ஒரு வானவில் போலே 34

ஒரு வானவில் போலே - 34

தொடர்கதை பாகம் 34

“கதிர்! தாஜ்மஹாலுக்கு ஒரு தடவை போகனும்னு சொன்னேன்…. ஆனா இப்ப பிடிக்கல”

என்று என் மார்பில் சாய்ந்தவாறு ஒரு தடவை அஜந்தா சொன்னாள்……!

“ஏன் கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், செல்வச்சந்நிதி, நல்லூர், மடு மாதா, தலதாமாளிகை… என ஒரு ஆன்மீக சுற்று போகலாம்”

என்ற என்னை செல்லமாக கில்லிவிட்டு…

“தாஜ்மஹால் ஒரு தூய்மையான காதலுக்கு அடையாளமில்லை”

என்றாள்! காதலர்களின் அடையாள கோட்பாட்டையே கேள்விக்குட்படுத்திய ஒரு முடிவை சர்வ சாதாரணமாக அவள் சொல்லவும்…..

“How? Confused talk! Dear…”

“Nothing Confused சாஜகானுக்கு ஒரே Wife மும்தாஜா? அல்லது மும்தாஜுக்கு ஒரே Husband சாஜஹானா?”

என்று அவள் கூறவும் நான் Confused ஆகிவிட்டேன்! அவள் தொடர்ந்தாள்….

“பல பேரோட ஏக்கம் கலந்து ஒருத்திக்கு தன் அன்பை காட்டுவது, எந்தவகையில் காதலின் அடையாளம்?”

என்றவளின் நியாயம் கண்டு திகைத்து நின்றேன்! அவளே தொடர்ந்தாள்….

“Practically இதை எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் sincerity love னு பார்க்கிறப்ப பிடிக்கல கதிர்! நான் இந்த விசயத்தில சுயநலவாதிதான். என்னோடது எப்பவும் எனக்காகவே இருக்கனும்” 

என்றுவிட்டு என்னை இறுக அணைத்துக் கொண்டாள்….. ஏனோ இடையில் இந்த சம்பவம் ஞாபகத்தில் வர இட சூழ்நிலை மறந்துவிட்டேன்.

“எங்க வீட்டு மாப்பிள்ளைய ஒரு நேர சாப்பாட்ட கூட ஒழுங்கா குடுக்காம கதைச்சிட்டு இருக்கிறியல்! கதிர்! நீ வாடா எனக்கு பசிக்குது” 

என தமயந்தி அக்கா கூறவும் அஜந்தாவின்  சம்பவத்தை இறுதி வரை கேட்கும் ஆர்வத்திலிருந்த எனக்கு என்னவோ போலிருந்திச்சு. ஆனால் இந்த சொந்தங்களின் ஆதரவையும் உறவையும் அஜந்தாவின் நினைவுகளோடு சுமக்க நினைக்கும் புதிய கதிராக….

“சரி அக்கா….”

என்றேன். தமயந்தி அக்கா கண் இமையை உயர்த்தி கயல்விழியை பார்க்க அவள் அந்த trademark உதட்டோர சிரிப்பை காட்டி அஜந்தாவை நினைவூட்டினாள். எதற்காக இந்த புன்னகை? எனக்கு புரியவில்லை!

“ரகசியமா கல்யாணம் பண்ணும் போது எங்களையெல்லாம் நினைச்சு பார்க்கலையா கதிர்?”

என்ற தமயந்தி அக்காவை பார்த்து புன்னகைத்தேன். 

“சரியோ தவறோ அவளுக்காக பிடிச்சிருந்திச்சு… அவளோட விருப்பங்கள் வாழனம்னு நினைச்சேன்…. ஆனால் யாரையும் வெறுக்கனும்னோ மறுக்கனும்னோ அதை செய்யல… மற்றும்படி சொல்றதுக்கு எந்த காரணமும் என்கிட்ட நிச்சயமா இல்லை!”

என நான் சொன்னதும்….

