ஒரு வானவில் போலே 22

ஒரு வானவில் போலே - 22

தொடர்கதை பாகம் 22

“நீ என்னை மறந்திருப்பாய் என்று நினைத்தேன்! So I played a little with you” 

என்றவாறு அருகில் வந்த அஜந்தா

“Well then what do you think about parallel lines?” 

என்றாள்…

“நீ இன்னும் மாறவே இல்லை! என்னை தேடினாயா?” என்றேன். 

அவளாகவே என் கைகளை உரிமையோடு பிடித்தவாறு…

“எல்லாம் கனவு போல இருக்கா? But some realities are like a dream.” உன்னை பார்க்கனும் போல இருந்திது. no any information…. But there was hope in love தேடிவந்திட்டேன்! நீயும் கிடைச்சிட்டே!”

என்றாள் நிறைய பேசினாள்…. அவளோட Dad, Mum, தர்சன் எல்லோரும் German ல இருக்கிறதா சொன்னாள்…..

“அப்போ நீ அங்க போகலையா?” என கேட்டேன். அதற்கவள்….

“Why not! I am also now a German citizen… இப்போ visiting visa ல வந்திருக்கேன்… Just two month”

என்றதும்…. கவலையாக அவளை பார்த்தேன். என்னோட பார்வையின் அர்த்தத்தை புரிந்தவளாக…

“take it easy அதுதான் வந்திட்டேன் உன்ன கண்டுட்டேன் Everything will go smoothly” என்றதும் திருப்தியாக இருந்திச்சு.

ஆனால் அவளது கையில் ஏதோ காயத்தின் தழும்பு இருப்பதை கண்டேன். சரியாக என்னவென்று பிடிபடவில்லை. அந்த கையை எடுத்து உன்னிப்பாக பார்த்தேன்.

“Little accident in Germany… ஒன்னுமில்ல நீ நெத்தியில பதிச்சது போல எவனோ ஒரு stupid clowns வெச்சிட்டான். But அவன Love பண்ண முகத்த பார்க்கல bad luck…”

என்றுவிட்டு கலகலவென கண்ணீர் வரும்வரை சிரித்தாள்.

“Ok Take a few days off from tomorrow நிறைய வேலையிருக்கு…..

என்னோட aunty ய பார்க்கணும்…..

செல்விய பார்க்கணும் ம்ம்ம் Get ready sweet heart” 

அவை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போன நாட்கள். ஆனால் அவளிடம் அவ்வப்போது கவலையின் சாயலையும் மெலிதான கண்ணீரையும் அவதானித்தேன். எதையோ என்னிடம் மறைப்பது போலவும் தோன்றிச்சு! ஏன் என கேட்டதும்…. பழைய நினைவுகளை மீட்டி பார்த்தேன் என்றாள். 

ஒருவாரத்தின் பிறகு training period என்ற படியினால் மறுபடி Job ல் joined ஆகினேன். அவள் அம்மாவோடும் செல்வியோடும் வவுனியாவில் இருந்தாள். நான் மறுபடி வேலையில் சேர்ந்து ஒருவாரத்தில் Batcler boarding கை விட்டுவிட்டு ