உணர்வுகளின் விடுகதை 20 (கடைசி பாகம்)

உணர்வுகளின் விடுகதை -20 (கடைசி பாகம்)

(தொடர்கதை இறுதிப் பகுதி EP 20)

” ரமீஸ் ஒன்ற தெளிவா புரிஞ்சுகங்க குற்றவுணர்ச்சி எனக்கும் இருந்திச்சு! நான் என் முதல் மனைவிய காதலிச்ச நேரத்தில எங்களுக்கு தடைன்னு இரண்டு வீட்லயும் எதுவும் இருக்கல…. திருமணம் கூட சிறப்பா நடந்திச்சு…. ஏறத்தாழ அந்த ஒன்பது மாச வாழ்வு! அது போதும்னு தான் முடிவெடுத்தேன். எங்க உறவுக்கு சாட்சியா அல்லாஹ் தந்த என் மகள் அதனோட நிகழ்காலம் எதிர்காலம்னு காலத்த நகர்த்ததான் நினைச்சேன்….. என்னோட தவிர்க்க முடியாத Business line வளர்ந்து வார பிள்ளையோட நிகழ்காலத்த பாதிச்சிட வைக்குமோ என்ற குற்றவுணர்வு தான் மறுமணத்தின் பக்கம் என்ன இழுத்துது. என்னோட வாப்பாதான் அந்த காரணத்தை காட்டி படிப்படியா என்னை மாத்தினாரு! வாப்பாவோட வற்புறுத்தல் தொடர ரெண்டு வருஷத்துல அதுக்கு ok ஆனேன்…. But என்னோட uncle அதாவது ரைஹானாட வாப்பா இப்படியான சந்தர்ப்பத்த பாவிச்சு பலரோட குற்றவுணர்ச்சிகல சம்பந்தப்படுத்தி ரைஹானாவ என்கிட்ட ஒப்படைப்பார்னு தெரியாது! அவளோட உம்மாவ காட்டி ஒரு மானசீக நெருக்கடிய ஏற்படுத்திதான் இப்படி ஒரு வேலய செஞ்சார்னு ரைஹானா மூலம் தெரிஞ்சப்ப எனக்கும் குற்றவுணர்வு மறுபடி வேறுவகையில் வந்திட்டிது! ஆனா இதெல்லாம் Over the 6 month எந்த ஒட்டும் உறவும் இல்லாம கல்யாணமாகி வாழ்ந்து என்ன புரிஞ்சுகிட்ட பின்னாடி ரைஹானா சொன்னதுதான்…..

….. உடனே உங்கள விசாரிச்சப்ப Accident ஆனது கட்டார் போனது இப்படி எல்லாம் தெரிய வந்திச்சு. Some times காலம் சில மாற்றங்களை தரும்னு அவகிட்ட சொல்லிட்டு அப்படியே நகர்ந்திட்டோம். But இப்போ விசாரிச்சப்ப நீங்க திருமணத்தை விரும்பாம பிரம்மச்சாரியா வாழ்றது மறுபடியும் ரைஹானா மனசில் குற்றவுணர்வா படுது! எனக்கும் கூடத்தான்….. அதுவும் மறுபடி உங்கள கண்டதும் ஒரு நல்ல மனுசனோட வாழ்க்கைய இப்படி ஆக்கிட்டனே என சொல்லி என்கிட்ட அழுதா!…..

…… Please ரமீஸ் உங்களுக்காகவும் உங்க மீது அக்கற படுறவங்களுக்காகவும் ஒரு நள்ள முடிவ நீங்க எடுக்கனும். மறுபடியும் உறுதியா சொல்றேன் ரைஹானாக்கு ஒரு freedom ஆன best life க்கு வல்லாஹி நான் உத்தரவாதம் தாரேன். But மனசளவுல அவ freedom ஆக நீங்க help பண்ணனும்!” 

என்ற சம்சுதீன் ஹாஜியாரை அதிசயமாக பார்த்தான் ரமீஸ்.

