உணர்வுகளின் விடுகதை 04

உணர்வுகளின் விடுகதை - 04

(தொடர்கதை EP 04)


ரமீஸிற்கு சற்று திண்டாட்டம். சலீம் ரைஹானாவிடம் ஏதாவது கேட்டுவிட்டால்…… அருகில் தங்கை வேறு இருக்கிறாள். சலீமை சாப்பிட அழைக்கும் சாட்டில் அங்கு நுழைந்தால் நல்லதெனபட்டது. 

“சலீம் மாடிக்கு போகலாம் வா அங்கதான் arrange பண்ணியிருக்கு!”

என்றவாறு இவன் செல்ல ரைஹானா தங்கையின் கையை பிடித்து இழுத்து….

“வா நாங்க போவோம்” 

எனக் கூறி பதற்றத்துடன்…. 

“ஏன்டி!?” 

என்று தங்கை கேட்டதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக இவனை தாண்டி உள்ளே சென்றனர். அதுவும் நல்லதுக்குதான் என மனதின் ஒருபக்கம் சொல்ல இன்னொரு பக்கம் அடடா அருகாமை தரிசனத்தை missed பண்ணிட்டோமே என்றிருந்தது.

“அட ஏன்டா முகத்தில விறைப்புக் காட்டி அந்த புள்ளைய பயங்காட்றே!” 

என்ற சலீமுக்கு 

“நீ தானே பசிக்குதுன்னு சொன்னே!?”

என்றான் ரமீஸ். 

“சுத்தம்! அதுக்கு! இடியாமீன் மாதிரி காட்டுக்கத்தல் கத்தனுமாடா!? மெதுவா ஒரு புன்னகையோட வந்து சொல்லி இருக்கலாம் தானே! நிதானத்தை பத்தி பலதடவை எனக்கே Advice பண்ணிய நீ எதுக்குடா tension ஆகுறே!” 

என்றதற்கு….. 

“இல்ல மச்சான் நீ எதையாச்சும் கேட்டு விடுவியோ என்ற பயம்தான்!” 

என்றான் இவன். 

“கிழிஞ்சிது போ! அவ்வளவுக்கு இங்கிதம் தெரியாமயா இருக்கேன்!? அதுவும் சில்மியா தங்கச்சிய பக்கத்தில வச்சுகிட்டு…..! நீ ரொம்ப குழம்பி போய் இருக்க! முதல்ல நிதானத்துக்கு வாடா!”

என்ற சலீமை பார்த்து…. 

“Sorry டா வா சாப்பிட!” 

என்றவனிடம் 

” Sorry கீறி பூரி மண்ணாங்கட்டி அதெல்லாம் நமக்குள்ள தேவையில்ல ஆனா உனக்கென ஒரு Image இருக்கு அத damage பண்ணிக்காத!”

என்றவனிடம்….. 

“ம்ம்ம் இன்ஷா அல்லாஹ்” 

என கூறியவாறு இருவரும் மாடிப்படியை நோக்கி நகர்ந்தனர். இந்த தப்புகளுக்கு மிக அவசரமாக பரிகாரம் தேடிக்கொடுக்கும் அவசியத்தை சலீம் உணர்ந்தான். 

அன்றிரவு மருதாணிக் கல்யாணம் கலைகட்டியது. திருமணத்தில் சில சம்பிரதாயங்கள் தேவையற்றதுபோல் இருந்தாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடையாளங்களாக இருந்தன. மணப்பெண்ணை அலங்கரிக்கும் சந்தோசமான நிகழ்வை குறிப்பதே இந்த மருதாணி கல்யாணம். 

அந்த கொண்டாட்டத்தை ஒரு மார்க்கக் கடமையாக எடுக்காதவரை அதில் தப்பில்லை என்பதே ரமீஸின் முடிவு. பெண் அலங்காரம் செய்யும் அறையில் பெண்களே நிறைந்திருப்பதால் தான் தங்கைக்காக செய்த பிரேஸ்லெட்டை சிற்றன்னையிடம் கொடுத்து சேர்ப்பிக்க நினைத்தான் ரமீஸ். 

“சாச்சி இதை பஸ்லி கிட்ட குடுங்க என்னால முடிஞ்சது” 

என்றபோது…. 

“என்னடா இது! எல்லாம் நிறப்பமா இருந்தாலும் உனக்கும் கடமையும் உரிமையும் இருக்கு!” 

என்று கண்கலங்கியபடி சிற்றன்னை கூற இவனுக்கும் லேசாக கண்கள் வியர்த்தது. சற்று நேரத்துக்கு பின்னர் ஏதோ ஒரு தேவைக்காக இவன் kitchen பக்கமாக பின் வாசல் பகுதிக்கு வந்தபோது தங்கை சில்மியா எதிர்ப்பட்டாள். அவர்களுக்கு அருகில்  யாருமில்லை. 

“நாநா எனக்கு பிரேஸ்லெட் இல்லையா?”

என அவள் கேட்க….. 

“அடுத்தது உனக்கு தான் இன்ஷாஅல்லாஹ் தங்க செய்னே வாங்கி போடுகிறேன்!” 

என்று கூற…. 

“அதுக்கு முதல்ல ரைஹானாவுக்கு நாங்க போடவரும்போல!” 