“கதிர்! அவக்கு பேய்பிடிச்ச நேரத்தில இருந்து இப்படியான கேள்விகள தான் கேட்பா! நீ இதையெல்லாம் யோசிக்காம சாப்பிடு இன்னும் ரெண்டு மூன்டு நாளைக்கு இதையெல்லாம் நீயும் தாங்கி கொள்ள வேணும்” 

என குணசேகரன் அண்ணா சொல்ல கொஞ்சம் சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை. 

Lunch முடிஞ்சதும் என்னோட room க்கு கொஞ்சம் போய் rest எடுக்கனும் போல இருந்திச்சு. அதற்காக சென்ற எனக்கருகில் வந்த கயல்விழி….

“அப்பா ஒரு சின்ன உதவி… இன்னைக்கு பின்னேரம் நாங்க ஒரு பயணம் போகனும்… அதாவது ஒவ்வொரு வருசமும் இந்த நாளில் எதாவது ஒரு நல்ல காரியத்தை எனக்கு தெரிஞ்சதுல இருந்து செய்து வருகிறேன். இந்த தடவையில இருந்து உங்க கையால செய்யனும்னு வேண்டுதல்” 

என கூறியவாறு எனது முகத்தை பார்த்தாள்…..சரியென தலையசைத்து விட்டு எந்த நாளென யோசித்தேன். காலம் திகதி நாள் எல்லாத்தையும் Job க்காக மட்டுமே வரையறுத்து பல வருடங்கள் கடந்துவிட்டது. அங்கிருந்த Calendar னை பார்த்தேன் ஊஹும் எதுவும் பிடிபடவில்லை! ஆனால் கேட்க வேண்டுமென தோன்றவுமில்லை.

“நாளைக்கு உங்க கல்யாண நாளப்பா!”

என அவளே சொல்லவும் அதிர்ச்சியாக இருந்திச்சு. கவலையை மறுபடி தூண்டிச்சு. 

 

அன்று மாலை ஒரு குறித்த கோயிலில் பூஜையை முடித்துவிட்டு ஒரு இரவு பயணத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றாள்.

“அப்பா அடிக்கடி இங்க வருவேன். மலேசியாவுல இருந்தாலும் இந்த விடுதிக்கு வாரதில மன நிம்மதி. அம்மாட பெயரில கட்டியது”

என அவள் சொன்னதும் அவளைப்பற்றி ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திச்சு. மெதுவாக கையை உயர்த்தி அவள் தலையை அன்புடன் வருடிவிட்டேன். திரும்பவும் மறுபடி புறப்பட்டு பங்களாவுக்கு வந்த போது அது மிக அவசரமாக அலங்கரிக்கப்பட்டிருந்திச்சு! ஏன் என புரியவில்லை!

“இன்னைக்கு உங்க திருமண நாளில ஒரு திருமணத்தை உங்க கையாள பகிரங்கமா நடத்தி வைக்கிறதா வேண்டுதல்”

என்றவளை விநோதமாக பார்த்தேன்!

“எல்லாம் தயார் மாப்பிள்ளை தான் தயாராகனும்” 

என்ற தர்சன் என்னிடம் ஒரு புதிய வேட்டி சட்டையை தந்து….

“போய் அவசரமா உடுத்திட்டு வா”

என்றதும்…. எதுவும் புரியவில்லை எனக்கு!

அப்போது.. 

“எல்லாம் உனக்கு நல்லா தெரிஞ்சவங்க தான்…. அப்படியே அவசரமா பொண்ணும் மாப்பிளையும் தெரியனும்னா உன்னோட room க்கு போய் ready ஆகிட்டு வா”

என குணசேகரன் அண்ணா கூற எதுவும் புரியாமல் room க்கு போய் கதவில் கை வைத்ததும் கதவு திறந்திச்சு! அங்கு செல்வி நின்றாள்! நான்

“நீ எப்படி இங்க!?” என்றதும்

“ஏன் வரக்கூடாதா?”

என்ற அதே குரல்!!!!!! அது என் அஜந்தாவின் மறக்க முடியாத குரல்!!!!!!

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!