ஒரு வானவில் போலே - 27
தொடர்கதை பாகம் 27
அந்த mail message கொஞ்சம் அதிகமாவே என்னை உசாராக்கிச்சு! அந்த நிகழ்வு எனக்கும் அஜந்தாவும் இடையில் மட்டுமே நடந்தவை! தங்கை செல்வி சம்பவங்களை அறிந்திருந்தாலும் உள்ரங்க விவகாரங்கள் தெரிய வாய்ப்பில்லை. நானும் யாரிடமும் சொல்லவில்லை….. அப்படியானால் அஜந்தா இதுபற்றி யாரிடமாவது சொல்லி, அப்படி தெரிந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை தொடர்பு கொள்ளவோ, எதற்கோ பயன்படுத்தவோ நினைக்கிறாங்க! யார்? என்ன காரணம்? அப்படியும் இல்லையென்றால் அஜந்தாவே நேரடியாக சம்பத்தப்பட்டிருக்க வேண்டும்! அதுதான் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி ஆனால் நேரடியாக என்னை அவள் தொடர்பு கொள்ள எந்த தடைகளும் இல்லையே! அதனால் ஏதோ நடக்கிறது! என தோன்றிச்சு….. இந்த வேலைக்காக யாரோ அருகில் இருக்கிறார்கள்….இந்த மதுபாசினியை கொஞ்சம் நெருக்கமாக கண்காணிக்க சொல்லியது மனது.
அவளுக்கு தெரியாமல் அவளது board ஆகியிருக்கும் இடத்துக்கு போனேன். அதுவும் ஒரு சராசரியான factory ladies hostel என்பதால் சாதாரணமாக இருந்திச்சு. Company நடவடிக்கைகள் எதிலும் சந்தேகப்படும்படி எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஒரு இடத்தில் சந்தேகத்தை தூண்டும் நிகழ்வு நடந்திச்சு! இந்த Company ல் அவளுடன் staff’s சிலர் குறிப்பாக personal department senior staff’s சிலர் பழகும் விதம் MoreMore respect கொடுப்பது போல இருந்திச்சு! ஒரு junior staff இடம்…. இந்த மரியாதை அவசியமற்றது. அதுவும் எனக்கு முன் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை! இதை இரகசியமாக அவதானித்தே கண்டுபிடித்தேன். One and only point of doubt. வேலையை resign பண்ணுவதற்கு தீர்மானித்த நாளை பிற்போட்டேன். என்னை சுற்றி ஏதோ drama design பண்ணப்பட்டிருக்கிறது உறுதியாச்சு! so மதுபாசினியின் personal file கூட ஒரு Fake ஆக இருக்க வாய்ப்பு அதிகம். இந்த நாடகத்தின் முடிவிடத்தில் அஜந்தா என்னிடம் சொல்லாமல் விட்டுப்போன கதை இருக்கிறது! அதே போல அவளுக்கு என்ன நடந்தது என்பதற்கான காரணமும் இருக்கிறது! என உறுதியாச்சு.
‘who are you? In what sense did you send it for what?’ என அந்த mail க்கு reply அனுப்பிவிட்டு காத்திருந்தேன். ஒரு நாளாகியும் பதில் வரவில்லை. ஒரு நாளின் பின்….
‘தாஜ்மஹாலை கட்டமுடியாத
Civil engineer அவர்களே! பொறுமை!!!
நினைவுகளின் கண்ணீரால்
காலத்தை கடந்தும்
சமாந்திரக் கோடுகளின்
பாலத்தை நீ சரிசெய்திருப்பதால்…
காதலின் உயிருள்ள பரிசு
என்னிடமிருந்து உனக்காக
வெகு சீக்கிரத்தில்
நிச்சயம் காத்திருக்கிறது!
என தமிழிலே முன்பு போலவே பதில் வந்திச்சு! இது எனக்கும் அஜந்தாவுக்கும் இடையில் அந்த வசந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு படுத்தியது. இருவரும் ஒரு நாள் முழு நிலவை இரசித்துக் கொண்டிருந்தோம். அருகே மெல்லிய சலசலப்போடு ஒரு நீரோடை…. அதன் அணைக்கட்டில் அமர்ந்திருந்தோம்.
முழு நிலவா என்னவளின் முக அழகா? என ஆராய்ந்தேன். மிக அருகிலிருந்து தாக்கிய அவளின் சுவாசக்காற்றின் சூடு அந்த மென்குளிரை விரட்டிய பொழுதில்…..
“கதிர்! தாஜ்மஹாலுக்கு போய் அங்கிருக்கிற நீர்த்தடாகத்துக்கு அருகில இருந்து இது போல நிலவை ரசிக்கனும்”
என்றுவிட்டு அதே தோரணை மாறாமல்….
“நீ எனக்காக தாஜ்மஹால் கட்டுவாயா?”
என்றவளிடம்….
“Sorry dear! நான் civil engineer இல்லை textile engineer! but I can make a wonderful dress for you”
என கூறிவிட்டேன். மெலிதான பொய் கோபத்தோடு என் கழுத்தை கடித்துவிட்டு சிரித்தாள் என்னவள்! ஆனால் இதெல்லாம் தெரியுமென்றால் மறுபக்கம் இருப்பது அஜந்தா தவிர வேறில்லை! என்று அடித்து சொன்னது என் ஆழ்மனது!
“Sir… today director board meeting in….I sent the new planning schedule”
என மதுபாசினி சொல்ல…. Laptop லிருந்து அதற்காக வந்திருந்த mail னை திறந்து பார்த்துக்கொண்டு வந்தேன். எல்லாம் சரியாக இருந்திச்சு. சரியென தலையாட்டிவாறு…..
“Ok Mathu…”
என சொன்ன போதுதான் director board member ஒருவரின் பெயர் கண்ணில் பட்டிச்சு…. அது ஆறுமுகம் குணசேகரன்! இது தமயந்தி அக்காவின் கணவனான குணசேகரன் அண்ணாவாக இருக்குமா என சந்தேகம் கிழம்பியது!
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்