ஒரு வானவில் போலே 24

ஒரு வானவில் போலே - 24

தொடர்கதை பாகம் 24

“எங்க காதலுக்கு தான் எதிர்ப்பில்லையே! பிறகு எதுக்கு அவசரமா திருட்டு கல்யாணம்…. அதுவும் அம்மாக்கும் செல்விக்கும் கூட தெரியாம….” 

என கொஞ்சம் தயக்கத்தோட இழுத்தேன்.

“Kathir! Who said no to barriers? இப்ப கூட Mom and dad க்கு தெரியாம தான் வந்தேன்! Dharshan only agreed. அத்தோட திருட்டு கல்யாணம் அப்படி இப்படி கெட்ட விதமா பேசாத! அப்படி என்றால் தமயந்தி அக்காக்கு நடந்தது….gangster wedding! நீ தானே சொன்னாய் சில நலவுகளுக்காக சில விரும்பாத செயல்களை செய்வது தப்பில்லைன்னு! அதுவும் some of days or some of months பிறகு பகிரங்கமா wedding எடுக்கலாம்னு தானே சொல்றேன்!”

என அஜந்தா சொல்லவும்

“என்னால நம்பவும் முடியல உன்ன புரிஞ்சிக்கவும் முடியல அஜந்தா!”

என்றேன் நான்… அதற்கு நான் எதிர்பாராத வகையில் என்னை திடீரென இறுக அணைத்து கண்ணத்தில் ஆழமாக முத்தமிட்டாள்! காதலியின் முதல் முத்தம் அதிரடியாக கிடைக்க அதிர்ந்தே போனேன்!

“கதிர் இப்ப நான் செஞ்சது இருக்கே இதுக்கு பெயர்தான்  Theft crap…. இது வேணாம் பிடிக்கல எங்கிறதால தான் Let’s have a secret wedding for conscience”

என்றாள் அஜந்தா…. நானோ அந்த முத்தத்தில் கொஞ்சம் கிறங்கி போய் இருந்தேன். ஒரு விதமாக உசாராகி….

“அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லையா?” 

என்ற என்னை பார்த்து….

“கதிர் புரிஞ்சிக்க…. காலத்தின் மீதும் சூழ்நிலைகள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை! எங்களோட எதிர்பார்ப்புகள் உள்ளத்தில அடைபட்ட ஆயுள் கைதி போல மாறிடக் கூடாது மறுபடியும் சொல்றேன் சில தேவைகளுக்காக தப்பில்லைன்னு! அதுவும் some of days or some of months…. Please Kathir! எனக்காக இதை ஒத்துக் கொள்” 

என அவள் சொன்னதும் அந்த காதலின் பெயரால் நான் விரும்பாத நிலையிலும் அவளுக்காக உடன்பட்டேன். 

திருமணத்தின் பின்பு இருவருமாக சென்று அம்மாவிடம் பொதுவான ஆசீர்வாதம் வாங்கினோம்; அவரது பார்வையில் காதலர்களாக…. தர்சன் Call ல் பேசி வாழ்த்து தெரிவித்தான். அவளின் பெற்றோர் பற்றிய பேச்சை நான் எடுத்தேன்…..

“அவர்களோடு இப்போது பேச தேவையில்லை; அதை நான் அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன்” 

என்றாள். சொர்க்கத்தில் தேவதை வந்து மனங்குளிர வைப்பாள்னு சொல்லுவாங்க, அதை பூமியில் நிரூபித்தாள் என் அஜந்தா! ஆனால் பகிரங்கமாக திருமணம் நடக்கும் வரை அந்தரங்க விடயங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன்; ஆனால் அவள் அதுபற்றி அலட்டவே இல்லை!

“This is not a drama we will prove the truth in some more time” 

என சொல்வாள்! ம்ம்ம் அவள் என்னோடு பகிர்ந்த அன்பையும் அக்கறையையும் சொல்ல வார்த்தைகளே இல்லை! அதே நேரம் பணம் அவளிடத்தில் தாராளமாகவே இருந்தது! அதை எங்களுக்காக செலவு செய்வதில் எனக்கு பிடிப்பில்லை. அதை புரிந்தவளாக

“Mine is yours Kathir; take it easy” என்றதோடு நிற்காமல் செல்விக்காக என ஒரு கணிசமான தொகையை account open செய்து deposit செய்தாள்! இப்படியே நகர்ந்த நாட்களில் அவள் மறுபடி German செல்லும் நாளும் நெருங்கியது.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!