“அல்ஹம்துலில்லாஹ். நான் கூட இந்தளவு பெருந்தன்மையா நடந்துப்பேனோ எங்கிறது வல்லாஹி சந்தேகமா இருக்கு! ரைஹானாக்கு திருமணம் ஆனது தெரிஞ்சப்புறம் அந்த நிகழ்வுகளால ஏற்பட்ட காயம் இருந்திச்சு தவிர காதல் எங்கிற விஷயத்தில தோத்துப்போனதயும் கலாகத்ரோட முடிவையும் ஏத்துகிட்டன்! But இந்த விசயத்தால அவங்க வாப்பா கிட்டயிருந்து கைமாறி இன்னொரு சோதனைக்குள்ள மாட்டியிருந்தா? என்ற கவலையும் பயமும்தான் என்னோட குற்றவுணர்வுக்கு காரணமா இருந்திச்சு….. butஅது வெறும் Imagination என்கிறத உங்கள விசாரிச்சப்பவும் உங்க கூட பேசினப்பவும் புரிஞ்சுகிட்டேன். நிச்சயமா என்கிட்ட காதல் காதலி எங்கிற feeling இல்லாம போயிட்டு சம்சுதீன் ஹாஜியார்!”

என்றவனை பார்த்து…

“ஒரு Best Friend அ இப்படியா அவமதிப்பீங்க ரமீஸ்!? Call me சம்சுதீன் or டேய் மச்சான்.” 

என்றவரை பார்த்து மகிழ்ச்சியுடன் மெல்லச் சிரித்துவிட்டு….

“சம்சுதீன் மச்சான்… ரைஹானாட்ட சொல்லுங்க I am now ok ன்னு. கூடிய சீக்கிரம் வீட்டில பார்க்கிற பொண்ண திருமணம் முடிக்கிறதாவும் சொல்லுங்க!” 

என்ற ரமீஸை ஆரத்தழுவி முஸாபஹா செய்தார் சம்சுதீன்.

“சரி வாங்க இந்த சந்தோசத்த என் வீட்டுக்கே போய் கொண்டாடுவோம். ரைஹானாவும் சந்தோசப்படுவா!”

என காரை start செய்தவாறு கூறிய சம்சுதீனை பார்த்து…

“இன்ஷா அல்லாஹ் கட்டாயம் வருவேன் விருந்தே சாப்பிடுவேன் என் wife கூட வந்து!” 

என்றவனை பார்த்து…..

“இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் கட்டாயம் கட்டாயம்…. ஆ இன்னொரு request என்னன்னா சில்மியாவோட phone number இருக்குமா? அந்த ஆத்ம Friendship னையும் சேர்த்து வச்சதா போயிடும்!” 

என்றவரிடம் தன்னுடைய Mobile ல் இருந்து number கொடுக்க அவர் save பண்ணினார். Center வந்து சேர்ந்ததும் மனதில் இருந்த ஒரு பெரிய சுமை இறங்கியது போல ரமீஸிற்கு தோன்றியது. அடுத்து இரண்டு நாளில் வரும் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்று அவங்க விரும்பின ஒரு பெண்ணை பேச சொல்ல வேண்டும் என மனதில் நினைத்தவாறே திருப்தியோடு பணிகளில் ஈடுபட்டான். 

மறுநாள் சுபஹ் தொழுது வந்து பள்ளிக்கு பக்கத்து கடையில் tea குடிக்கும் போது ரமீஸின் Mobile அழைத்தது சில்மியா…..

“அஸ்ஸலாமு அலைக்கும் நாநா congratulations நாங்க இப்போ உங்களுக்கு பொண்ணு பார்க்க புறப்படுறோம். அனேகமா ஒரு கிழமையில கல்யாணம்னு பெரியப்பாவும் வாப்பாவும் பேசிகிட்டாங்க!” 

என்று இவனுக்கு பதில் ஸலாம் கூட சொல்ல அவகாசம் கொடுக்காமல் அவளது வழமையான கறார் style ல் பேசிவிட்டு phone னை cut ஆக்கினாள். சிறிது நேரத்தில் மறுபடியும் call இது சலீம்….

” அஸ்ஸாமு அலைக்கும் மச்சான்… அல்ஹம்துலில்லாஹ் மாப்ள எங்க என் மகனுக்கு உன்னோட மகள தராம போயிடுவியோன்னு பயந்திட்டன்! யா அல்லாஹ் இவனுக்கு மூத்தது பொம்புள புள்ளையா எனக்கு மருமகளா பிறக்கனும்!”

என்றுவிட்டு phone னை cut ஆக்கிவிட்டான். சற்று நேரத்தில் மறுபடியும் call அதுவும் வெளிநாட்டு call அது பஸ்லியாவின் கணவன்…

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் ரொம்ப சந்தோசம் but next week எங்கிறதால என்னால வர முடியல மிச்சத்த பிறகு பேசறேன்!” 

என கூறி cut பண்ணிவிட்டார்.

என்னதான் நடக்கிறது என்று எதுவும் ரமீஸிற்கு புரியவில்லை. Office நேரம் வேலையில் மூழ்கி இருந்தபோது மறுபடியும் சில்மியாவின் call…

“அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க  எங்க இருக்கீங்க நானா?” 

