ஒரு வானவில் போலே 16

ஒரு வானவில் போலே - 16

தொடர்கதை பாகம் 16 

முன் Hall ல் இருந்த சிறு விளக்கின் வெளிச்சம் கண்டதும், அம்மா விழித்திருக்க கூடும் என்பதை உணர்ந்து சந்தடியில்லாமல் எனது room க்குள் அவசரமாக சென்று கதவை மூடிக் கொண்டேன். மறு நாள் காலையில் எழுந்தும் அஜந்தா தங்கையுடன் இருப்பது தெரிந்ததால் வெளியே செல்லாமல் அப்படியே இருந்தேன். ஆனால் அம்மா வந்து கதவை தட்டியதும் திறந்தேன். 

“கதிர்! இரவு வெளிக்கு போயிட்டு வந்தனியே? கால ஒழுங்கா கழுவாம வந்திருக்கிறாய்” என்றதும் தான் நிலத்தில் செம்மண்ணில் ஏதோ மெல்லிய ஈரம் பட்டு காய்ந்த அடையாளம் இருந்திச்சு…. நானும் வெளியே வந்தவாறு 

“ஓமம்மா இருட்டில சரியா விளங்கயில்ல” என்றதும் ‘க்ளுக்’ என தங்கையின் சிரிப்பு வந்தது அங்கு அஜந்தாவும் நின்றிருந்தாள். எதுவும் சொல்லாமல் காலைக்கடன் முடிக்க சென்றேன். அவர்களை தாண்டும் போது…

“Are the plays all over?” 

என்ற கேள்வி அஜந்தாவிடமிருந்து மிக மெதுவாக வந்தது. நானும்…

‘Yes, but my real one failed’ என சொல்ல நினைத்தேன் ஆனால் மெதுவாக தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றேன்.

“டேய் கதிர்! நம்பிய தேவன் பூசாரி பலமான ஆள்தாண்டாப்பா! சொன்ன மாதிரியே பேய விரட்டிட்டார்” என நண்பண் சொல்லவும் மெல்லிய சிரிப்பை மட்டும் பதிலாக வைத்தேன்.

“There is something wrong in this” என தர்சன் சொல்ல…..

“இல்லடாப்பா இரவுல எல்லாமே பயங்கரமா இருந்திச்சு……..” என தொடங்கி முன்னைய நிகழ்வுகளை ஒருவன் தர்சனுக்கு வர்ணித்து சொல்ல….. அதற்குள் செல்ல எனக்கு மனம் வரவில்லை. சிலரது தவறான நம்பிக்கைகளை உடைக்க முடியாதது போலவே உண்மையான காதலையும் சிலரிடம் புரியவைக்க முடியாது! என தோன்றிச்சு. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மறுபடி எதற்கு பேசிக் கொண்டு என்னை குழப்ப வரவேண்டும்? இந்த கேள்வி என்னை மட்டும் பலமாக தாக்கியது. இன்னொரு வகையில் கோபத்தையும் மூட்டியது.

தமயந்தி அக்காவீட்டில் குணசேகரன் அண்ணா குடும்பம் வந்து திட்மிட்டபடி அடுத்த நிகழ்வுகளை செய்து கொண்டிருந்ததது. குறித்த திகதியில் குறித்த முகூர்த்தத்தில் கல்யாணமும் நிச்சயமானது. அஜந்தாவின் Daddy வந்து அன்பாக என் முதுகில் தட்டி….

“Good work Kathir… thanks” என மெதுவாக சொல்லி சென்றார். தர்சன் நான் முடியாதென கூறியும் தமயந்தி அக்கா வீட்டிற்கு இழுத்துச் சென்றபோதே இந்த நிகழ்வுகள் நடந்திச்சு. அங்கு சென்றதும் வேண்டுமென்றே அஜந்தா என்னை ஏறிட்டு சிரித்தவாறு இங்குமங்கும் நடமாடினாள். ஆனால் நான் பார்வையை தவிர்த்தேன். Love இல்லாவிட்டால் எதற்கு இந்த பித்தலாட்டங்கள்! இறுதியில் நான் அங்கிருந்து வீட்டுக்கு போக புறப்பட்டேன் வாசலை தாண்டி செல்ல முயன்றபோது அஜந்தா வெகு இயல்பாகவே என் அருகில் வந்து….

“Why are you avoid me? நான் என்ன தப்பு செய்தேன்?” என்றாள். நானும் விடாமல்…

“இல்லை நான் தான் தப்பாக நடந்தேன் Sorry.” என்றேன்.

“அப்படின்னா…. நீங்க கேட்டதற்கு நான் Positive reaction தந்தால் மட்டும் தான் எங்கள் friend Ship Real ஆகிடுமா?” என்றாள் அவள். எனக்கு அதற்கு பதில் சொல்ல முடியவில்லை….. எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்.

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!