என கூறி அவள் கண்ணடித்துவிட்டு நகர இவனுக்கு திக்கென இருந்தது. தன்னை சுதாரித்துக் கொண்டு….

“தங்கச்சி என்ன சொன்னீங்க!?” 

என்று கேட்பதற்குள் சில்மியா சற்று தூரத்தில் இவனைப்பார்த்து கிண்டலாக தலையை ஆட்டியவாறு செல்வது தெரிந்தது; அங்கிருந்து அவளோடு அருகே ரைஹானாவும் சென்றாள்! மீண்டும் Abnormal situation mood ரமீஸை பலமாக தாக்கியது. நடந்ததை உடனே சென்று சலீமிடம் அப்படியே ஒப்புவித்தான். 

“சரி நான் பாத்துக்கிறேன். நான் எங்கயாச்சும் அவங்க கூட பேசிகிட்டு இருக்கும் போது நீ மறுபடி கரடி மாதிரி நடுவில வராத!” என்றான் சலீம்.

வைன் கொடுத்த பொம்மை போல தலையாட்டினான் ரமீஸ். மறுநாள் சுபஹுடன் திருமண வீட்டு பரபரப்பு கலைகட்டியது. தக்கியா பள்ளிக்கு சென்று தொழுதுவிட்டு ரமீஸும் சலீமும் வரும்போது வீட்டுக்கருகில் சந்தித்த சிற்றப்பா….. 

“மகன் ஹோலுக்கு போயி பார்த்திட்டு வாங்க!” 

என்றவாறு bike key யினையும் ஹெல்மெட்டையும் கொடுத்தபோது….

“சரி சாச்சா” 

என்ற ரமீஸிடம்…. 

“நானும் வாறேன்” 

என்றான் சலீம். 

“வேணாம் மச்சான் கரடி இல்லாம இருக்கிறதுதான் better” 

என கூறி கண்ணடித்தான். 

“என்ன மகன் சொன்னீங்க!?” 

என சிற்றப்பா கேட்க…. 

“இல்ல சாச்சா சலீமுக்கு டீ குடிக்கனுமாம்!” 

என கூறி சமாளித்தான். “சரி நீங்க வாங்க மகன்” 

என சலீமை வீட்டுக்குள் அழைத்து சென்றார் சிற்றப்பா. இவனை திரும்பி பார்த்து முறைத்தவாறு சிற்றப்பாவுடன் சென்றான் சலீம். வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த bike இனை எடுத்து start செய்து பறந்தான் ரமீஸ். 

ஹோலில் ஏறத்தாழ எல்லா வேலைகளும் முடிந்திருந்தன. 6.30 மணிவரை அங்குள்ள எல்லா விசயங்களையும் கவனித்துவிட்டு புறப்பட்டான். ‘சலீமுக்கு விசயத்தை அறிந்திட ஏதாச்சும் சந்தர்ப்பம் அமைஞ்சிருக்குமா?’ என சிந்தித்தவாறே bike இனை start செய்தான். வண்டி சீறியது Main road ல் இருந்து வீட்டுக்கு செல்லும் பாதையில் நிதானமாகவே வண்டியை திருப்பும் போதுதான் அந்த விபரீதம் நடந்தது. நாயொன்று குறுக்கால் பாய்ந்ததில் sudden break போட்டாலும் கட்டுப்பாடு தவறி bike சரிந்து எதிர்பாராத அந்த விபத்து நடந்தது. நல்லநேரம் bend எடுக்கும் போது slow பண்ணியதால் ஆபத்தான விபத்தாக அது அமையவில்லை. காலில் பலத்த அடி பட்டிருந்தாலும் அந்த situation ல் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. உதவி செய்ய வந்த சிலர் hospital போகும்படி கூறியும் கணக்கெடுக்காமல். மீண்டும் bike இனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது எல்லோரும் பதறிப் போனார்கள். 

“டேய் இதுக்கு தான்டா நானும் வாரெண்டு சொன்னேன்!” 

என சலீம் சொன்னபோது இவன்….

” ஓ இவரு வந்தா அந்த நாய் நடுவில பாயாம ரோட்டோரத்தில நின்னு Good morning sir னு சொல்லி இருக்குமோ!?”

என இவனது வழமையான பாணியில் ஜோக்கடித்தான். 

“சலீம் மகன் இப்போ 3wheel வரும் hospital போய்ட்டு பாத்திட்டு வாங்க!”

என்ற சித்தப்பாவிடம்…. 

“சரி சாச்சா” 

என கூறவும் வாகனம் வரவும் சரியாக இருந்தது. செல்லும் வழியில்…. 

” நான் இங்க ரைஹானா விஷயத்தில ஒரு மாதிரியா Green signal விழ வைச்சு கொஞ்ச நேரத்தில ரத்த காயத்தோட வந்து நிக்கிறியேடா! சரி சரி அத பிறகு பேசுவம்.” 

என சலீம் சொன்னதும் வலி வேதனைகள் மறந்து….. 

“டேய் டேய் please மச்சான் என்ன நடந்திச்சு!?” என கேட்கவும் அந்த private hospital அருகில் வண்டி போய் நிக்கவும் சரியாக இருந்தது.

தொடரும்…….

எம்.யூ.ஏ.ரஹீம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!