சில்லென்று ஒரு காதல்…! 09

சில்லென்று ஒரு காதல் - 09

(தொடர்கதை EP 09)


“எக்ஸ் கியூஸ்மி இப்போ வலதுக்கு போடவா இடதுக்கு போடவா?” 

என ராசிக் கேட்டதும்…. 

” இடதுக்கு போட்டு ஒரு ரெண்டு கிலோமீட்டர் போங்க அங்க இடப்பக்கமா ஒரு லேன் வரும் அதுல போட்டு முப்பது மீட்டர் போனதும் வலதுல யெலோ கலர்ல மதில் போட்ட கேட் வரை போங்க!” 

என அலி சப்ரி சொன்னதும்… 

” ராசிக் அப்படியே போ!” 

என்றுவிட்டு…. 

” அது யாரோட வீடு?” 

என கேட்க… 

அலி சப்ரி… 

” அது எங்க வீடு அங்க போயிருந்து நிதானமா பேசலாம். அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த சொல்லனும் அது என்னன்னா நீங்க இங்க வரலைன்னா இப்போ சம்ஹாவோட தங்கச்சி சப்ரா வீட்டுக்கு வந்திருப்பா! உங்கட என்டர் மொத்த பிளான்லையும் ஒர சொதப்பல ஏற்படுத்திரிச்சி!” 

என்றதும்…. 

“புரியல! நாங்க வந்ததால கலப்ஸ் ஆச்சா? ரொம்ப குழம்புது இந்த கேள்விக்கு மட்டும் முதல்ல பதில் சொல்லுங்க இந்த பிளான் மொத்தமும் உங்களோடது தானே?” 

என்ற ரொஷானின் கேள்விக்கு… 

” ஹா ஹா ஹா என சிரித்தவாறு இந்த பிளானுக்கு சொந்தக்காரர் இப்பாே ஜமாத்தில போயிட்டாரு! அவரு மேலயும் நேரடி தப்பில்ல அவருக்கு சுயநலமா சில எதிர் பார்ப்புகள் இருக்கலாம் அது வேற விசயம்!” 

என்ற போதே… 

” இடம் வந்திட்டு!” 

என ராசிக் சொன்னதும்… 

” இருங்க கேட்ட திறக்கிறேன். உள்ள போய் ப்ரீயா பேசலாம் வீட்டில யாருமில்ல எல்லாரும் சம்ஹா வீட்ல இருக்காங்க!” 

என்றவாறு இறங்கி கேட்டை திறந்து வண்டியை உள்ளே போடுமாறு சைகை காட்டினான் அலி சப்ரி.

அந்த தோட்டம் அழகாக பராமரிக்க பட்டிருந்தது. ஒரு ரம்மியமான சூழல் அதற்கு நடுவில் வீடிருந்தது. 

” இந்த பூந்தோட்டம் அதனோட நேர்த்தி இதுல எல்லாம் என் உம்மாவோட சேர்ந்து மைனி மாரோட கைவரிசை நிறையவே இருக்கு! அதோ அந்த யெலோ ரோஸ் உங்க ஆள் சம்ஹாவோடது!” 

என்று கூறியவாறு வீட்டின் கதவை திறந்தான் அலிசப்ரி. மலர்ந்திருந்த மஞ்சல் ரோஜாவில் சம்ஹாவின் முகம் தெரிவதுபோல் ஒரு பீலிங் ரொஷானுக்கு வந்தது. 

” வா வா மஞ்சல் மலரே ஒன்னு தா தா கொஞ்சும் கிளியேன்னு பாட்டெல்லாம் வருமே!? உள்ள போடா வந்த வேலய கவனி இப்போ பிரச்சின வேறடா!” 

என்ற ராசிக்கின் பேச்சு அலி சப்ரிக்கு சிரிப்பை கொடுத்தது. வீட்டின் உள்ளேயும் எல்லாம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. 

“உக்காருங்க” 

என அலி சப்ரி கூற சோபாவில் அமர்ந்தவாறு…. 

” சரி மிகுதிய சொல்லுங்க” என்றான் ரொஷான்.

