சில்லென்று ஒரு காதல்…!  07

சில்லென்று ஒரு காதல் - 07

(தொடர்கதை EP 07)

ராசிக் சம்ஹா வீட்டுக்கு அவர்களது திட்டப்படி நுழைந்தபோது சுமார் காலை எட்டு மணியிருக்கும். ரொஷானின் நண்பனென்ற வகையில் உள்வீட்டு விவகாரம் ஒரு மூடுமந்திரம் போல் மறைக்கப்பட்டது. ஆனாலும் ஏதோ அசாதாரணம் நடந்துள்ளதை ராசிக் உணர்ந்தான். சம்ஹாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கதைத்தாள். ஒரு சின்ன இடைவவெளியில் ராசிக்….. 

” ரொஷானும் வந்தீர! உங்கள சந்திக்கனுமாம்!” 

என விஷயத்தை போட்டான். அவளது முகத்தில் ஆனந்தம் அதிர்ச்சி கேள்விக்குறியென கெமிஸ்ரி பிஸிக்ஸ் பயலோஜி சூலோஜி என ஒரு விஞ்ஞான பாடமே ஓடியதையும் ராசிக் அவதானித்தான். 

” சம்ஹா எனிதிங் ரோங் ஹியர்?” 

என்ற போதே அங்கு வந்த அவளின் சிற்றப்பா…. 

” ஓ நீங்க ரொஷான் மருமகனோட கூட்டாளியா?” 

என்றவாறு பேச்சின் திசையை தன்பக்கம் இழுத்தார். 

“மகள் போய் குடிக்க ஏதாச்சும் கொண்டு வாங்க!” 

என்றதும் அவள் உள்ளே சென்றாள் . அந்த இடைவெளியில் அஸ்லம் மாமா வீட்டுக்குள் நுழைந்தார். 

அஸ்லம் மாமாவின் ஸலாம் சத்தத்தை கேட்டு பதில் ஸலாத்துடன் சம்ஹாவின் தந்தை ரூமிலிருந்து வெளியே வந்தார். உள்ளே சென்ற சம்ஹாவும் வெளியே வந்து மாமாவின் முகத்தை கூர்ந்து அவதானிதாள். அலி சப்ரியும் அங்கு வர….. 

“அது வேற கேஸ்!” 

என அஸ்லம் மாமா மெதுவாக கூற அவனது முகம் நடிப்பும் ஏளனமும் கலந்து அக்டிவேட் ஆனதை அவனுக்கு வலதுபுறம் இருந்த சம்ஹா அவதானிக்க தவறவில்லை! 

“இதெல்லாம் ஜெசீரோட வேல மாதிரி படுது!” 

என சிற்றப்பா கூற சம்ஹாவின் தந்தை ஆமோதித்து தலையாட்டினார். இதெல்லாம் ராசிக் ரிசீவ் பண்ணியவனாக அமர்ந்திருந்தான். ” இல்ல எல்லாத்துக்கும் சும்மா ஜெசீரையே குத்தம் பிடிக்க முடியாது! கருப்பாடு எங்க பக்கத்திலயும் சுத்திகிட்டிருக்கலாம் மாமா!” 

என சம்ஹா கூறியதும் அவர்…. 

” ம்ம்ம் இதுலயும் நியாயம் இருக்கு!” என்றதும் அலி சப்ரியின் முகத்தில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டதை சம்ஹா கவனித்து விட்டாள். 

ஏதோ ஒன்று அவளுக்கும் பிடிபட்டது. அப்போதுதான் ராசிக் அங்கிருப்பதை எல்லோரும் மறுபடி உணரத் தலைப்பட்டனர். பேச்சின் போக்கை திசைமாற்றி செயற்கையான ஒரு கலகலப்பை ஏற்படுத்த முயன்றனர். சம்ஹா உள்ளே சென்று கோப்பியை எடுத்து வந்து ராசிக்கிடம் நீட்டினாள். நல்ல ஒரு சந்தர்ப்பமாக அருகில் யாரும் இல்லை.  

“ரொஷான் வெய்டிங் போர் யூ!” 

என ராசிக் மெதுவாக மறுபடியும் ஞாபகமூட்ட… 

” ம்ம்ம் ஆனா இங்க வீட்ல சின்ன ப்ராப்ளம் தங்கச்சி சஹ்ரா மிஸ்ஸிங் லாஸ்ட் ஈவனிங்…….. “

என தொடங்கி முழு கதையையும் சொல்லி…. 

“இப்ப உங்க உதவி தேவை! இந்த விஷயத்தை முழுசா ரொஷான் கிட்ட சொல்லுங்க. இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரியே இங்க வர சொல்லுங்க!” 

என கூறி அவனை வழியனுப்பி வைத்தாள். அத்துடன் ‘ம்ம்ம் தங்கை பிரங்னன்ட ஆக காரணம் இந்த அலிசப்ரி தான்’ என மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்தாள் சம்ஹா.

ராசிக் சென்று ரொஷானிடம் விடயங்களை சொன்னதும் அவர்களது மந்திராலோசனை தொடங்கியது…..

