ஒரு வானவில் போலே - 07
தொடர் கதை பாகம் 07
“தமயந்தி அக்கா ஏன் அந்த முடிவுக்கு போனா!?” என கேட்டேன் அதற்கு….
“I have a no idea…. but something happen in wedding…. கல்யாணத்தை குழப்ப சிலர் முயற்சி செய்வதா தெரியிது!” என அவள் சொல்லவும்….
“Ok but now I confused too! என்னோட உதவி இதுல ஏன் எதுக்கு?” என கேட்டேன்.
“ம்ம்ம் சொல்றேன். Daddy தான் உங்க கிட்ட கேட்க சொன்னாங்க…” என அவள் சொல்லும் போதே அம்மா வரவும் மெல்லிய கண் ஜாடை செய்தவாறு கதையை வேறுபக்கம் மாற்றினாள்.
“நேற்று கொய்யாப்பழம் மாங்காய் எல்லாம் பறிச்சு கொடுத்திருக்கீங்க…. I am unlucky… நான் செல்வி கூட Library போனதால எனக்கு கிடைக்கல்ல…. ஆ செல்வி இன்னைக்கும் Library போகனும்… aunty with your permission அனுப்புவீங்க தானே?” என அம்மாவை பார்த்து கேட்கவும் அம்மா…
“அதிலென்னம்மா கூப்பிடு தூரத்திலதான் இருக்கு போயிட்டு வாங்கோ” என்றவாறு tea யினை எங்களுக்கு பரிமாரினார்.
“அப்படின்னா செல்வி after lunch two a clock get ready to go Ok” என்றவாறு tea கோப்பையை உதட்டில் பதித்து எனது முகத்தை கூர்மையாக அவதானித்தாள். நான்கு வருடத்துக்கு முன் Hospital ல் பார்த்த re develop version அது! அத்தோட எனக்கும் சேர்த்த message என்பதை நான் புரியாமல் இருக்க மங்காவா மடையனா… ஆனால் காதல் வில்லை சுமந்து அம்பு விட்டு மகிழ இருந்த எனக்கு புதிதாக ஒரு James Bond 007 promotion வரும்போல இருக்க…. இவளுக்காக அதை ஏற்கலாம் போல இருந்திச்சு. அப்படியே வெளியே வந்த நான் எப்போது இரண்டுமணியாகுமென காத்திருந்தேன். இதற்கிடையில் நண்பர்களுடன் இருந்தபோது அரசல் புரசலாக கண்ணும் மூக்கும் காதும் வைத்து பல கதைகள் வந்தன. என்ன எல்லாம் தமயந்தி அக்காவுக்கு பிடிக்காமல் பலவந்தமாக திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே காதலித்தவன் கொழும்பிலிருந்து வந்துள்ளதாகவும்…. பல கதைகள். ஊர்வாய்க்கு special அவலாக Hitler வீட்டு திருமணம் மாறியிருந்தது…
“டேய் மச்சான் ஆள் யாரென்று தெரியுமா…. குணசேகரன் அண்ணா தானடா” என்ற போதுதான் உச்சி மண்டையில் தெளிவாக பட்டது! அவர் முன்பு இந்த area Post men. கடிதத்தை கொடுத்து இதயத்தை திருடிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு சாடை மாடையாக கதை வெளிவந்தது தான்…. ஆனால் Hitler ன் சமயோஷிதத்தால் ஊர் வாயை மூடிவிட்டார். ஆனால் காதலையும் புகையையும் மறைக்க முடியுமா? நண்பர்களை பக்குவமாக காய் வெட்டிவிட்டு இரண்டு மணிக்கு alarm வைத்தால் போல் Library க்கு சென்றேன். அங்கே எனக்கு பிறகு அரைமணி நேரம் கழித்துதான் செல்வியும் அஜந்தாவும் வந்தனர்.
“நீங்க late ஆ வருவீங்கன்னு நினைச்சேன்! நாங்கதான் late போல” என அஜந்தா சொல்லவும் நான்….
“இல்ல இப்பதான் வந்தேன்” என்றேன்.
“இப்ப Daddy வந்திருவார்” என அவர் சொல்லவும் அந்த 185 Honda bike வந்து இவர்கள் அருகில் நிற்கவும் சரியாக இருந்தது. அஜந்தாவின் Daddy bike னை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து…
“Dear! You two go to the Library. I want to talk with Kathir” என கூற….
“Ok Dad” என்றவாறு அஜந்தாவும் செல்வியும் Library உள்ளே சென்றனர். நாங்கள் வெளிப்புற Garden ல் ஒரு ஒதுக்கு புறமாக போடப்பட்ட bench ல் அமர்ந்து பேச தொடங்கினோம்.
“கதிர் எங்க அப்பாவோட வரட்டு பிடிவாதம் உங்களுக்கு நல்லா தெரியும். அது இன்னைக்கு தங்கச்சியோட கல்யாணத்திலயும் சிக்கல கொண்டு வந்திட்டு! Already விஷயம் உங்களுக்கு தெரியும் எங்கிறதால நேரடியா விஷயத்துக்கு வாரேன்…. இந்த வயசில உங்கள இந்தமாதிரி பிள்ளைகள இப்படி வேலைக்கு பயன்படுத்த கூடாது. ஆனால் யார்லயும் நம்பிக்கை வரயில்ல… Just exception you… but I don’t know why? அதையே தான் அஜந்தாவோட அம்மாவும் சொன்னா…. எனக்கு உங்களால ஒரு உதவி தேவை… அத்தோட யாரும் இதனால பாதிக்கப்படவும் கூடாது. அதாவது கல்யாணம் குறித்த முகூர்த்தத்தில நடக்கும் ஆனால் மாப்பிள்ளை தான் மாறப் போறார்…. அதுக்கு எங்களுக்கு உதவ முடியுமா?” என அஜந்தாவின் Daddy கூறியதும். கொஞ்சம் யோசனையாக இருந்திச்சு…. ஆனாலும் அஜந்தாவின் மனதை வெல்லும் இலக்கில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தைரியம் வந்திருந்திச்சு! இதை Power of Love னு சொல்லலாம். அதனால…
“Ok Uncle ….கட்டாயம் உதவி செய்கிறேன்… ஆனால் என்னால எந்த வகையில…” என்றதும் அவரது முகத்தில் திருப்தி தெரிந்தது.
தொடரும்…..