ஒரு வானவில் போலே - 03
தொடர் கதை பாகம் 03

ஓரளவு நிதானத்துக்கு வந்த போதுதான் பெரிய தவறை செய்ததாக புரிஞ்சிச்சு. யாரோ சிலர் “அவனை பிடி அவனை பிடி!” என கூச்சலிட்டனர். பயம் என்னை இயக்க கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினேன். அப்போதுதான் ஏதோ ஒன்றில் பட்டு பறப்பது போல் தெரிந்தது! கண்ண திறந்தப்ப…. தலையில ஏதோ பெரிய பாரத்தை வைத்தது போல வலி! எந்திரிக்க முயன்றப்ப முடியவில்லை! நான் இருந்தது Hospital Accident ward…. ஓடிய ஓட்டத்தில் எதிரே வந்த வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டிருக்கேன். தலையில் பலத்த அடி பிடரி பக்கமாக ஏறத்தாழ எட்டு தையலென பின்னர் தான் தெரிஞ்சிச்சு. மூன்று நாள் மூச்சு பேச்சில்லாம இருந்திருக்கேன். ஆனால் கண் முழிச்சதும் அஜந்தாவுக்கு கல்லால் அடிச்சதும் இரத்தம் சொட்ட சொட்ட அவள் மயங்கி விழுந்ததும் ஞாபகம் வர அவசரமாக கண்களை மட்டும் அசைத்து சுற்றுவரை பயத்தோடு பார்த்தேன். பின்னர் அசதியோடு மறுபடி தூங்கிவிட்டேன். கண் விழிச்சப்ப அம்மா அப்பா அருகில் இருந்தனர். வேறு ward க்கு மாத்தப்பட்டிருந்தேன். பேச முயன்றேன்… மிகவும் கஷ்டப்பட்டு “அம்மா” என்ற வார்த்தையை பேசினேன். அது கூட வலிக்க கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது….
ஆனால் எனது நிலையை சிந்திக்க மனம் இடம் தரவில்லை. இப்படி இரண்டு நாட்கள் நகர அந்த அதிர்ச்சியான turning point நடந்திச்சு. தர்சன் அஜந்தா அவர்களின் அம்மா அப்பாவுடன் வந்திருந்தனர். கூடவே எனது தங்கச்சியும் வந்திருந்தாள். எனக்குள்ளாடி ஒரு நடுக்கமான express train ஓடியது. முதலில் அருகில் வந்தது அவளின் அம்மா….”மகன் எல்லாம் சரியாகிடும் don’t worry” என்றார். அவரது கையை பிடித்திருந்த அஜந்தா தலையை சற்று பணித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது வலது பக்க நெற்றியில் plaster போடப்பட்டிருந்தது. “Sooty why are you quiet?” என அவளது தந்தை கூற… மிக மெதுவாக “Sorry” என்றாள் அஜந்தா….அதில் அவளது வழமையான திமிரு குறைந்தது மட்டும் தெளிவாக புரிய “இல்ல நான் தான்….” என என் தவறை சொல்ல முயன்றேன். “No கதிர் எல்லாத்தையும் அம்மா கிட்ட சொல்லிட்டேன்” என தர்சன் என் கையை மெதுவாக அழுத்தினான்.
“ரொம்ப செல்லமா வளர்ந்திட்டாள்…. அதோட அவ தாத்தா கூட most நெருக்கம்…. அதான் அவள் கொஞ்சம் அப்படி Any how நடந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவு. இனிமே நீங்கல்லாம் good friends ok?” என அவளது அப்பா சொல்ல நான் தலையாட்டினேன். ஆனால் அவளது உதட்டோரம் அந்த மந்திரப் புன்னகை! ஒத்துக் கொண்டாளா ஏளனம் செய்தாளா? என்று புரியவில்லை! ஆனால் என் தங்கையின் கரத்தை அவள் நட்போடு பிடித்தாள். அவர்கள் ஏதோ சில பொருட்களை எனக்காக கொண்டு வந்திருந்தனர். இதற்கிடையில் எனது அம்மாவும் அப்பாவும் வர அவர்களும் சேர்ந்து friendly யாக பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் தர்சனும் நானும் பேசுவதை ஊடுறுவி பார்த்தவாறு நின்றாள். “தர்சன் உன் தங்கைகிட்ட நான் மன்னிப்பு கேட்டதா சொல்லு” என்றேன். “எனக்கு நல்லாவே காது கேக்கும்” என முதல் தடவையாக ஒரு புன்சிரிப்பு முகம் காட்டினாள் அந்த குதிரை காரி.
எப்படியோ நான் சுகமாகி வந்த போது அவர்கள் Vacation முடிந்து போயிருந்தனர். அஜந்தாவின் அப்பா ஒரு Airforce engineer. அவரோட பணியாற்றிய ஒரு நண்பனின் தங்கையை தான் அவர் திருமணம் செஞ்சிருந்தார். அடிக்கடி இடமாற்றங்கள் மற்றும் நாட்டு சூழ்நிலை காரணமாக சில வருடங்கள் அவர்களால் வரமுடியாமல் போனது. சுமார் நாலு வருடங்கள் கடந்திருக்கும். நானும் Advance level படிக்க தொடங்கும் காலப்பகுதியில் தமயந்தி அக்காவின் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. அப்போதெல்லாம் வீதியோற Cricket அது இதெல்லாம் எமக்கு கீழிருந்த அடுத்த சந்ததி பாரமெடுத்திருந்திச்சு. எங்க வயசு பையன்கள் அப்போ கொஞ்சம் வீதியோர அரட்டை அது இதுன்னு இருந்தோம். அப்போதுதான் அதில் ஒருவன் “டேய் மச்சான் அந்த வாயாடி அதான் அஜந்தா வந்திருக்காளாம்டா!” என்றான். இன்னொருவன் “அலைகள் ஓய்வதில்லை ராதா போல கலக்கலா இருக்கிறாள்டா” என்றெல்லாம் சொல்லும் போதும். பெரிசாக effect வரல…. ஆனா கால் பெருவிரல் தொடங்கி உச்சந்தலை முடிவரை அதிர்ச்சிய கொடுக்கிற ஒரு அதிரடி effect அவளால எனக்கு நடந்திச்சு!
தொடரும்….
எம்.யூ.அப்துல் ரஹீம்