இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (01)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (01)

  1. இலங்கையில் தற்போது காணப்படும் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
    11,095 (2021 தரவுகளின்படி)

  2. இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை யாது?
    10,152 (2021)

  3. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்ய ஒளிபரப்பப்பட்ட கல்விச் சேவை எது?
    குருகுலம்

  4. இலங்கையில் எந்த ஆண்டில் கட்டாயக் கல்விச் சட்டம் அமுலுக்கு வந்தது?
    1998

  5. கட்டாயக் கல்விச் சட்டம் எந்த ஆண்டில் சட்டமூலமாக்கப்பட்டது?
    1997 (1003/05)

  6. இலங்கையின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
    25

  7. இலங்கையின் கலைத்திட்டச் செயல்பாடுகளுக்குப் பங்களிப்பு வழங்கும் சர்வதேச அமைப்பு எது?
    உலக வங்கி

  8. இரண்டாம் நிலைக் கல்வித் துறை மேம்பாட்டுத் திட்டம் (SESIP):

  • நிதியுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)

  • மதிப்பீடு: 400 மில்லியன் அமெரிக்க டொலர் (கடன்)

  • காலம்: 2020-2026

  1. பொதுக் கல்வி நவீனமயமாக்கல் செயற்றிட்டம் (GEMP):

  • நிதியுதவி: உலக வங்கி

  • மதிப்பீடு: 100 மில்லியன் அமெரிக்க டொலர்

  • காலம்: 2019 – 2023

  1. தொழில் நுட்பக் கல்வி வளர்ச்சிக்கான திட்டம்:

  • நிதியுதவி: சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதியம் (OFID)

  • மதிப்பீடு: 60.7 மில்லியன் அமெரிக்க டொலர்

  • காலம்: 2018 – 2022

  1. தொழில்நுட்பப் பாடத்திற்கான பிரத்யேக தேசிய கல்வியியற் கல்லூரியை அமைத்தல்:

  • நிதியுதவி: கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (KOICA)

  • மதிப்பீடு: 14.95 மில்லியன் அமெரிக்க டொலர்

  • காலம்: 2015 – 2025

  1. கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைக் கல்வித் தரத்தை உயர்த்தும் திட்டம்:

  • நிதியுதவி: கொய்கா (KOICA)

  • மதிப்பீடு: 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்

  • காலம்: 2018-2022

  1. இரண்டாம் நிலைக் கல்விக்காக தகவல் தொழில்நுட்ப மையங்களை (ICT Hubs) உருவாக்குதல்:

  • நிதியுதவி: கொரிய எக்சிம் வங்கி (Korean Exim Bank)

  • மதிப்பீடு: 5706 மில்லியன் ரூபா

  • காலம்: 2019-2021

  1. விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வியை வலுப்படுத்தும் செயற்றிட்டம்:

  • நிதியுதவி: ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA)

  • மதிப்பீடு: 435 மில்லியன்

  • காலம்: 2019 – 2022

  1. தோட்டப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்:

  • நிதியுதவி: இந்திய அரசு

  • மதிப்பீடு: 345 மில்லியன் ரூபா

  • காலம்: 2020 – 2023

  1. இலங்கையில் இயங்கி வரும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை யாது?
    19

  2. இலங்கையில் முதன்முதலில் தாபிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?
    மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி

  3. இலங்கையின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
    C.W.W. கண்ணங்கர

  4. கல்வி அமைச்சராக C.W.W. கண்ணங்கர அவர்கள் பதவி வகித்த காலப்பகுதி எது?
    1931 – 1947

  5. சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதல் கல்வி அமைச்சர் யார்?
    E.A. நுகேவெல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!