உணர்வுகளின் விடுகதை - 16
(தொடர்கதை EP 16)

ரமீஸிற்கு இருப்புக் கொள்ளவில்லை…. எப்போது அந்தியாகும் எப்போது ரைஹானாவை சந்திப்பதென இருந்தது! தான் போகும் வழி சரிதான் என்ற நம்பிக்கை தவிர ஏனையவை எல்லாம் Negative ஆக போவதாக ஓர் உணர்வும் ரோஜாவான ரைஹானாவின் நினைவுகளோடு முல்லாக குத்தியது. அப்போது….
“டேய் ரமீஸ்! அந்த ஜில்மால் சாலி நாநாவ நம்பேலா! யோசிக்க ஒன்னுமில்லை நாங்க சொன்ன plan க்கு ok ஆகு இன்ஷா அல்லாஹ் மிச்சத்த நாங்க பார்த்துக்கிறோம்!”
என்றான் சலீம்.
“ஆமா மச்சான் உங்க முடிவுதான் இப்போ தேவை!”
என பஸ்லியாவின் கணவன் கூற….
“ஒரு தப்பான rootல போறதா feeling”
என்றான் ரமீஸ்.
“நாநா ஒன்ன புரிஞ்சுகங்க இந்த தப்புல உங்களுக்கும் பெரிய பங்கிருக்கு நீங்க அப்படின்னா ரைஹானா கூட deal பண்ணாம அவ வாப்பாகிட்ட போய் பொண்ணு கேட்டிருக்கலாம். அப்போ இவ்வளவு தூரம் வந்திருக்காது!”
என்றாள் பஸலியா.
“கதைய விடுங்க தைரியம் இல்லாதவங்க தங்களையும் காயப்படுத்தி தங்கள நம்புறவங்களையும் காயப்படுத்துவாங்க. இவரை நம்பியதுக்கு அவளுக்கு வேணும். அவளுக்கு நம்பிக்கையூட்டினதுக்கு எனக்கும் வேணும்!”
என்றாள் சில்மியா. சிற்றப்பா சின்னம்மா வந்திருந்த தாய் தந்தை என எல்லோரது முடிவின் சாரம்சமும் அவர்கள் எடுத்த முடிவுக்கு ரமீஸை சம்மதிக்க வைப்பதாகவே இருந்தது. இதற்கு சம்பந்தமில்லாமல் ஒரு பந்தை சுவற்றில் அடித்து catch பிடித்து கொண்டிருந்த தம்பியும் ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு என்ற வகையில் தனது செயல்களின் விளைவுகளே இன்றைய சிக்கல்களின் காரணம் என ரமீஸிற்கு உணர்த்துவது போல் இருந்தது!
“Ok ok எனது பாதைக்கும் மனசாட்சிக்கும் விரோதமா இருந்தாலும் நான் குத்தவாளியாக விரும்பல!….அதாவது என்னால ரைஹானா பாதிக்கப்படக்கூடாது எங்கிறதுக்காக…. நீங்க சொல்ற முடிவுக்கு கட்டுப்படுறேன்.”
என ரமீஸ் சொல்ல அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அவனது குடும்பத்தினர் தயாரகினர். காதல் என்ற ஒன்றுக்காக அவன் செய்த மிகப்பெரிய சமரசமாக அது இருந்தது!
“மகன் அடுத்த விசயங்கள் எதுக்கும் நீங்க கவலப்படாதீங்க இன்ஷா அல்லாஹ் நாங்க பார்த்துக்கிறோம் அந்த பிள்ளையோட வாப்பாவ போல வரட்டு பிடிவாதமெல்லாம் பிள்ளைங்க வாழ்க்கைய பாதிக்கும்னு புரிய கொஞ்சம் காலம் எடுக்கும்! அதுதான் சொந்த தாய்மாமனே இந்த கல்யாணத்த செஞ்சு தாரதா வாக்குறுதி தந்திருக்காறே! “
என சிற்றப்பா தைரியமூட்டினார். ளுஹர் தொழுததில் இருந்தே ரமீஸ் அந்த சந்திப்புக்கு தயாராக இருந்தான். சலீமை சிற்றப்பா ஏதோ வேலைக்காக அழைக்க அவனும் சென்றுவிட்டான். சிறிது நேரத்திலேயே மறுபடியும் ஒரு கல்யாண களையை அந்த வீடு அடைந்தது. என்னயிருந்தாலும் தனது முடிவில் சந்தோசத்திற்கும் குழப்பத்திற்கும் நடுவில் நின்றான் ரமீஸ்.
