சில்லென்று ஒரு காதல்…!  08

சில்லென்று ஒரு காதல் - 08

(தொடர்கதை EP 08)


ரொஷான் வந்தது இருந்த பதற்றத்தையும் கவலையையும் அங்கு அதிகரித்தது. 

“என்ன மருமகன் திடீர்னு இந்த பக்கம்?” என்ற சம்ஹாவின் தந்தையின் விசாரிப்பு ஒரு செயற்கை தனத்தை காட்டியது. அதே ரிஆக்ஸனுடன் ” இல்ல மாமா ப்ரண்டுக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன் அத்தோட ஒரு எட்டு பாத்திட்டு போகலாம்னு தான்…. நான் வர இருக்கல அதான் ராசிக் கிட்ட சில பொருட்கள நேரப்பட அனுப்பினேன்!” 

என ஒரு லாஜிக்கை போட்ட கணக்கின்படி ரொஷான் கூறினான்.  அதற்கு தலையாட்டியவாறு…. 

” கல்யாண வேலைங்க கொஞ்சம் இருந்திச்சு! அதான் எல்லாருமா சேர்ந்து செஞ்சிகிட்டிருந்தோம்!” 

என தமது தரப்பு லாஜிக் தப்பாமல் கூறினார் அஸ்லம் மாமா. அந்த ரெடிமேட் வசனங்களை கேட்ட ரொஷான் “இந்த ஊர்ல மாடுங்க அழகா பேப்பர் திங்குது!” 

என சற்று மெதுவாகவே கூறினாலும் அது பட்டும் படாமல் சம்ஹாவின் காதில் விழ சூழ்நிலை மறந்து க்ளுக்கென அவளுக்கு சிரிப்பை வரவைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவளின் டிரேட்மார்க் சிரிப்பை கண்ட ரொஷான் சில நொடிகள் தன்னிலை மறந்தான். “கண்ரோல் யுவர் செல்ப் உங்க கச்சேரிய அப்புறம் வச்சுக்கலாம் இப்போ வேற வழக்கு போகுது!” 

என ராசிக் அவனை சிட்டிவேசனுக்குள் கொண்டுவந்தான்.

அந்த இடத்தில் சம்ஹாவின் மூத்த சகோதரி கணவர் இல்லாததை கண்ட ரொஷான்…. 

“சமீஸ் நாநா எங்க? ஏதாச்சும் வேலையா?” 

என ஒரு கேள்வியை போட்டான். ” மருமகன் ஜமாத்ல போய்ட்டாரு திங்க கிழமைதான் வருவாரு!” 

என சம்ஹாவின் தந்தை கூறினார். ஒருவகையில் நடந்துள்ள குழப்பங்களுக்கு மத்தியில் அவரில்லாமல் இருந்ததும் அந்த குடும்பத்திற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாமென அவனத மனதில் பட்டது. ஏனென்றால் அவர்  கொஞ்சம் தகறாறு பிடித்த ஆள் என சம்ஹா குறிப்பிட்டது அவன் மனதில் இருந்தது. இப்படி சம்பிரதாய பூர்வமாக பேச்சுக்கள் நடக்க ‘கிச்சனுக்கு’ போக அங்கிருந்து நகர்ந்தாள் சம்ஹா அவளுக்கு பின்னால் எதேச்சையாக செல்வதுபோல அலி சப்ரி செல்வது வலது புறம் நேர் எதிராக அமர்ந்திருந்த ராசிக்கின் கண்களில்பட்டது.   அவன் கண்சாடை மூலம் ரொஷானிடம் காட்ட நிகழ்வு அவனாலும் அவதானிக்கபட்டது. 

அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி ரொஷான் மனதை குடைந்த நிலையில் அடுத்த அரைமணி நேரத்தில் சம்பிரதாய பூர்வமான பலகார மரவை தட்டொன்றை அலி சப்ரி கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தான். செயற்கையாக தானும் அவ்வாறு காட்ட வேண்டிய கட்டாயத்தில் அந்த குடும்பம் இருந்ததை ரொஷான் உணர்ந்து…. 

” இல்ல இதெல்லாம் வேணாமே!” என சொன்னாலும் சற்று தூரத்தில் நின்ற சம்ஹாவின் கண்சாடை ப்ளீஸ் எடுங்க என்பது போல் காட்டுவதை லவ் சைக்கலோஜி உணர்த்தியது. அதே நேரம் ஒரு பலகார தட்டை ரொஷானிடம் நீட்டுவதுபோல் அருகில் வந்த அலி சப்ரி…

“வெக்கப்படாம எடுங்க” 

என்று பொதுவில் கூறிவிட்டு அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில்…. 

” அந்த சேவியட் பெட்டிக்கு கீழ பாருங்க!”

என்று சொன்னான். அந்த பலகாரத்தில் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். பின் அங்கிருந்த தண்ணீர் கோப்பையில் கையை கழுவிவிட்டு சேவியட் பேபரை எடுக்கும் சாட்டுடன் அந்த பாக்சை கொஞ்சம் அகற்ற அங்கு ஒரு சிறிய கடதாசி துண்டு இருந்தது. அதை இன்னொரு சேவியட் எடுக்கும் சாட்டோடு தன் வசப்படுத்தினான். 

டீ கோப்பையை இருவரும் கையிலெடுத்ததும்… 

“சம்ஹா டீ போட்டா எப்பவும் செம்மையா இருக்கும்!” 