“சம்திங் ரோங் டா எப்படியோ எந்த பக்கமும் பாதிப்பு வராம பிரச்சினைய முடிக்கனும்! எனக்கென்னவோ ஜெசீர விசாரிச்சா ஏதாச்சும் க்ளு கிடைக்கும்னு படுது! அதில இருந்து தான் நாங்க போக வேண்டிய சரியான ரூட்ட பிடிக்கலாம்!” 

என்ற ரொஷானை சற்று முறைத்து பார்த்தவாறு ராசிக்…. 

” டேய்! இது உன்னோட அப்பன்ட ஊரோ யூனிவர்சிட்டியோ இல்ல! முழுக்க முழுக்க புறத்தி ஊரு சும்மா ஜேம்ஸ் பாண்ட் கணக்கில சிந்திக்காம ரொஷானா சிந்தி! மாறுகால் மாறுகை வாங்கி அனுப்பிடுவாங்க! அப்புறம் வாழ்நாள் பூறா நொண்டிகிட்டு திரியவாகும்! இங்க பாரு நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் நீயும் சம்ஹாவும் சேர்ர விஷயத்தில சிக்கல் வராம பார்த்துக்க! அதுக்கான பிளான மட்டும் நீ போடு!” 

என்ற ராசிக்கிடம்….. 

” மச்சான் அப்படி இல்ல முதலாவது குடும்பத்தில ஒருத்தனா என்ன நினைச்சு தான் என்கிட்ட விஷயத்த சொல்லி சமி ஹெல்ப் கேக்கிறா. இரண்டாவது இந்த விஷயத்த தான் ஏற்கனவே என்கிட்ட அவ சொல்ல ரை பண்ணதா படுது! எனது கெசிங் சரின்னா சமியோட தங்கச்சி காணாம போறதுக்கு லவ் மாட்டர் எங்கிறத தாண்டி பெரிசா ஏதோ ஒன்னு நடந்திருக்கு! மூனாவது மிஸிங் ஆனது ஒரு பொம்பில பிள்ள அதுவும் சமியோட தங்கச்சி என்னோட மைனி சோ….. கட்டாயம் இன்வால்ட் ஆகியே ஆகனும். நாலாவது விஷயம் எங்கட வீட்டுக்கு தெரியாமலும் சுமூகமாவும் இது முடிஞ்சா தான் எங்கட கல்யாணமே நடக்கும்!” 

என்ற ரொஷானின் முடிவில் நியாயம் இருப்பதை உணர்ந்த ராசிக் “ம்ம்ம்” என்றவாறு தலையாட்டினான்.

இதற்கிடையில் சம்ஹா சில வியூகங்களை வீட்டில் வகுத்திருந்தாள். ரொஷான் வர இருப்பதை பகிரங்கமாக சொன்னாள். அவள் நினைத்தது போலவே ஏனையோரின் டென்சனை விடவும் அலிசப்ரியின் முகத்தில் பதற்ற ரேகை அதிகம் தெரிந்தது. உண்மையில் அவன் குடும்ப பாசமோ அன்போ இல்லாதவன் இல்லை. தப்பானவனும் இல்லை. இரு வீட்டிலும் சகஜமான புழக்கமும் இருந்தது. சம்ஹாவை விட ஒரு வயது இளையவன். எல்லாவற்றையும் சம்ஹா உணர்ந்திருந்தாலும் நீருக்குள் நெருப்பாக ஏதோ நடந்துள்ளதை புரிந்து கொண்டாள். தனக்கு தவறியதை சொல்லி இவளிடம் அழுத தங்கை எவ்வளவு அதட்டி கேட்டும் காரணம் யாரென சொல்லவில்லை. எப்படியோ ஜெசீர் ஒரு பகடைக்காய். இந்த ஆட்டத்தின் திசையை மாற்ற பாவிக்கப்படும் துரும்புச் சீட்டு என ஊகித்தாள்.

ஒன்பதாம் வகுப்பில சஹ்ரா படிக்கிறப்ப ஜெசீர் லவ் லெட்டர் குடுதிருக்கான். பின்னாடி சுத்தி இருக்கான். அப்போ அவன் பத்தாம் வகுப்பு. ஆனா அதுக்காக இப்போ அவனை அதே கண்ணாடிய போட்டு பார்க்கிறது சரியான வியூ அல்லவென சம்ஹாவுக்கு பட்டது. இப்படியெல்லாம் சிந்தித்தவாறு ரொஷானின் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள் அவள். கார் வந்து வீட்டு வாசலில் நின்றபோது சூழ்நிலை மறந்த ஒருவகை தேடல் அவளை ஆக்கிரமித்தது. ரொஷானின் தோள் சாய்ந்து ஆறுதல் தேட மனம் விரும்பியது. அவளின் பார்வையில் தெரிந்த ஏக்கம் கலந்த காந்தப் பார்வை ஏகப்பட்ட கதைகளை சொல்லிப் போக சூழ்நிலையை உணர்ந்தவனாக ராசிக்குடன் வீட்டினுள் அடிவைத்தான். அஸ்லம் மாமா ” அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க” என கூற பதில் கூறியவாறு உள்ளே சென்றனர். இயல்பான புன்னகையுடன் எல்லோரையும் ஒரு சுற்று அவதானித்தான். 

தொடரும்…..

எம்.யூ.ஏ.ரஹீம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!