உணர்வுகளின் விடுகதை 18

உணர்வுகளின் விடுகதை - 18

(தொடர்கதை EP 18)


சிற்றப்பாவின் பின்னாலேயே சென்ற சலீம்…..

“சாச்சா என்ன நடந்திச்சு?”

என்று கேட்கவும்….

“எல்லாம் சிலரோட வரட்டு பிடிவாதத்தாலயும் இன்னும் சிலரோட அவசரத்தாலயும் வாரது வண்டி Accident ஆகி ரமீஸ் நீர் கொழும்பு hospital ல இருக்கான். இப்போ அடுத்தவங்களுக்கு இத சொல்லி பதற்றபடுத்தாதீங்க!”

என சிற்றப்பா சொன்னவுடன் சலீமுக்கு tension high digress அதிகரித்தது.
“சாச்சா அவனுக்கு ஒன்றுமில்லையே?”

என்ற சலீமிடம்…

“கலாகத்ரல எது எது எழுதியிருக்குன்னு தெரியாது. கொஞ்சம் கடுமைன்னு தான் call வந்திச்சி!”

என சிற்றப்பா சொன்னதும்…. சாலிஹ் நாநா மீது கோபம் அதிகமாக பல்லை நற நறவென கடித்தான் சலீம்.
வாகனம் புறப்பட்டதும் புதிரும் திகைப்பும் கலந்த நிலையில்….

“இப்போ என்னதான் நடந்திச்சு!?”

என்ற சில்மியாவின் கேள்விக்கு சிற்றப்பா மெளனத்தையே பதிலாக தந்தார். அவருக்கு கோபம் உச்சமாக அதிகரித்தால் இவ்வாறுதான் மெளனமாகிவிடுவார். நிலமையை உணர்ந்த சிற்றன்னை இதற்கப்பால் கேள்வி கேட்காதே என்ற வகையில் சில்மியாவை கைகளால் மட்டுப்படுத்தினார். குழப்பத்தில் இருந்த ரமீஸின் தந்தையை பஸ்லியாவின் கணவர்….

“ஏதாவது சின்ன பிரச்சினையா இருக்கும் போய் பாத்துக்களாம் எனக்கும் வத்தள மீகமுவ side ல எனக்கும் ஆக்கள் இருக்காங்க!”

என சமாதானப் படுத்தினார். சிற்றன்னையின் தோளில் சாய்ந்த ரமீஸின் தாயை அவர் ஆறுதல்படுத்தினார். வாகனம் விரைவாக நகர்ந்தது.

“சலீம் மகன் பொம்புளைங்கள இப்போ கூட்டிப்போக முடியாது எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வீட்டில விட்டுட்டு போவம்!”

என்று மீகமுவ வந்ததும் சிற்றப்பா கூறவும் அதற்கு தலையசைப்பினால் சரியென தலையாட்டினான் சலீம். அவ்வாறே ஏற்பாடுகளை செய்துவிட்டு ரமீஸின் தந்தை சிற்றப்பா சலீம் பஸ்லியாவின் கணவன் ஆகிய நால்வர் மட்டுமே hospital சென்றனர். அங்குள்ள சம்பிரதாயங்கள் முடித்து ரமீஸை தேடினார்கள். அப்போதுதான் அங்கே ரைஹானாவின் மாமா எதிர்ப்பட்டு இவர்களை நோக்கி வந்தார். அவரை கண்ட உடனேயே சலீம் பாய்ந்து சென்று அவரது சட்டையை பிடித்து….

“நீங்க தாண்டா ரமீஸிற்கு ஏதாவது செஞ்சிருக்கனும் என்னடா செஞ்சீங்க?”

என்றபோது சிற்றப்பா குறுக்கிட்டு….

“சலீம் சலீம் அவசரப்படாதீங்க மகன் எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டா எப்படி? அவர் அப்படியானவர்னா இப்ப நம்மல பார்த்துட்டும் தேடிவர அவசியமில்ல!”

என்றபோது….

