மீண்டும் ஆரம்பமானது பலத்த மழை! இன்று 50 மி.மீ மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் எவை?

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (30 ஜனவரி 2026) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் இடங்கள்:

  • கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள்: இங்கும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
  • 50 மி.மீ மழை: ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
  • வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள்: இங்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை நேர இடியுடன் கூடிய மழை:

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பனிமூட்டமான நிலை:

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும். இதனால் வீதிப் பார்வைத்திறன் குறையக்கூடும் என்பதால் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னல் பாதுகாப்பு அறிவுறுத்தல்:

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். இடி மின்னல் நிலவும் போது திறந்த வெளிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!