“நாநா happy யா இருங்க. ஆ கேட்க மறந்திட்டேன் அன்னைக்கு sweet எப்படி இருந்திச்சு?”
என சில்மியா கேட்க அவன்….
“ம்ம்ம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துது!”
என இவன் சொல்ல….
“அடடா அது Sweet பாறுக் நாநா கடையில தம்பிகிட்ட சொல்லி வாங்கினது! ஒரு extra feeling னை உருவாக்க நானே போட்ட plan… பாவம் ரைஹானாக்கு கூட தெரியாது!”
என சில்மியா கூற அவளது தலையில் ரமீஸ் ஏமாற்றம் கலந்த நிலையில் குட்டவென…. தொடர்ந்த கலகலப்பான பேச்சுகள் அஸருக்கு அதான் சொல்வது வரை நேரம்போவதை கூட தெரியாமல் செய்தது! பள்ளிக்கு போவதை தவிர்த்து வீட்டில் தொழுதான். சற்று நேரத்துக்கெல்லாம் இவனுக்கும் ரைஹானாவுக்கும் தேவையான உடைகள் இதற பொருட்களென எல்லாம் கொண்டுவரப்பட்டது. ரைஹானாவின் பெட்டி கூட தயார் செய்யப்பட்டது.
“இது மைனிக்கு”
என ஒரு சோடி வளையல்களை கழட்டி வைத்தாள் பஸ்லியா.
“இது என்னோட best friend க்கு”
என தனது chain னை கழட்டி வைத்தாள் சில்மியா. இதுபற்றி எதுவும் தெரியாமல் ரமீஸ் அந்த சந்திப்புக்கு தயாராகி கொண்டிருந்தான். ‘சிலநேரம் இறைவன் நாடினால் அந்த சந்திப்பு தன்னோட நேர்மையை வெற்றியடைய வைக்கும் என கடைசிக்கட்ட நம்பிக்கை அவனுக்கிருந்தது.
அவர்கள் குறிப்பிட்ட ஐந்து மணிக்கு பதினைந்து நிமிடங்கள் இருக்க புறப்பட தயாரானான் ரமீஸ்.
“மகன் சாச்சா vanல போயிட்டு வரச்சொன்னார். கவனமா போயிட்டு வாங்க!”
என தாயும் சிற்றன்னையும் வழியனுப்பினார். சலீமுடன் புறப்பட்டான். அந்த private hospital தெரியும் தூரத்தில் அதற்கு எதிர்ப்பக்கமாக வண்டியை நிறுத்தி விட்டு hospital பக்கமாக அவதானித்து கொண்டிருந்தனர்.
“மச்சான் some times அவங்க உள்ள போயிருக்கலாம்னு தோனுது!”
என்ற ரமீஸின் வார்த்தைகளை நியாயம் கண்டு…..
“ம்ம்ம் நான் முன்னாடி போய் பார்த்திட்டு உனக்கு Signal தரும்போது வா!”
என கூறியவாறு சலீம் இறங்கி பாதைமாறி hospital க்குள் நுழைந்தான்.
இது நடந்து ஐந்து நிமிடங்கள் செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் hospital முன் ரைஹானாவின் மாமா வந்திறங்கியதை அவதானித்தான் ரமீஸ். அவர் உள்ளே சென்று சிறிது நேரத்தில் சலீம் வந்து இவனை அழைப்பது தெரிந்தது. வண்டியை விட்டும் இறங்கி வீதியை கடந்து hospital க்குள் சென்றதும், அங்கு ரைஹானாவின் மாமாவுடன் நின்ற சலீம் இவனைப்பார்த்து…
“டேய் உனக்கு அப்பவே சொன்னன் தானே அவரை போய் பார்க்கிறது சிக்கல்னு! இப்போ எல்லாமே சொதப்பி போச்சு!”
என்று hospital என்றும் பாராமல் கோபத்தில் கத்தினான் சலீம்.
“சரி சரி இப்ப என்னடா நடந்திச்சு!?”
என்ற ரமீஸை மேலும் கீழும் ஒருதடவை ஏற இறங்க பார்த்த சலீம்…..