“சலீம் sir முதல்ல நீங்க ஒரு sir! கண்ணால காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் எங்கிறத மறந்துடாதீங்க. எல்லாத்தையும் விபரமா சொல்றேன். முதல்ல ரமீஸ் மகன வந்து பாருங்க!”

என்றார் ரைஹானாவின் மாமா. காயங்களுக்கு கட்டுக்கள் போடப்பட்ட நிலையில் Hospital bed ல் உறங்கி கொண்டிருந்தான் ரமீஸ். அவனது கனவில் ஒரு புறாவை பருந்து கால்களில் பிடித்து செல்வதுபோல் காட்சிகள் விரிந்தன. உற்றுப் பார்த்தபோது புறாவின் முகம்மாறி அது ரைஹானாவாக தெரிந்தது. எழுந்து அதை பிடிக்க முயன்றான் முடியவில்லை. ஆனால் வெளிப்பார்வைக்கு கைகால்களை அசைப்பது போலவும் ஏதோ சொல்ல வருவது போலவும் தெரிந்தது.

“ஏதோ அவர் செய்த நன்ம அடி பலமா படல. அவரால பேசக்கூட முடியும். எதையும் அவர்கூட பேச மனசு இடந்தரல. ஆனா முழுசா சாதாரண நிலைக்கு வர குறைஞ்சது இரண்டு மாசமாவது ஆகும். என்று Doctor சொன்னார். உங்க நம்பர் தெரியாததால இங்கிருந்து சிலாப Police மூலமா நான்தான் உங்க பெயர் விபரத்த சொல்லி தகவல் தந்தேன்!”

என்ற ரைஹானாவின் மாமாவை சற்று கோபத்துடன் பார்த்த சலீம்….

” நீங்களும் சேர்ந்து தானே ரமீஸ் கூட போனீங்க!? உங்களுக்கு அடிபடாம அவனுக்கு மட்டும் எப்படி பட்டது?”

என்றதும்….

“கேள்வி சரிதான் ஆனா ஒரு ஐந்து நிமிச இடைவெளியில எல்லாம் நடந்திச்சு! கொஞ்சம் அவசரம்னு ஒரு கடையோரமா நிறுத்த சொன்னேன் நான் Toilet போயிட்டு வாரத்திக்கிடையில லொறிக்காரன் ஒருத்தன் பின்னாடி வந்து இடிச்சுட்டான்!”

என்றவரிடம்….

“சரி அப்போ ரைஹானா எங்க?”

என சிற்றப்பா அடுத்த கேள்வியை கேட்டார்.

“ரைஹானாவும் தங்கச்சியும் அங்க இல்ல அவங்கள வேற எங்கயாச்சும் மச்சான் அனுப்பியிருக்காரு. திரும்பி வர்றப்ப தான் இது நடந்திச்சு!”

என அவர் சொன்னதும் எல்லோரும் உண்மையை புரிந்து அமைதி காத்தனர்.

“எப்படியோ என் புள்ள இந்தளவோட தப்பினதுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லனும். யா அல்லாஹ் அவனை பழைய நிலமைக்கு கொண்டுவந்திடு”

என கண்ணீர்மல்க ரமீஸின் தந்தை துஆ செய்தார். அன்று மாலை கண்ணீரும் கவலையும் சூழ எல்லோரும் வந்து பார்த்தபோது ரமீஸ் ஒரு மெல்லிய புன்னகை தவழ சலீமை சிறிய தலையசைப்பினால் அருகில் அழைத்து….

“மச்சான் இந்த கலாகத்ர தேடித்தான் நான் என்னோட நேர்மையை விட்டுட்டு வந்தேன். Now understand everything இன்னம் கொஞ்ச நாள்ள இன்ஷா அல்லாஹ் சரியாகிடுவேன்” என்றவாறு அவனது கையை மெதுவாக அழுத்தினான். பின்னர் சில்மியாவை அழைத்து….

“Sorry மா சரியோ தப்போ Maximum உன் friend க்காக முயற்சி செய்தேன்!”

என்றதும் அவள் விம்மியவாறு…

“No நாநா எனக்கு அதே கெத்தோட அந்த ரமீஸ் நாநாவா நீங்க வரணும்!”