என்ற கேள்வியுடன்…

“வஅலைக்குமஸ்ஸலாம் நான் office ல வேலம்மா என்ன விசயம்?” 

என்றான் இவன். சில்மியா 

“அப்படியே கொஞ்சம் வெளிய வாங்க!”

என்றதும்…. பல கேள்விக்குறிகளோடு வெளியே வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி! முழு குடும்பமும் வந்திருந்தது. இவன் அருகே சென்றதும் தந்தை…

“மகன் உங்களுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்!” 

என்றதும் இவனுக்கு இன்னும் அதிர்ச்சி!

“நாங்க வந்து பார்த்து எல்லாம் ok வார கிழமை நிக்காஹ் எடுக்கிறதுதான் பாக்கி!” 

என்றார் சிற்றப்பா! இதென்ன இவ்வளவு அவசரமா எப்படி இங்க…. என ரமீஸ் குழப்பத்தில் இருந்தபோது மறுபடியும் call. அது சம்சுதீன் ஹாஜியார்…..

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் confused ஆ இருப்பீங்க நடந்தது என்னன்னா நேத்தைக்கு சில்மியாட phone number வாங்கி ரைஹானா கிட்ட குடுத்தனா அவ பேசிட்டு உடனே புறப்பட்டு அங்க போயி நடந்தத சொல்லி அதுக்கப்புறம் நீங்க திருமணம் முடிக்க ok ஆனதை சொன்னதும் ரொம்ப சந்தோச பட்டாங்க. அவசரமா பொண்ணு பார்க்கிற சோலியையும் அவங்களுக்கு குடுக்காம நாங்களே எடுத்துகிட்டோம்! இன்றைக்கு காலையோட வந்து சுடச்சுட எல்லா விசயத்தையும் முடிச்சுட்டு தான் அங்க வந்திருக்காங்க. ஒப்பந்தம் முடிஞ்சி Wedding confirm நீங்க சொன்ன வார்த்தை தவற மாட்டீங்கன்னு ரைஹானா சொன்னா…. உங்க உம்மா வாப்பா சாச்சா சாச்சிக்கு முழு சம்மதம். பொண்ணு கூட நீங்க நேரடியா கண்டில்லாட்டியும் உங்களுக்கு தெரிஞ்சவங்க தான். But எல்லா வகையிலும் perfect. So நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோட இன்னைக்கே விருந்துக்கு வாறீங்க சரியா நேர்ல பேசலாம் வாங்க!” 

என்றுவிட்டு phone கட்டானது. 

“நீங்க என்ன மகன் சொல்றீங்க?” 

என்று அவனது தாய் கேட்க.

“உங்களுக்கு ok னா எனக்கும் ok”

என்றான். மனதுக்குள் கண் காணாத அந்த மனைவியாகப்போகும் காதலியை வரைய நினைத்தான்…. உருவம் தெரியாத காதல் வரைபுக்குள் முகம் வரமறுத்தது. Office வேலையை அவனது assistant இடம் ஒப்படைத்துவிட்டு வண்டியில் ஏறி குடும்பத்தினர் சகிதம் சம்சுதீன் வீட்டுக்கு புறப்பட்டான். அவள் எப்படி இருப்பாள் என ஓடிய மனத்திரையில் அவள் வருவதாக இல்லை. அவனது தோளை மெதுவாக தட்டிய சில்மியா….

“நாநா நாங்க பார்த்திட்டோம் நீங்க பார்க்க வேண்டாமா? அதுதான் ஒரு Photo வ அங்கிருந்து சுட்டுட்டு வந்துட்டேன்!” 

என்று மெதுவாக காதில் கிசுகிசுத்தவாறு அந்த கவரை அவனது கையில் கொடுத்தாள். கவரை பிரித்து பார்த்ததும் கனவுத் திரையில் நிஜமாக அவள் ஓடத் தொடங்கினாள்.

“நாநா மின்ஹா மைனி என்னப்போல ரொம்ப கறாரான correcter. நம்ம family க்கு ரொம்ப பொறுத்தம்!” 

என்றதும் மின்ஹா…….!!! ஓ அந்த சுய தொழில் ஜான்சி ராணியா!? என்று எல்லாம் புரிந்து போனது. அடுத்தவாரம் கைப்பிடிக்கும் வரை காத்திராமல் அந்த beauty with bold உடன் மீண்டும் ஒரு உணர்வின் விடுகதை ஆரம்பமானது.

முற்றும்…

எம்.யூ.ஏ.ரஹீம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!