“நீங்களே சொல்லுங்க”
என ரைஹானாவின் மாமாவை பார்த்து சலீம் கூற…
“இல்ல மகன் நீங்க வந்திட்டு போனதும் அவரோட சந்தேகம் அதிகமாயிட்டு! அடுத்த இரண்டு மணி நேரத்தில தங்கச்சியையும் மருமகளையும் யாரையோ call பண்ணி அழைச்சு அவங்க கூட அனுப்பிட்டாரு! அவர் அந்த Business partner ஆ தான் இருக்கனும். அவரோட மகனத்தான் ரைஹானாக்கு கட்டி கொடுக்கிறதா இருக்காரு. வழமைக்கு மாத்தமா எனக்கு புடிக்கலைன்னு மருமகள் கொஞ்சம் நேரடியாவே அடம்பிடிச்சா! அதுல வந்த சந்தேகம் தான் ஏதாச்சும் இருக்குமோ என மச்சான சந்தேகப்பட வச்சுது….
இந்தியாவுக்கு போன நேரத்தில தான் சும்மா அவங்களுக்க பேசிகிட்டாங்க போல இங்க வந்து சூழ்நிலை அவருக்கு பாதகமா இருக்கு. அத்தோட உங்க சாச்சாவும் பெண் கேட்டுவர நிலம அவரோட கையவிட்டு போறத புரிஞ்சிட்டாரு”
என்றவரிடம்…
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
என்றான் ரமீஸ்.
” நான் இதுல சம்பந்தம்னு தெரியாது. அதனால இந்தியால பேசின விசயத்தை எங்கிட்ட சொன்னாரு. உங்க சாச்சா இந்த ஊர்ல சகல வழிகளிலும் செல்வாக்கான ஆள்னு மச்சானுக்கு தெரியும். அதனால இந்த பக்கம் சாய்ரதுக்கும் வசதியா ஒரு plan இருந்திச்சு. அனேகமாக அந்த Business dealing ல இருக்கிற ஏதோ ஒன்னு அவங்க பக்கத்துக்கு சடார்னு சரிச்சிட்டு. தங்கச்சியும் மருமகளும் வழமைக்கு மாத்தமா முரண்டு பிடிக்க உசாராகிட்டாரு. இந்த வீட்ட விக்கிறதுக்கு கூட ஏற்பாடு செஞ்சிட்டாரு.”
என்றார் அவர்.
“இப்போ அவங்கள எங்க கொண்டு போயிருப்பாங்க?”
என்றான் ரமீஸிடம்….
“அவங்கள வத்தளைக்கு தான் கொண்டு போயிருக்கனும். அங்க மச்சானுக்கு ஒரு வீடிருக்கு அந்த Business partner கூட வத்தளைதான்!”
என்றவரை பார்த்து…..
“அந்த வீடு தெரியுமா?”
என்றான் ரமீஸ்.
“ம் சில தடவ போயிருக்கேன்!”
என்றார் அவர்.
“இப்ப அங்க போனா ரைஹானாவ என் கையில ஒப்படைக்க முடியுமா?”
என கோபமும் தெளிவான முடிவும் தெரிக்க கண்கள் சிவந்து கேட்டான் ரமீஸ்.
“ம் இன்ஷாஅல்லாஹ் ஏற்கனவே பேசி செய்த முடிவுதான். நான் இதுல சம்பந்தப்பட்டுள்ளது மச்சானுக்கு தெரியாது. அதனால மருமகளை உங்க கிட்ட ஒப்படைக்கிறது என்னோட பொறுப்பு!”
என்றார் அவர்.
“மச்சான் சலீம் இன்னும் 5hrs க்குள்ள ரைஹானாவோட வீட்டுக்கு வாரண்டு போய் சொல்லு. நீங்க வாங்க!”
என ரமீஸ் கூற…
“மச்சான் நானும் வாறேன்”
என்றான் சலீம். அதற்கு….
” இல்ல மச்சான் நீ இங்க இருந்து அவர watch பண்ணு. சாச்சாவுக்கு பழக்கமான அந்த Police காரர்கிட்ட பேசி situation னை விளங்கப்படுத்து. மேற்கொண்டு சட்டரீதியா சிக்கல் வராம என்ன செய்யலாம்னு பார்த்து செய்! இன்ஷா அல்லாஹ் நான் ரைஹானா கூட வருவேன். இது அவளோட நம்பிக்கைக்கும் அவ வாப்பாட நம்பிக்கை துரோகத்திற்கும் எனக்கும் இடையில நடக்கும் போராட்டம்!”
என்றவாறு வண்டியை நோக்கி ரமீஸ் செல்ல அவன் பின்னால் ரைஹானாவின் மாமாவும் சென்றார்.
தொடரும்…
எம்.யூ.ஏ.ரஹீம்.