“அவங்க பிளான் படி வீட்ட விட்டு ஓடிப் போகத்தான் முடிவு. ஆனா அது உங்க கல்யாணத்தில பாதிப்ப ஏற்படுத்தும்னு தெரிஞ்சதால சின்ன தயக்கம். அதனால உங்க கல்யாணம் முடியும் வரை காத்திருக்க முடிவு செஞ்சாங்க!”

என்ற அலி சப்ரியிடம்…. 

” அவங்கன்னா ஜெசீர் அன்ட் சப்ரா அப்படித்தானே?” 

என்றான் ராசிக். அதற்கு….

“ஆமா ஆமா அவங்கதான். ஆனா டவுன்ல கோஸ் போற சாக்கில அவங்க லவ் டெவலப் ஆயிச்சு. அதுல அடிப்படையான எல்லா எல்லைங்களையும் தாண்டிட்டாங்க. அதனோட விளைவு சப்ராவோட வயித்தில வளர ஆரம்பிச்சிது!” 

என அலி சப்ரி கூறியதும்… 

“சுப்ஹானல்லாஹ்!” 

என ரொஷானும் ராசிக்கும் ஒரு சேர கூறினர். 

“உங்களுக்கே இப்படின்னா இதெல்லாம் மாமா வீட்ல தெரிஞ்சா…. எனக்கே தாங்க முடியல அதனால ஒருநாள் பிடிச்சு ரெண்டு பேரயைும் பிண்ணி எடுத்திட்டேன். ஆனா சப்ரா ரொம்ப கெஞ்சினாள் இந்த விஷயம் மட்டும் வீட்டில தெரியாம அவங்கள எப்படி சரி சேர்த்து வைக்க சொன்னாள். இதுக்கு நடுவால மூத்த மைனியோட மாப்பிளையும் எப்படியோ விஷயத்த மோப்பம் புடிச்சி வந்திட்டாரு அதுக்கு பிறகுதான் சம்ஹாவும் விஷயத்தை தெரிஞ்சுகிட்டு ரொம்ப அப்ஸட் ஆகிட்டா!” 

என அலி சப்ரி கதையை தொடர்வதற்கிடையில்…. 

” ஓ அப்படின்னா இந்த கதையில மெயின் வில்லன் யாரு?” 

என ராசிக் கேட்க…. 

” நல்லா கேட்டீங்க! இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான மெயின் வில்லங்கமே உங்க மாமா தான்!” 

என அலி சப்ரி ரொஷானை காட்டி கூற சற்று அதிர்ச்சியுடன் அவனை இருவருமே பார்த்தனர்.

” வெயிட் வெயிட்…. ப்ளீஸ் முதல்ல என்னோட ரெண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அப்பதான் குழப்பம் தீரும்! முதலாவது தன்னோட சின்ன சிஸ்டரோட நேம் சஹ்ரான்னு தான் சமி சொன்னா நீங்க புதுசா சப்ரான்னு சொல்றீங்க! அடுத்தது அவங்க பாதுகாப்பா எந்த சிக்கலும் இல்லாம இருக்கிறாங்களா?” 

என ரொஷான் கேட்க… 

” அந்த பெயர் டவுட்டால என் மைண்டில ஒரு நெருப்பே பத்திகிச்சு! ராசா அத நூத்திட்டு கதைய தொடருப்பா! என ராசிக்கும் ஒத்தூதினான்.” 

“ஹா ஹா ஹா”  என சிரித்துவிட்டு அலி சப்ரி….. 

” அது ஒன்னுமில்ல எங்க வீட்டுக்கு தான் மைனீங்க அதிகமா சின்ன வயசுல விளையாட வருவாங்க என்னவிட ஒரு வயசு குறைஞ்ச சம்ஹாட தங்கச்சிய எனக்கு அப்போ எச் பிரனவுன்ஸ் வராததால சப்ரான்னுதான் கூப்பிடுவேன். சிம்பிளா அப்படியே பழகிட்டு ரெண்டு வீட்லயும் யாரும் கண்டுக்க மாட்டாங்க. உங்க ஆளு சம்ஹாவையும் சம்பான்னு தான் கூப்பிட்டேன்!” 

