B.Ed (Hons) in Primary Education – நுழைவுப் பரீட்சை (2024) இல் கேற்கப்பட்ட வினா விடைகள்

B.Ed (Hons) in Primary Education – நுழைவுப் பரீட்சை (2024) இல் கேற்கப்பட்ட வினா விடைகள்

 

  1. இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி தலைவி?
    சமரி அத்தபத்து (Chamari Athapaththu).

  2. திறந்த பல்கலைக்கழகம் எவ்வாண்டு தனது வெள்ளி விழாவை கொண்டாடியது?
    2005 ஆம் ஆண்டு. (இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது).

  3. இலங்கையின் மிக உயரமான புகையிரத நிலையம் அமைந்துள்ள இடம்?
    பட்டிப்பொல (Pattipola).

  4. இலங்கைக்குரிய தொலைபேசி எண் குறியீடு?
    +94.

  5. செயற்கை நுண்ணறிவின் தந்தை யார்?
    ஜோன் மெக்கார்த்தி (John McCarthy).

  6. இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசியக் கொடி வெளியிடப்பட்ட ஆண்டு?
    1972-ஆம் ஆண்டு (தற்போதைய வடிவம் 22 மே 1972 இல் அங்கீகரிக்கப்பட்டது).

  7. STEM கல்வி முறை குறிக்கும் பொருள் என்ன?
    Science, Technology, Engineering and Mathematics
    (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்).

  8. இலங்கையில் அதிக பரப்பளவை கொண்ட மாகாணம் எது?
    வட மத்திய மாகாணம் (North Central Province).

  9. மாலை வேளையில் வானவில் தோன்றும் திசை எது?
    கிழக்கு திசை. (சூரியன் மேற்கு திசையில் இருப்பதால்).

  10. SAARC நாடுகளின் அமைப்பில் பின்னர் இணைந்த நாடு எது?
    ஆப்கானிஸ்தான் (2007 இல் இணைந்தது).

  11. இலங்கையின் தேசிய மரம் எது?
    நா மரம் (Na Tree).

  12. இலவசக் கல்வியின் தந்தை யார்?
    C.W.W. கன்னங்கரா.

  13. தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
    29 உறுப்பினர்கள்.

  14. ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு அனுசரணை வழங்கும் நிறுவனம் எது?
    UNESCO. (ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் UNICEF முக்கிய பங்காற்றுகிறது).

  15. ஒல்லாந்தர் இலங்கையை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
    சுமார் 140 ஆண்டுகள் (1658 – 1796).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!