ஒரு வானவில் போலே - 25
தொடர்கதை பாகம் 25
“கதிர்! நம்மை சுற்றி நடந்த நிகழ்வுகள் எதுவும் நடக்காதிருந்தால்…. நீ எப்படி இருந்திருப்பாய்?”
எனது தோளில் சாய்ந்தவாறு அஜந்தா கேட்டாள். எனக்கு அது அர்த்தமற்ற கேள்வி போல தெரிஞ்சிச்சு! நான்…..
“Meaningless question! ஏதாவது சந்தோசமானதை பேசலாமே?”
என்றேன்.
“So everything that happens around us is meaningless! அப்படியா?”
என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு…
“சிவ பூஜையில் கரடி தேவையா? அடுத்த கட்டமா உன்னோட Daddy, mummy ய சமாளிச்சு இந்த ஒழிஞ்சு மறைஞ்சு நடத்திற வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்டனும்” என்றேன்.
“சரி அவங்க agree ஆகாட்டி என்ன செய்வது?”
என கேட்டாள்.
“தமயந்தி அக்கா கல்யாணத்தில் உன்னோட Daddy பேய் காட்டின மாதிரி நாங்களும் எதாச்சும் காட்டி சமாளிக்கலாம்”
என நான் சொன்னதும் ஏதோ பெரிய joke அடித்தது போல் கண்ணீர் வரும்வரை சிரித்தாள். அவள் German போகும் நாட்கள் நெருங்க நெருங்க எங்களுக்குள்ள நெருக்கமும் அதிகரிச்சிட்டே வந்திச்சு.
ஒரு தடவை ஏதோ ஒரு Tablet cover எங்க bedroom ல இருந்து என் கண்ணில பட்டிச்சு. சாதாரணமா அந்த மாதிரி cover நாங்கள் பாவிக்கும் Tablet களுக்கு உரித்தானது அல்ல! அதை அஜந்தா use பண்ணுகிறாள்! தவிர எங்கள் bedroom க்கு வரமுடியாது.
“Aju dear Why are you using this?”
என நேரடியாக கேட்டும் விட்டேன். சின்ன தடுமாற்றம் அவளிடம் தெரிஞ்சிச்சு! எதையோ மறைக்கிறாள் என லேசா சந்தேகம்….
“Nothing dear… Just pain killer German made” என்றவாறு எனது கையிலிருந்த cover னை அருகில் வந்து பறித்தெடுத்தாள். பின்னர் எனது மார்பினில் தலை சாய்த்தவாறு….
“இரவு லேசா Headache அதுக்கு தான்”
என விளக்கம் சொன்னாலும் ஏதோ தப்பாக நடக்கிறது போல எனக்குள்ள feeling. அந்த tablet ன் பெயரை முன்னெச்சரிக்கையாக பாடமாக்கியிருந்தேன். அவளுக்கு தெரியாமல் இதுபற்றிய அறிவுள்ள என் நண்பனுக்கு call பண்ணி விசாரித்தேன். அது குறிப்பிட்ட சில மருத்துவர்களால் மட்டும் சிபார்சு செய்யப்படும் சக்திவாய்ந்த ஒரு painkiller னு தெரிஞ்சிச்சு!
“I have to go early… something problem in my visa”
என திடீரென சொன்னாள்! அதெப்படி திடீரென்று விசாவில் பிரச்சினை? என குழப்பமாக இருந்திச்சு! நான் எதாவது சந்தேகிப்பதாக உணர்ந்து கொண்டதால் இப்படி divert பண்ண நினைக்கிறாளோ? என நினைத்தேன். ஆனால் தர்சனிடமிருந்து வந்த Call எனது முடிவை பிழையாக்கியது. அடுத்த இரண்டு நாளில் அவள் புறப்பட்டாள். பிரிவை சந்திக்கும் ஆற்றல் இருவருக்கும் இல்லை. Airport செல்லும் வரை இருவரும் பேசவில்லை. கடைசி நிமிடத்தில் உள்ளே செல்வதற்கு முன்பு என்னை இறுக அணைத்தவாறு அழுதாள்…. நிறையவே என் முகமெங்கும் முத்தமிட்டாள்…. Call எடுப்பதாக சொன்னாள்…. நான் ஏறத்தாழ முற்றிலும் செயலிழந்து நின்றேன். ஒரு பெரிய தப்பு நடந்திச்சு! அதுவரை காலமும் தர்சனோட Phone number மற்றும் address எதுவும் எடுத்து வைக்கவில்லை. அவளோடு பறந்த flight னை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். Now parallel lines divide between the sky and the earth.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்