ஒரு வானவில் போலே - 08
தொடர் கதை பாகம் 08
“கதிர் உங்கள நான் ஒரு friend ஆ நினைச்சு பேசறேன். இந்த Caste & tradition சம்பந்தமா ஒரு தெளிவு அவசியம் I think you catch my point… அதாவது சாதி எங்கிறது ஒருத்தன் இன்னொருத்தன ஆதிக்க படுத்த போட்ட பிரிகோடு…. அங்க எதுவுமே நலவு இல்லை! ஆனா சம்பிரதாயம் எங்கிறது தேவையான சில கட்டுப்பாடுகள ஒழுக்க கோர்வைகள submit பண்ற ஒரு ஏற்பாடு…. அதுக்குள்ள சிலர் தேவையில்லாத சிலத புகுத்துறாங்க! எங்க அப்பா மாதிரி…. அதனால தான் நான் ஒரு சிங்கள பெண்ண திருமணம் செஞ்சத பெருந்தன்மையா ஏத்துக்கள. ஏன்னா அவரது tradition ல அது ஜீரணிக்க முடியாதது. இப்ப கூட பேர பிள்ளைங்க கூட பாசம் காட்டுற அளவுக்கு என் மனைவிய மருமகளா பார்க்க விடுதில்ல. அதனால தான் தமயந்தியோட வாழ்க்கை விசயத்திலயும் என்னோட நேரடி Involvement அ காட்ட விரும்பல…. அதை கூட வித்தியாசமா எடுத்திட்டார்னா வேதாளம் மறுபடி முறுங்க மரத்தில ஏறிடும். So ஒரு பார்வையாளர போல இருந்து சில வேலைகள செஞ்சு அவங்க மூட நம்பிக்கைகளாலயே அவங்க மூட சம்பிரதாயங்கள உடைக்க போறேன். அதுக்கு உங்களுக்கு ரெண்டு சின்ன வேலைங்க தான் இருக்கு” என அஜந்தாவின் Daddy கூறியதும் அப்போ பாதி புரிஞ்சிது பாதி புரியவேயில்லை.
அப்போது எனக்கு இந்த philosophy எல்லாவற்றையும் விட அஜந்தாவை ஆழமாக impress பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சதா நினைச்சேன். அம்மா அஜந்தா மீது காட்டிய இயல்புத் தன்மை எங்கள் வீட்டில் சாதி சம்பிரதாய இனத்துவ பார்வைகளை காட்டாது என்ற ஒருவகை நம்பிக்கையை தந்தது. மேலோட்டமான சில முடிவுகளை தீர்வாக நம்பும் வயசது….. Hitler கூட அன்னைக்கு மரத்தில கொப்பு வெட்ட போனப்ப Cool ஆ பேசினது கூட சுலபமான அங்கீகாரம் அமையும் என்பது போல இருந்திச்சு….. அத்தோட பொதுவா எல்லா காதலுக்கும் main enemy parents தானே… எனக்கு அது சாதகமா அமைஞ்சதா ஒரு நப்பாசை! ஒரு இறுக்கமான சமூக கோட்பாட்டிலிருந்து தனியொருவனாக என்னை நினைத்துக் கொண்டேன். அதே நேரத்தில் அவள் மனதில் என்ன இருக்கும்? இப்படியொரு கேள்வி பிறக்கவேயில்லை. பருவத்தின் தேடல்களுக்குள் மட்டும் ஒருபக்க சிந்தனை கட்டுப்பட்டிருந்தது.
“Uncle என்ன செய்ய வேணும்?” என கேட்டேன் கொஞ்சம் ஆர்வமாக அதற்கு……
“கதிர்! இந்த பேய் பிசாசு…. இதுலயெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” என கேட்டார்!
என்ன topic தலை கீழாக மாறுகிறது என குழம்பி போனேன்! எனது மனோ நிலையை புரிந்த அவர்…..
“Love asks for help from demons” என்றார்!
என்னது காதல்….பேய்களிடம் உதவி கேட்கிறதா!? அந்த நொடியில் இவருக்கு தான் தலையில ஏதாவது குழப்பம் இருக்குமோ? என நினைத்தேன்.
“I am sorry Uncle…. சத்தியமா புரியல!” என்றேன். அதற்கு…..
“இப்போ முந்தைய சிறுவயசு காதல காரணம் காட்டி தமயந்தியோட கல்யாணத்த மாப்பிள்ளை வீட்டில ஏறத்தாழ வேணாம் என்றுட்டாங்க …. அதனால தற்கொலை வரைக்கும் தமயந்தி போயிட்டா…. இதுல குணசேகரன் தமயந்தி காதல் சாதி பிரச்சினையாலதான் ஏற்கப்படல…. அதிலும் அப்பாவோட பிடிவாதம் தான் அதுக்கு காரணம்…. ஏன்னா குலசேகரன் குடும்பம் எங்கள விட குறைஞ்ச சாதி! இங்க அப்பாவோட பிடிவாதத்த மாத்தி அதே முகூர்த்தத்தில கல்யாணத்த நடத்தனும். அதுக்கு என்கிட்ட பக்காவான Plan ஒன்னு இருக்கு! அது ஒரு Drama” என நிறுத்தினார்.
“Ok Uncle but அதுக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?” என எனது குழப்பத்தை அவரிடம் கேட்டேன். மெல்ல புன்சிரித்தவாறு சொல்ல தயாரானார்.
தொடரும்….