ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா - விடைகள் (2026) - 05
- ஒருவர் மற்றொருவரின் தனிப்பட்ட விடயங்கள் சார்பாக செயற்படுவதற்கு அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எழுத்து மூலமாக வழங்கப்படுகின்ற சட்டரீதியான அதிகாரம்?
விடை: அட்டோனி தத்துவப்பத்திரம் (Power of Attorney)
- இலங்கையில் Jury trial முறையிலான விசாரணையினை அறிமுகப்படுத்திய பிரித்தானிய ஆளுநர் யார்?
விடை: Thomas Maitland – 1811
- Trial at Bar விசாரணையில் எத்தனை நீதிபதிகள் காணப்படுவர்?
விடை: 3 நீதிபதிகள்
- இலங்கையில் மரண தண்டனை வழங்குவதற்கு நியாயாதிதிக்கமுடைய நீதிமன்றம் எது?
விடை: மேல் நீதிமன்றம் (High Court)
- அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் எந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படல் வேண்டும்?
விடை: உயர நீதிமன்றம் (Supreme Court)
- இலங்கையின் நீதிமன்ற நடைமுறைத்தொகுதி எவ்வகையானது?
விடை:
விரோத / மாற்றான் முறைமை (Adversarial System)
- இலங்கையின் பொதுச்சட்டமாக அறியப்படுகின்ற சட்டம் எது?
விடை: உரோமன் டச்சு சட்டம்
- சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் யார்?
அவர் எந்நாட்டவர்?
விடை: யுஜி இவ்சவா – ஜப்பான்
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது எத்தனை உறுப்பு நாடுகள் காணப்படுகின்றன? இறுதியாக இணைந்து கொண்ட நாடு?விடை:
125வது நாடு – உக்ரைன்
- ரஷ்யா நாட்டின் பாராளுமன்றம் எப்பெயரினால் அழைக்கப்படுகிறது?
விடை: டுமா (Duma)
- இலங்கையில் இலவசக்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு யாது?
விடை: 1945 – C.W.W. Kannangara அவர்களால்.
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்ட வருடம்?
விடை: 1980
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான கருத்திட்டத்தினை முன்வைத்த முன்னோடி யார்?
விடை: Dr. Nissanka Wijeratna
- இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: Upali Mampitiya (6வது வேந்தர்)
- மகாத்மா காந்தியினை சுட்டுக்கொலை செய்தவரின் பெயர்?
விடை: Nathuram Godse