ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 04

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா - விடைகள் (2026) - 04

  1. வினா: இவ்வருடம் இலங்கை கடற்படையானது ஸ்தாபிக்கப்பட்டு எத்தனையாவது ஆண்டினை பூர்த்தி செய்தது?
    விடை: 75 வருடங்கள் (1950 இல் ஸ்தாபிக்கப்பட்டது)

  2. வினா: இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த விமானி யார்?
    விடை: Wing Commander – Nirmal Siyambalapitiya (லுனுவில, வென்னப்புவ பகுதியில் விபத்துக்குள்ளானது)

  3. வினா: அண்மையில் இந்திய உயர்நீதிமன்றத்தின் (Supreme Court of India) தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டவர் யார்?
    விடை: Surya Kanth – 53வது தலைமை நீதியரசர்

  4. மரணச்சொத்து தொடர்பான வழக்குகள் எந்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன?
    விடை: மாவட்ட நீதிமன்றம்

  5. இறுதி விருப்பாவணமொன்று (Will) அற்ற நிலையில் மரணிப்பவரின் மரணச் சொத்துக்களுக்குப் பொறுப்பாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்படுபவர் யார்?
    விடை: நிர்வாகி (Administrator)

  6. இலங்கையில் இறைமையானது யாரிடம் உள்ளது?
    விடை: மக்களிடம்

  7. இறைமை தொடர்பான கோட்பாட்டினை முதன் முதலாக முன்வைத்தவர் யார்?
    விடை: Jean Bodin

  8. 2025 இல் உலகில் அதிக சனத்தொகை கொண்ட நகரமாக மாறியுள்ள நகரம் எது?
    விடை: Tokyo, Japan

  9. தற்போது உலகில் அதிகமானோரால் பேசப்படுகின்ற மொழி யாது?
    விடை: English

  10. 16 வயதுக்கு குறைந்தோருக்கு சமூக ஊடகப் பாவனையினை முற்று முழுதாக தடை செய்த உலகின் முதல் நாடு எது?
    விடை: Australia

  11. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?
    விடை: December 09

  12. 2025 சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் யாது?
    விடை: Human Rights; Our Everyday Essentials (டிசம்பர் 10)

  13. கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி பேரவையின் தலைவர் யார்?விடை: பிரதம நீதியரசர் (Chief Justice)

  14. மாகாணசபை ஒன்றினால் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் எப்பெயரினால் அறியப்படுகின்றன?
    விடை: நியதிச்சட்டங்கள் (Statutes)

  15. இலங்கையில் மாகாணசபை முறைமையினை அறிமுகப்படுத்திய யாப்பு சீர்திருத்தம் எது?
    விடை: 13வது திருத்தம் – 1987

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!