே தொகை வழங்கப்படும்.

எரிபொருள் கொடுப்பனவு (Fuel Allowance): ஒவ்வொரு உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி நிலவும் சந்தை விலைக்கு அமைய இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் செலவீனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!