என ஒரு புகழ்மாலை அலி சப்ரியிடமிருந்து வந்தது. அந்த வார்த்தைகளின் லவ் டிரான்ஸ்லேசன்  அது சம்ஹா போட்ட டீ என்பதே! அதை புரிந்திட அவனுக்கு பெரிய நேரம் எடுக்கவில்லை. ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு கோப்பையில் உதடு பதித்து மெலிதாக உறிஞ்சினான். உண்மையில் அதன் சுவை ஆன்மா வரை தொட்டதும் அலி சப்ரி கூறியது நூறுவீத உண்மையென அவனுக்கு பட்டது.  மற்றவர்களுக்கு தெரியாமல் அந்த காகித துண்டை மெதுவாக பிரித்து படித்தான். அதில்…. 

‘ சப்ரி சம்திங் எக்ஸ்பிளைய்ன் யூ’ 

என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சாட்சாத் சம்ஹாவின் கையெழுத்து. ஆக அந்த அரைமணி நேரம் இவர்கள் கணித்தது போல் சம்ஹாவினால் முடிச்சுகள் சில அவிழ்க்கப்பட்டிருக்கிறது! ஆகவே கிளைமாக்ஸ் நோக்கி நாடகம் நகர்வது போல் உள்ளத்தில் உதிக்க ஒரு அதீத உட்சாகம் அவனுள் ஏற்பட்டது. சம்ஹா ஒரு லேடி சி.ஐ.டி போல செயல்பட்டுள்ளாள் என்பதும் அன்பின் ஆழத்தை அதிகரித்தது.

அங்கிருந்து விடைபெற இருவரும் எழுந்த போது… 

” நாங்களும் உங்க வயச தாண்டி வந்தவங்க தான் இந்தாம்மா வந்து பேசி மருமகன வழியனுப்பி வை!” 

என மாமனார் கூறியதை ரொஷான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. சம்ஹாவிடமும் ஒரு திடீர் வெட்கம் ஏற்பட்டது. ஆனால் தந்தையின் அந்த வார்த்தைகளுக்கு பின் அடிவைக்க வெட்கம் கலந்த கூச்சம் புதிதாக தடுத்தது. அங்கிருந்தே அவள் “பீ அமானில்லாஹ்” என்றாள். அவனும் “போயிட்டு வாறேன்” என்று போக மனமில்லாது சொன்னான். அத்துடன் “ஆ அலிசப்ரி வந்ததோட இந்த ஊர கொஞ்சம் சுத்தி பார்க்கனும்னு ஆசையா இருக்கு உங்களுக்கு ஒப்ஜக்ஸன் இல்லனா வந்து கொஞ்சம் காட்ட முடியுமா?” என ரொஷான் அந்த கடதாசி குறிப்பில் சம்ஹா குறிப்பிட்ட இலக்குக்கான திட்டத்தை விரித்தான். அலி சப்ரி அஸ்லம் மாமாவின் முகத்தை பார்க்கவும் ” சரி அதுக்கென்ன போய் காட்டிட்டு வாங்க மகன்” என கூறினார். மூவரும் காரை நோக்கி நகர்ந்தனர். 

காருக்கருகில் சென்று மறுபடியும் திரும்பி கையசைத்தான் ரொஷான். எல்லோரும் சம்பிரதாய பூர்வமாக பதிலுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்தினர். சம்ஹா மட்டும் கதவு நிலையில் தலைசாய்த்து கையசைத்தது அந்த பிரிவு கூட அவளை வாட்டுவதை ரொஷானுக்கு உணர்த்தியது. அவனுக்கு மட்டும் என்னவாம்….. ஆனால் சூழ்நிலையின் சந்தோசத்தை கெடுத்துள்ள சம்பவம் சுமூகமாக முடியாதவரை இந்த குடும்பத்தில் அமைதி நிலவாது. அலி சப்ரிதான் அதற்கு காரணமென்ற பலமான சந்தேகத்தில் அவன் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. “மச்சான் நீ வண்டிய எடு” என ராசிக்கிடம் கீயினை கொடுத்தான். ” ஓ இன்னைக்கு காருக்குள்ள தான் கருப்பாட்டுக்கு குர்பான்” என தனக்குள் கூறியவாறு காரை கிழப்பினான் ராசிக். ரொஷானும் அலி சப்ரியும் பின் சீட்டில் இருந்தனர். ” டைமில்ல அலி சப்ரி நேரடியா விஷயத்துக்கு வாங்க” என ரொஷான் ஆரம்பித்தான். ” நீங்க நினைக்கிற மாதிரி குத்தவாலியோ இந்த குடும்பத்திற்கு துரோகம் செய்றவனோ இல்ல! உறவுல மாமா வீடா இருந்தாலும் புழக்கத்தில சகோதரங்க போலதான் என் மைனிங்க. சம்ஹா கூட தப்பா புரிஞ்சுகிட்டா அதனால அவகிட்ட விஷயத்த நீங்க வீட்டுக்கு வந்தப்ப சொல்லிட்டேன். அவதான் உங்க கிட்ட சொல்ல சொன்னா” என அலி சப்ரி சொன்னதும் ” ஓ உள்ளாடி இருந்து அந்த பலகார மரவைய கொண்டுவர போன அரைமணி நேரத்தில…” என ரொஷான் கேட்க ” ம்ம்ம் நீங்க அதையும் கவனிச்சீங்களா!? சரி விஷயத்துக்கு வாறேன்….” என அலிசப்ரி கூறத்தொடங்க கார் மெயின் ரோடை தொட்டிருந்தது.

தொடரும்…..

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!