ஒரு வானவில் போலே 26

ஒரு வானவில் போலே - 26

தொடர்கதை பாகம் 26

சகல விபரங்களையும் மதுபாசினியிடம் சொல்லிவிட்டேன். குறிப்பாக அவளை கண்டதும் ஏற்பட்ட குழப்பம் இப்படி எல்லாவற்றையும் சொன்ன பின்பு…..

” Sir சிலநேரம் நீங்க சொல்ற அஜந்தா எங்கிறவங்களுக்கும் எனக்கும் இடையில ஏதாவது Genetic relationship இருக்கும்னு நினைக்கிறீங்களா? அல்லது nature ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்னு நினைக்கிறீங்களா?”

என கூறிய மதுபாசினியை நிமிர்ந்து பார்த்தேன். உண்மையில் இந்த சந்தேகத்துக்கு அடிப்படை இருக்குமோ இல்லையோ ஆனால் அஜந்தா பற்றிய Information அவசியமா இருந்திச்சு.

“I think to resolve the suspicion of my loss first so…. அஜந்தாவை தேடுவது முக்கியமாக படுகிறது.” 

என்ற என்னை சிரிப்புடன் பார்த்தாள்….

“I am sorry sir உங்க காதலை பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு! உங்க காலத்தை போல sincerity இந்த generation கிட்ட இருக்குமான்னு சந்தேகம் தான்! எல்லாம் T.V யில போகுற Mega serial stories மாதிரி விவஸ்தை கெட்ட உறவு முறைக்கு தான் மவுசு அதிகம்.” 

என்ற மதுபாசினியை பார்த்து சிரித்தேன்.

“இந்த Generation க்கு சம்பந்தமில்லாத ஒரு  Grandma மாதிரி இருக்கு பேச்சு!! Immorality க்கு new, old எங்கிறதெல்லாம் இல்லை. ஒவ்வொரு காலத்திலயும் சீர் கேடுகள் நடந்திச்சு…எந்த காலத்தில நடக்கலைன்னு சொல்லுங்க? ஆனால் Communication development, Dominance of the media என்பன நடக்கிற தகவலை வேகமா வெளியில கொண்டு வருது. அதில்லாம அந்தக்காலம் இந்த காலம் எங்கிறது சரியான பார்வையில்லை. அந்த காலத்தில ஒரு நடிகை ஆடினப்ப ஏத்துகிட்டவங்க இந்த காலத்தில ஒரு நடிகை ஆடுறப்ப மட்டும் Sexual immorality எங்கிறாங்க! அதாவது நல்லது கெட்டதுக்கும் காலத்துக்கும் சம்பந்தமில்லை என்பது எனது கருத்து” 

என நான் சொன்னதற்கு அவள் மறுப்பு சொல்லவில்லை.

“Sir எனக்கு ஒரு சின்ன சந்தேகம்! அதாவது நீங்க தேடுறவங்க another family யா இருந்தால் உங்களால ஏற்றுக் கொள்ள முடியுமா?” 

எனக் கேட்கவும் மின்சாரம் தாக்கியது போல எனக்கு இருந்திச்சு. அஜந்தா என்னை விட்டு போனதும் ஏதாவது அசாதாரணங்கள் நடந்திருக்கும் என்ற முடிவு மட்டுமே எனக்கு இருந்திச்சு. வேறு ஒரு திருமணமாகி இந்த இரண்டு தசாப்த காலத்தில் பிள்ளை குட்டிகளுடன் இருப்பாளென கனவிலும் நினைக்கவில்லை….. இந்த கேள்வியை கேட்டதில் இவளது தப்புமில்லை. 

“Sorry sir இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருக்க கூடாது… ஆனால் கற்பனையை விட நடைமுறை மாற்றத்துடன் இருக்கும். எங்கிறதால கேட்டேன். ஆனால் உங்கள் காதல் ஒரு தூய சரித்திரமாகும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது. எப்படியோ நீங்கள் கேட்டபடி என்னோட அப்பாவை சந்திக்க இன்னும் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்கிறேன்.” 

என்றாள் மதுபாசினி. இன்னும் இரண்டு நாட்களில் resign letter கொடுக்க முடிவு செய்திருந்தாலும், தர்சன தனபாலனை சந்திப்பது அதைவிட முக்கியமாக இருந்திச்சு. 

Lap னை திறந்து mail box னை பார்த்தேன். Official இல்லாத ஒரு address லிருந்து ஒரு message வந்திருந்திச்சு. அதை தாண்டி போயும்…. ஏதே ஒரு சந்தேகத்தில் மறுபடி வந்து அதை திறந்து பார்த்தேன். அதில்

‘விழியில் விழுந்து இதயம் நுளைந்து உயிரில் கலந்த உறவே!’

என்ற பாடல்வரிகள் எழுதப்பட்டிருந்திச்சு! அது….அஜந்தா தனது காதலை சொல்ல யாழ்ப்பாணத்தில் பரிசளித்த workman ல் voice record பதிந்து அனுப்ப முன் தொடங்கிய அதே பாடல்வரிகள்!!!! 

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!