ஒரு வானவில் போலே 09

ஒரு வானவில் போலே - 09

தொடர் கதை பாகம் 09

“அப்பாவோட பிடிவாதத்த மாத்த சில அமானுஷ்யங்கள செயற்கையா design பண்ண போறேன்…. இத பத்தி ஏற்கனவே drama ல கலந்துக்க போர ஒரு சிலர் கிட்ட பேசியாச்சு…. எங்க வீட்டு பின்னாடி தோட்டத்தில உள்ள மரமட்டை முதல் சகலதும் உங்களுக்கு அத்துப்படி எங்கிறத அன்னைக்கு கொப்பு வெட்ட வந்தப்ப தெரிஞ்சுகிட்டேன்…. அதனால உங்களையும் பயன்படுத்த தீர்மானிச்சேன். அதாவது கதைப்படி தமயந்தி ஒரு abnormal நிலைக்கு வருவா…..  ஒரு Exorcism நிகழ்வ ஏற்படுத்தி அதுக்கு காரணம் ஒரு ஆவின்னு நம்ப வைக்கனும்…. அந்த ஆவி பத்து வருஷத்துக்கு முன்னாடி தவறின எங்க அப்பாவோட அம்மா…. ஏன்னா அவமேல அப்பாகிட்ட ஒரு sentimental mood இருக்கு. So drama வோட தொடக்கமே ஒரு அட்டகாசமா ஆரம்பிக்கனும்… முடிவு சரியா முடியனும். கதைப்படி பேய், பில்லி, சூனியம்னு அந்த area வே tention க்கு வரும் அந்த tention ல நீங்க பயந்திடக் கூடாதின்னுதான் பேய் பயம் இருக்கான்னு முன்னாடியே கேட்டேன். ஏன்னா தோட்டத்தில நீங்க செய்ய போகிற சில வேலைகள் முக்கியம்” என முடித்தார்.

என்னதான் இருந்தாலும் கொஞ்சம் பேய் பயம் எனக்கு இருந்திச்சு. அதை காட்டாமல் ஒரு அசாதாரண தைரியசாலி போல காட்டிக்க நினைச்சேன்.

“பயம்லாம் இல்லை ஆனா இந்த விசயம் குணசேகரன் அண்ணாக்கு தெரிஞ்சிட்டா just drama ன்னு தெரியாம தமயந்தி அக்கா பேய் பிடிச்சவ…. குடும்பத்துக்கு சரிவரமாட்டான்னு நினைச்சிட்டா?” என ஒரு சந்தேகத்தை கேட்டேன். ஏனென்றால் உண்மையோ பொய்யோ இது போல சில சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன்.

“Mmm too smart question! ஆனா குணசேகரன் கிட்ட இது சம்பந்தமா பேசி அவர் ஒத்துகிட்ட பின்னாடி தான் மத்த ஏற்பாடுகள செஞ்சிட்டு இருக்கேன். குறிச்ச முகூர்த்த திகதியில அவர் தயாரா இருப்பாரு” என்றவாறு எனது முதுகில் தட்டினார் அஜந்தாவின் Daddy. 

அத்துடன்…”ஒரு முக்கியமான விஷயம் இந்த drama சம்பந்தமா பெருசா எதுவும் அஜந்தாக்கு தெரியாது marriage will not be broken ன்னு தான் உன்கிட்ட Help கேட்கிறதா சொன்னேன். But அவளோட Bold mind சும்மா இருக்காது. என்னன்னு தெரிஞ்சுக்க நினைப்பா…. ஏதாச்சும் கேட்டான்னா நான் உதவி செய்ய ஒத்துக்கள அதனால எதுவும் சொல்லல… இப்ப கூட நாம தனியா சந்திக்க அவள் தான் Plan பண்ணா. சரி இந்த letter ல இன்னைக்கு night என்ன செய்யனும். அப்புறம் இரண்டு நாளைக்கு அப்புறமா என்ன செய்யனும்னு இருக்கு” என ஒரு letter னை என்னிடம் தந்தார். அதை எடுத்து Pocket ல் வைத்தேன். அஜந்தாவின் காதல் கடிதத்தை கரமேந்த காத்திருந்த எனக்கு அவளது Daddy letter தந்துவிட்டு போனார்! சிரிப்பு சிரிப்பாக வந்தது.

அப்படியே வீட்டுக்கு வந்த நான் அந்த letter னை படித்தேன் அதன்படி அன்றிரவு ஒரேயொரு வேலை எனக்கு கொடுக்க பட்டிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் செல்வியும் அஜந்தாவும் வீட்டுக்கு வந்தனர்.  நான் இயல்பாக எனது room ல் இருந்து hall க்கு வந்தேன். எனது அப்பா Dining table ல் இருந்து சாப்பிட்டவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதை எதையும் கவனிக்காது எனக்கு அருகில் வந்த அஜந்தா……

 “What the Daddy said” என கேட்டாள்

 “He need some help but. I don’t Idea” என்றேன். அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அவளது trade mark மத்திரப் புன்னகையை மட்டும் சிந்திவிட்டு செல்வியின் room க்கு சென்றுவிட்டாள். உதவி செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதை சொன்னதால் என்னைபற்றி Negative mind எடுப்பாளோ என பயமாக இருந்திச்சு. ஆனால் சிறிது நேரத்தில் அவள் சென்றதன் பின். தங்கை வந்து என்னிடம்….

“நீங்க அஜந்தாவின் Daddy கிட்ட பேசிகிட்டு இருந்ததில இருந்து அவர் ஒரு letter உங்க கிட்ட தந்திட்டு போனது வரை நாங்க library ஜன்னல் மூலமா பார்த்திட்டுதான் இருந்தோம். அதனால நீங்க உதவி செய்ய விரும்பல எங்கிறத அஜந்தா நம்பலைன்னு உங்ககிட்ட சொல்ல சொன்னா…. அத்தோட be careful and All the best னு சொல்ல சொன்னா” என்றதும் எனக்குள்ள ஒரு Extra energy create ஆச்சு! Love teaches everything and gives the power to conquer anything.

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!