ஒரு வானவில் போலே 10

ஒரு வானவில் போலே - 10

தொடர் கதை பாகம் 10

மறுநாள் காலையின் திருமண வீடு கலையிழந்திருந்தது செய்தியாக வந்திச்சு…. தமயந்தி அக்கா சுகவீனமாக இருப்பதாகவும் கதை…. அதிலும் ஏதோ காத்து கருப்பு பட்டதாக area பெருசுகள் சொல்ல எனக்கு Drama activated னு தெளிவானது. நான் என்னோட  பங்கை அன்னைக்கு இரவு செய்யனும். area வில் நடப்பவைகளை விடுப்பு பார்க்கும் ஒரு கூட்டம் live hot news போட்டனர். இது சில கோல்மூட்டிகளின் வேலை…. பாவம் கந்தசாமி அண்ணர் (அதாவது Hitler) என்றனர் சிலர். எனக்கு இதெல்லாம் தேவையில்லாதது. அஜந்தாவை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்; அதற்கு அவளது அப்பாவை திருப்திப்படுத்த வேண்டும். சரி ஒரு நோட்டம் போட்டு வர தமயந்தி அக்கா வீட்டு பக்கம் சென்றேன். Hitler இடிந்த தூண் போல ஒரு கதிரையில் அமர்ந்திருந்தார். சிலர் அவரை சூழ அமர்ந்திருந்து ஆலோசனை ஆறுதல் புத்திமதியென கூறிக் கொண்டிருந்தனர். அஜந்தாவின் Daddy என்னை கண்டு பட்டும் படாமல் மெல்லிய கண்ஜாடை மட்டும் செய்து நகர்ந்தார். 

“இதுல பயப்பிட ஒன்டுமில்ல அது கேக்கிறத குடுத்திட்டு பக்குவத்தையும் காவலையும் சரியா போட்டுட்டா பிரச்சினை முடிஞ்சிடும்…. சரி சரி  நம்பிய தேவன் பூசாரியிட்ட விஷயத்த சொல்லியாச்சு தானே…. அவர் simple ஆ முடிச்சு போட்டு போயிடுவார்.” என ஒருவர் சொல்ல இன்னொருவர் “இன்டைக்கு இரவோட வந்த கறுப்பு துண்டக்காணம் துணிய காணமெண்டு ஓடப்போகுது” என பதில் கூறி இல்லாத பேய்க்கு மத்தாப்பு கொளுத்தினர். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வர ஒரு ஓரத்தில் நின்று நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பின்னால் இருந்து…..

“What is your role in this play?” என்ற கேள்வி வரவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். பின்னால் அஜந்தா யாரோ ஒரு பெண்ணோடு நின்றிருந்தாள்!

“அது வந்து…. இல்ல… சும்மா….” என சம்பந்தமில்லாம ஏதோ பேசினேன். அவள் அதையெல்லாம் கணக்கெடுக்காமல்….

“கொஞ்சம் அவசரமா உங்க கூட பேசனும்!” என்றாள்…. நான் தலையை மட்டும் ஆட்டினேன்….

“வீட்டுக்கு பின்னாடி வாங்க… இப்படி வேணாம். நீங்க Ball எடுக்க வருவீங்கல்ல அதுபோல யாருக்கும் தெரியாம jumping ல வாங்க” என்றுவிட்டு விறு விறுவென சென்றுவிட்டாள்.

அவளது முகத்தில் கோபம் தெரஞ்சிச்சு! சில நேரம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையின் பாதிப்பாக கூட இருக்கலாம்….. this play என்றாளே! அது Drama வ பற்றி ஏதாச்சும் தெரிஞ்சிருக்குமோ? என சிந்தித்தவாறு ஆள் நடமாற்றமற்ற அந்த பின்புற ஒழுங்கை வரை வந்து மதிலேறி குதித்தும் விட்டேன்…..சுற்றிவர பார்த்தேன். தோட்டத்தின் இடது கோடியில் இளநீர மரத்தோடு இருந்த அந்த motor room கண்ணில் பட அதற்கு பின்னால் இருந்து அஜந்தா கையசைப்பது தெரிந்தது. காலை மடித்து அமர்ந்தால் எதிர்ப்பக்கத்திற்கு தெரியாது. இன்றிரவு திட்டமிட்டபடி இந்த இடத்திலிருந்துதான் எனக்கு தரப்பட்ட வேலையை செய்ய இருந்தேன். குணிந்தவாறு மிக வேகமா அவ்விடத்துக்கு ஓடினேன். எல்லாம் ball எடுக்கவும் திருட்டு காய் கனி பறிக்கவும் அங்கு புகுந்து விளையாடிய பழக்க தோசம்.