என அலி சப்ரி கூற…. 

“யோவ் அது அரிசியோட பெயர்யா?” என ராசிக் கூற…. சிரிப்பு கலந்த முறைப்பு ரெஷானிடம் வந்தது. 

“சப்ரா கூட ஓகே சம்பா டூ மச்!” 

என்ற ராசிக்கை பார்த்து ரொஷான் ” டேய் கொஞ்சம் அடங்குடா!” 

எனக் கூறியதும் அலி சப்ரி தொடர்ந்தான்…. 

“கவலைப்படாதீங்க சப்ரா இல்ல இல்ல சஹ்ரா பாதுகாப்பா தான் இருக்கிறா” என்றதும் இருவரும் “அல்ஹம்துலில்லாஹ்” 

என ஒரே தடவையில் கூறினர்.

“ஜெஸீர் என்னோட கிளாஸ்மெட் ஆனா நான் ஸ்கொலர்சிப்போட ஸ்கூல் மாறிட்டேன். ஆனா மைனீங்க எல்லாம் ஊர் ஸ்கூல்லதான் படிச்சாங்க மூத்த மைனி பெரிசா படிக்கல ஓ எல் லோட நின்னுட்டா அத்தோட அவக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிது. அவக்கு மூனு வருசம் பின்னாடி சம்ஹா ஓ எல் செஞ்சப்பதான் இந்த பிரச்சினைங்க ஆரம்பிச்சிது! அப்போ ஜெசீர் பத்தாம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு சப்ரா இல்ல இல்ல சின்ன மைனி ஒன்பதாம் ஆண்டு எட்டாம் வகுப்பு…..” 

என்ற போது இடைமறித்த ரொஷான் ” ஐ ஓல்சோ அசப்டட் இனியும் நீங்க சப்ரான்னு கூப்பிடலாம்!” 

என்ற போது… 

” அப்போ சம்பா ரிஜக்டடா?” 

என ராசிக் போட்ட வெட்டு மூவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 

அலி சப்ரி தொடர்ந்தான்… 

“அப்பதான் ஜெசீர் வயசு கவர்ச்சியால சின்ன மைனிக்கு லவ் லெட்டர் குடுத்திருக்கான். அந்த லெட்டர அவ சம்ஹாகிட்ட குடுக்க அவ அப்ப வைஸ் பிரின்சி லெவல்ல இருந்த அவ வாப்பா நம்ம மாமா சாலிஹ் சேர்கிட்ட குடுக்க வில்லங்கம் அன்னையில இருந்து  ஆரம்பிச்சிது! ஜெசீர் படிப்பில பெரிசா ஜொலிக்கா விட்டாலும் ஒரு நல்ல ஸ்போட்ஸ்மன்! அண்டர் பிப்டீன்ல டிஸ்ரிக் லெவல் போனவன். ஓல் அயலண்ட் செலக்ட் ஆனவன். சின்ன வயசிலேயே வாப்பாவ இழந்ததால அவங்க உம்மா மிச்சம் கஸ்டப்பட்டு ஸ்கூல் அனுப்பினா. அவ ஒரு நல்ல தாய். ஜெசீரோட எதிர்காலம் பத்தி ரொம்ப நம்பிக்கையோட இருந்தா…”

என்றவாறு மேலும் தொடர்ந்தான். “ஆனா அந்த லவ் லெட்டர் விவகாரம் எங்க மாமாவ ஒரு பொருப்பான டீச்சரா சிந்திக்க விடல! சப்ராட வாப்பாவா மட்டுமில்லாம தன்னோட   பதவிக்கு ஒரு தருதல மாணவனால தரப்பட்ட அவமானமா நினைச்சாரு! ஆனா அவன் அப்படி இல்ல. அத்தேட தான் செஞ்சது தவறோ தவறில்லையோ என தெரியாமயே அத விட்டுட்டான்….. ம்ஹ்ம் அப்பதான் அவனோட வாழ்க்கையில அந்த துயரமான சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றா துரத்த தொடங்கிச்சு” என்றவாறு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான் அலி சப்ரி.

தொடரும்….

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!