ஒரு வானவில் போலே 21

ஒரு வானவில் போலே - 21

தொடர்கதை பாகம் 21

“Mathu….! I want to tell you something….. It may also be something you don’t understand…” 

என்ற என்னை கேள்விக் குறியோடு பார்த்தாள் மதுபாசினி. அதாவது எதேச்சையாக அஜந்தாவின் தோற்றத்தை தவிர எந்த தொடர்பும் அவளுக்கு இல்லாமலும்  இருக்கலாம். ஆனாலும் அவளிடம் என் கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிட முடிவு செய்தேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களில் இந்த Company யில் இருந்து என் வழமையான பாணியில் வேறு எங்காவது போய்விட போகிறேன். மற்றைய இடங்களில் குறைந்தது எட்டு பத்து வருடங்கள் இருந்து திறமைகளை காட்டியே வெளியேறினேன். இங்கு வெறும் மூன்று மாதங்களே இருக்க முடிந்தது…. எனக்குள் ஒரு அமைதியான நிலையான நினைவாக இருந்த அஜந்தாவின் உருவம் மதுபாசினி ரூபத்தில் என்னை நடைமுறையில் துரத்துவதை ஏற்க முடியவில்லை. அதில் உள்ள பௌதீக நியாயங்கள் சரியெனவும் படவில்லை. காதல் என்பது உணர்வுகளின் உறவு சம்பந்தப்பட்டது. இங்கு உருவம் வெறும் அடையாளம் தவிர எதுவுமில்லை… அவளே இல்லாத நிலையிலும் அவள் நினைவுகளோடு வாழப்பழகிய எனக்கு இந்த உருவ ஒற்றுமை சிறு குழப்பத்தை தருகிறது! தவிர தீர்வை தரமாட்டாது. எனவே இது தேவையில்லை என தீர்மானிச்சேன்.

“Is there a problem with our planning process?” 

என்றாள் மதுபாசினி. அதாவது  தொழில் ரீதியில் பிரச்சினை உள்ளது என்றே நினைத்திருக்கிறாள்….

“This is personal…Look at this photo” 

என்று கூறியவாறு அஜந்தாவும் நானும் சேர்ந்து இருபது வருடத்துக்கு முன்பு எடுத்த photo வை காட்டினேன். ஏதோ ஒரு வகையில் நினைவுகளை அசைமீட்ட இந்த ஒன்றுமட்டுமே தப்பித்தவறி எஞ்சியிருந்திச்சு. மற்றைய எல்லாம் film rolls உட்பட அஜந்தாவுடன் சேர்ந்து காணாமல் போயிருந்திச்சு! அந்த photo வை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மதுபாசினி.

I can’t believe it sir! 

who is this? 

Is this your spouse? 

Where is now?

இப்படி வியப்பும் கேள்விகளும் அவளது வார்த்தைகளாக வந்திச்சு…. இதற்கு விடை சொல்வதைவிட அவளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம் அஜந்தாவை பற்றிய தகவல்களை அறியலாம். அல்லது வெறும் உருவ ஒற்றுமையை மட்டும் வைத்து குழம்பும் எனது சந்தேகத்தை தீர்க்கலாம் என நினைச்சேன்.

“You have the same confusion I had…. I have just talked to you for solution.”

எனக்கு இருந்த அதே குழப்பம் உங்களுக்கும் உண்டு. ஒரு முடிவுக்காக நான் உங்களிடம் பேசினேன்…. என்றேன். 

“Well sir what are you expecting from me?” 

என எனது சந்தேகங்களுக்கு பதில் தர தயாராக இருப்பதை உணர்த்தினாள். பூர்வீகத்தை வைத்து சில முடிவுகளுக்கு வரலாம் என நினைத்து யாழ்ப்பாண தொடர்பு பற்றி அறிந்திட….

“Do you have any relatives in Jaffna?” 

என்றேன். கண்களை கொஞ்சம் இறுக்க மூடி நெற்றியை சுருக்கினாள்…. அது ஆழமாக தேடும் மனோபாவம்…. சிறிது நேரத்தின் பின் இல்லையென தலையசைத்தவாறு….

“I don’t know anyone like that, but some Tamil relatives have sometimes come from abroad to visit my father” என்றாள்.

என்னது!? வெளிநாட்டிலிருந்து தமிழர்கள் சிலர் இவளது தந்தையை பார்க்க வந்து போயிருக்கிறார்களா?

 

“Sir! I stayed and studied at the boarding house. So not much is known about it” 

என அவள் எங்கோ தங்கி படித்ததால் அதுபற்றி மேலதிகமாக எதுவும் தெரியாதென சொன்னாள்.

“One more question … Who are your parents?” என கேட்டேன்.

“I have never seen my mother…. Didn’t even say the name! The details of the father are also recorded in my birth certificate …. My father told me that he had gone to God when I was born” 

என அவள் பிறந்த போதே தாயை பறிகொடுத்த கதையை தந்தை சொன்னதாக சொன்னாள். சில நேரம் விபரங்கள் ஏதோ ஒரு காரணமாக மாற்றப்பட்டிருக்கலாம் என ஊகித்தவாறு

“Sorry no more questions”

என்றும் கூறிவிட்டு……. தலையில் ஏதோ பொறி தட்டியவனாக

” Your father’s name?” என்றவும்

“Dharshana Thanabalan” 

என்று பதில் வரவும் திடுக்கிட்டேன்! 

அஜந்தாவின் அண்ணனை தர்சன் என நாங்கள் அழைத்தாலும், அதன் சிங்கள பெயர் வடிவம் தர்சன என்பதை அறிந்து வைத்திருந்தேன். அத்துடன் தனபாலன் என்பது அஜந்தாவின் Daddy யின் பெயர்……!

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!