என்றாள். ஒருவாரத்தில் அங்கிருந்து discharge ஆகி ஒன்றறை மாதத்தில் அவன் பழைய நிலைக்கு மீண்டபின் ரைஹானா பற்றி கிடைத்த கடைசி தகவல் அவளுக்கு திருமணமாகி விட்டது என்பதும், சிற்றப்பாவின் ஊரிலிருந்தும் சாலிஹ் நாநா தன் வீடு வளவை வித்துவிட்டு போய்விட்டார் என்பதுமேயாகும். ஒருவகையில் ஏதோ ஒரு குற்றவுணர்வு ரமீஸை தாக்க எதிலும் பிடிப்பற்ற தன்மையில் இருந்தான். இவனை இப்படியே விடுவது சரியல்ல என்பதை குடும்பம் உணர்ந்து பஸ்லியாவின் கணவனின் முடிவில் அவர் அவரது முழு முயற்சியில் இவனை கட்டாருக்கு அழைப்பித்துக் கொண்டார்.

கட்டாரிலிருந்த அந்த நான்கு வருடங்களில் இரண்டு வருடத்தில் இரண்டுமாத விடுப்பில் வந்து எல்லோருடனும் சந்தோசமாக இருந்துவிட்டு கூட போனான். ஆனால் எத்தனை மாற்றங்கள் சில்மியாவின் திருமணம் பஸ்லியாவின் குழந்தை சலீமின் குழந்தை Internet, email, face book , whatsapp…. அரசன் முதல் ஆண்டி வரை Mobile phone. ….. என ஏகபட்டவை ஆனால் ரைஹானாவின் நினைவுகள் மட்டும் அவனிடமிருந்து நகர மறுத்தது. அவனது திருமணம் பற்றி மட்டும் யார் குறிப்பிட்டாலும் ஒரு புன்முறுவலுடன் கடந்து விடுவான். அவனிடம் பத்திரமாக இருந்த அந்த letter னை எடுத்து படித்து பார்ப்பான். ஆம் அவன் ஒரு கவிஞனாகவும் மாறிவிட்டான்!

‘நினைக்க முடியாத தூரத்தில்
என் மறக்க முடியாத கவிதை நீ!’

என்ற அவனது கவிதை தொகுப்பு பலத்த வரவேற்பை கூட பெற்றது.

‘நெருங்க முடியாத தூரத்தில்
தொலைந்துபோன என்
கன்னிக் கவிதை நீ!
உனக்காக நொருங்கிப் போய்
நிராசையின் கண்ணீரில்
என் தேடல்களும் மூழ்கிவிட்டன!’

போன்ற கவிதைகள் அவனது மனப்பாதிப்பை எடுத்துக்காட்டியது. மறுபடியும் இலங்கை வந்து தன் பழைய பணியை தொடர நினைத்தான். அவனது திறமை காரணமாக மீண்டும் சேர்க்கப்பட்டான். முதல் பணியாக தென்பகுதியில் ஒரு பின்தங்கிய முஸ்லிம் கிராமத்தில் field work அங்கு குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு சுய தொழில் வாய்ப்பாக தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி. அங்கு சென்றபோது எதேச்சையாக பலருக்கு மத்தியில் அதே கண்களை சந்தித்த அதிர்ச்சி……!

‘ஆம் அது ரைஹானா’ என மனது அடித்து சொன்னது. மறுபடியும் தேடியபோது அந்த தேடல் பொய்யானது. தன் money pursue ல் இருந்து அந்த கடிதத்தை எடுத்து சிந்தித்தபோதே flash back ஆக அந்த வரலாறே வந்துபோனது. மனதில் ஏதோ பொறிதட்ட அந்த பகுதிக்கான நிறுவன பொறுப்பாளரிடம்…..

“இந்த project க்காக வந்த application களை கொஞ்சம் தரமுடியுமா” என்று கேட்டான்.

தொடரும்...

எம்.யூ.ஏ.ரஹீம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!