ஒரு வானவில் போலே 23

ஒரு வானவில் போலே - 23

தொடர்கதை பாகம் 23

அதுவரை தேட விரும்பாமல் இருந்த மதுபாசினியின் personal file னை ஒரு official காரணம் காட்டி எனது table க்கு எடுத்தேன். அது அவளுக்கு கூட தெரியாது. அதில் அவளது birth certificate ல் தாயின் பெயர் ஜெயந்தி குரே என இருந்தது. தந்தையின் பெயர் தர்சன தனபாலன் என இருந்தது. அதில் ஒரு சில உண்மைகள் தவிர சட்ட ரீதியான பதிவுகளுக்காக சில விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றிச்சு. அவளது பிறந்த திகதியையும் பார்த்தேன் அன்று treat தந்த தினமாகவே இருந்திச்சு. ஆனால் அவளது Educational Qualification sheet ல் Tamil language A grade pass என இருந்திச்சு! அத்துடன் பல தமிழ் மொழி ரீதியான போட்டிகளில் சான்றிதழ் வைத்திருந்தாள்! அத்தோடு மும்மொழி தேர்ச்சியும் மொழிபெயர்ப்புக்கான சான்றிதழும் கூட வைத்திருந்தாள். ஏதோ ஒன்று இடிச்சிச்சு!

ஏன் தமிழ் தெரியும் என்பதை இதுவரை சொல்லவில்லை!? காரணமும் இருக்கலாம் அல்லது தேவையில்லையென நினைத்தும் இருக்கலாம். ஆனால் சின்ன testing ஒன்றை செய்ய நினைத்தேன். ஒரு Indian customer ஒருவரை தொடர்பு கொண்டு ஒரு order sheet னை தமிழில் அனுப்பும்படி கேட்டேன். அந்த fax அவளது பார்வையில் பட்டுதான் என்னிடம் வரும். அந்த reaction மூலம் தற்செயலாக தமிழ் தெரியுமென மறைத்தாளா?, ஏதாவது காரணத்துடன் மறைத்தாளா? என்பது தெரியவரும் என காத்திருந்தேன். ஆனால்….. அந்த fax copy யுடன் ஒரு English translation copy இணைக்கப்பட்டு எனது பார்வைக்கு வந்திச்சு. அதை எடுத்து பார்த்தவாறு….

“Mathu…. little doubt உங்களுக்கு தமிழ் தெரியும் எங்கிறத ஏன் மறைச்சீங்க?”

என்றவாறு அவளது expression னை பார்த்தேன். அதில் குறிப்பிடும்படி மாற்றம் இல்லை.

“நீங்கள் கேட்டாள் சொல்ல இருந்தேன். ஒரு தடவை சிங்களம் தெரியுமென நீங்கள் கூறிய நேரம்… எனக்கு தமிழ் தெரியுமென சொல்ல நினைத்தேன் ஒரு மரியாதை காரணமாக சொல்லவில்லை”

என்றவாறு சிரித்தாள்…. ம் அன்று கண்ட அந்த மந்திரப் புன்னகைக்கு இதுதான் காரணமா? 

“என்னை விட உங்களுக்கு தமிழ் அம்சமா வருகுதே!?”

“ம் sir… எனக்கு என் தாய்மொழியை விட தமிழ் மிகவும் பிடிக்கும்…. வீட்டில அப்பாவும் கூட நல்லாவே தமிழ் பேசுவாங்க”

என்றாள். ம்ம்ம் அப்படியானால் அது தர்சன் தான் என ஏதோ ஒன்று எனக்குள்ள சொல்லிச்சு.

“அப்படின்னா உங்க Grandma தமிழ் பேச மாட்டாங்களா?” 

என்றேன் நான். அதற்கு…..

“ஊகும் அவங்களுக்கு சுத்தமா வராது”

என பதில்வர திடுக்கிட்டேன். 

ஏனென்றால் மதுபாசினியின் Grandma வை அஜந்தாவின் தாய் என்பதாகவே அதுவரை கணித்து வைத்திருந்தேன். அவருக்கு தான் தமிழ் நன்றாக தெரியுமே. இப்படி நேரும் எதிருமாக தகவல்கள் வந்து குழப்பத்தை ஏற்படுத்திச்சு.

“ஒரு difficulty உங்க குடும்பத்தில தெரியுதே? சில நேரம் என்னோட பார்வை தப்பாக கூட இருக்கலாம்.” என்றேன்.

“Sir எனக்கு கூட அப்படி சில நேரம் தோன்றியதுண்டு! எனக்கு எந்த குறையும் வைக்காமல் வளர்த்தாங்க! அதிலும் சில தகவல்களை மறைத்தாலும் அவங்க தரணும்னு நான் இதுவரை….. கேட்கவுமில்லை So பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது எனது பூர்வீகத்தை தேட ஆர்வம் வந்திருக்கு!”

என்றது அவளது பதில்.

“சரி அப்படின்னா உங்க அப்பாவை ஒரு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா?”

என்று கேட்டேன்.

“ofcourse Sir …. உங்ககிட்ட அன்று அந்த போட்டோவ பார்த்ததும் நான் சில கேள்விகள் கேட்டேன்…. Objection இல்லை என்றால் பதில்தர முடியுமா?”

என அவளது opposite question அஜந்தா பக்கம் வந்திச்சு.

 

who is this? 

Is this your spouse? 

Where is now?

இதுதான் அந்த கேள்விகள். என்னை பெற்ற தாய்க்கோ தங்கைக்கோ கூட தெரியாத விசயங்கள் இதற்கான பதிலில் இருந்திச்சு. அஜந்தாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, அவளை பற்றி தெரிந்திட மீறுவது தப்பில்லைன்னு பட்டிச்சு. அதனால…..

“அவங்க பெயர் அஜந்தா தனபாலன்

சட்டரீதியா என் இரகசிய மனைவி

சமூக குடும்ப ரீதியில காதலி

இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியாது….” என மணிரத்தினம் சினிமா பாணியில் பதில் சொல்லவும்….நெற்றியை சுருக்கியவாறு அவளது உதடுகள்….

“அஜந்தா தனபாலன்…. தர்சன தனபாலன்” என எனது சந்தேகத்துடன் சமரசமாகும் நிலையில் முணுமுணுத்தது.

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!