அவளுக்கு அருகில் மிக மிக அருகில் அதுவும் தனிமையில் முதல் தடவை எனும் போது கொஞ்சம் Foundation அதாவது கால்கள் ஆட்டம் கண்டது. அந்த அதிர்வு building கை அதாவது உடம்பை ஆட்டாமல் இருக்க முயற்சி செய்து ஏறத்தாழ தோற்று நின்றேன்…. இதில்

“ஏன் பதற்றம்! இப்போ திருட வரவில்லையே!” என சுத்த தமிழில் comment வேறு அடித்தாள்!!!

‘க்கும் Hitler வீட்டு மாங்காயையும் கொய்யாக்காயையும் திருட வரவில்லை அவரது பேத்தியின் இதயத்தை திருட வந்தேன்’ என கூற நினைத்தேன். ஆனால் அந்த குணா கமல் போல வார்த்தை… வார்த்தை தான் வரல!!! அத்துடன் அவளுக்கு அருகில் ஒரு அறுவா கத்தியும் மூன்று இளநீர்களும் இருந்தது! இது எதற்கு!? வெட்டி குடித்து energy ஏற்றி இளைப்பாறி பேசவா!? என வெட்டித் தனமாக ஒரு waste mind வேறு ஓடியது….

” Sorry if anyone comes…. உங்களை வைத்து தமயந்தி aunty க்காக இதை…” எனும் போதே என்னை தென்னை மரத்தில் ஏற்றியிறக்கியது புரிந்தது. இந்த safety ஏற்பாடெல்லாம் முன் அனுபவமா இருக்குமோ? என நினைக்கும் போதே…

“Not only prior experience in security, it includes knowledge” என சொன்னாள்!

ம்ம்ம் அதாவது பாதுகாப்பு முன் அனுபவம் மட்டுமல்ல அது அறிவோடு சம்பந்தப்பட்டது என்பது Scouting, cadet போன்ற பயிற்சிகளில் கற்பிக்கப்படுவது. இவளும் School ல் அதுபோல எதிலாவது ஈடுபாடு கொண்டவளாக இருக்கலாம் என ஊகித்தேன். ஓஹ் வீராங்கனை! Bold and Beauty என ரசித்த போதே….

” Not more time Dada உங்க கிட்ட என்ன சொன்னார்?” என கேட்டாள். 

நானும் கொஞ்சம் உசாராகவே….

“சில சின்ன சின்ன உதவிகளை கேட்டார்” என்றேன்.

“அதாவது இந்த விளையாட்டிற்கு….” என அவள் சொல்லும் போது சூழ்நிலையை ஊகித்துவிட்டாள் என புரிஞ்சிது. இனி மறைப்பதில் அர்த்தமுள்ளதாக படவில்லை.

“Your guesses are correct but for some benefit” என்றேன் நான். அதற்கு

“grandpa தப்பானவர் இல்லை” என Hitler க்காக வக்காலத்து பாட ஆரம்பித்தாள்! 

“இங்கு யாரையும் நல்லது கெட்டது ஆக்குவது நோக்கமில்லை ஒரு கல்யாணத்தை நடத்தனும் அதுக்காக ஆயிரம் பொய் சொல்லவில்லை ஒரேயொரு காதலை இல்லாத ஒரு பேயை வைத்து சொலறது தான் game என்றேன்.

“OK until nothing goes wrong இதுல சம்பந்தமே இல்லாம ஈடுபடும் நீங்க கவனமா இருங்க” என அவள் சொல்லிவிட்டு…..

“சரி நீங்க போங்க” என்றாள். ஆனால் ஒரு நட்பு பார்வை மட்டும்தான் அதில் தெரிஞ்சிச்சு….

இதெல்லாம் உனக்காக தான் தங்கமே என சொல்ல வாய் துடித்தாலும் சொல்ல முடியவில்லை. மறுபடியும் ஒரு மின்னல் வேகத்தில் ஓடி மதில் பாய்ந்து வந்துவிட்டேன். எங்களது தனியான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்திச்சு.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!