கற்றல் கொள்கைகள்

கற்றல் கொள்கைகள்

1. கற்றல் என்றால் என்ன?

கற்றல் என்பது ஒருவரின் அனுபவம், சூழல் மற்றும் உள செயல்முறைகளின் தாக்கத்தால் ஏற்படும் நிலையான நடத்தை மாற்றமாகும்.

நடத்தைவாதக் கோணம்:
தூண்டுதல் மற்றும் பதில் செயல் (Stimulus – Response) இடையேயான தொடர்பின் மூலம் நடத்தை மாற்றம் ஏற்படுவது கற்றலாக கருதப்படுகிறது.
முக்கிய அறிஞர்கள்: ஸ்கின்னர், பவ்லோவ், தோர்ன்டைக்.

அறிகைவாதக் கோணம்:
மன செயல்முறைகள், சிந்தனை மற்றும் புரிதல் மூலம் கற்றல் நடைபெறும்.
முக்கிய அறிஞர்கள்: கொஹ்லர், கொஃப்கா, வெர்தைமர், கானே.

மனிதநேயக் கோணம்:
உள்ளார்ந்த தேவைகள், தனி நபர் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைவதுடன் கற்றல் தொடர்புடையது.
முக்கிய அறிஞர்கள்: கார்ல் ரோஜர்ஸ், ஏப்ரஹாம் மாஸ்லோ.

கட்டுருவாக்கக் கோணம்:
புதிய அனுபவங்கள் பழைய அறிவுடன் இணைந்து புதிய அறிவை உருவாக்கும் செயன்முறை கற்றலாகும்.
முக்கிய அறிஞர்கள்: புரூனர், ஜான் டூயி, விகோத்ஸ்கி.

2. கற்றலை பாதிக்கும் காரணிகள்

  • பரம்பரை காரணிகள்

  • முதிர்ச்சி நிலை

  • சூழல் காரணிகள்

3. முக்கிய கற்றல் கொள்கைகள்

  • நடத்தைவாதக் கற்றல் கொள்கை

  • அறிகைவாதக் கற்றல் கொள்கை

  • கட்டுருவாக்கக் கற்றல் கொள்கை

  • மனிதநேயக் கற்றல் கொள்கை

  • சமூகக் கற்றல் கொள்கை

4. நடத்தைவாதக் கொள்கையை முன்வைத்த அறிஞர்கள்

  • தோர்ன்டைக்

  • ஸ்கின்னர்

  • பவ்லோவ்

  • கர்ட் லெவின்

5. அறிகைவாதக் கொள்கை அறிஞர்கள்

  • கொஹ்லர்

  • கொஃப்கா

  • வெர்தைமர்

6. கட்டுருவாக்கக் கொள்கை அறிஞர்கள்

  • புரூனர்

  • விகோத்ஸ்கி

  • டூயி


7. தோர்ன்டைக் கற்றல் விதிகள்

  • ஆயத்த விதி (Law of Readiness)

  • பயிற்சி விதி (Law of Exercise)

  • விளைவு விதி (Law of Effect)

8. ஆயத்த விதி – வகுப்பறை பயன்பாடு

மாணவர் கற்றலுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாரான பின் கற்பித்தல் ஆரம்பிக்க வேண்டும்.

9. பயிற்சி விதி – வகுப்பறை பயன்பாடு

  • தொடர்ந்து பயிற்சி வாய்ப்புகள் வழங்குதல்

  • மீளாய்வு மூலம் நினைவாற்றல் வளர்த்தல்

10. விளைவு விதி – வகுப்பறை பயன்பாடு

  • நல்ல விளைவுகளை காட்டும் கற்றல் அனுபவங்கள் வழங்குதல்

  • நேர்மறை கற்றல் சூழல் உருவாக்குதல்

11. பழைய நிபந்தனைப்பாடு (Classical Conditioning)

  • தூண்டி பொதுமைப்படுத்தல்

  • தூண்டி நிபந்தனைப்படுத்தல்

  • தூண்டி வேறுபடுத்தல்

பவ்லோவ் நாய்களில் உமிழ்நீர் சுரத்தல் தொடர்பான பரிசோதனை மூலம் இந்த கொள்கையை விளக்கினார்.

12. வகுப்பறை பயன்பாடு – பழைய நிபந்தனைப்பாடு

  • வகுப்பறையை மகிழ்ச்சிகரமான சூழலாக்குதல்

  • கற்றலை நேர்மறை அனுபவங்களுடன் இணைத்தல்

  • எதிர்மறை உணர்வுகளை தவிர்த்தல்

  • நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்குதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!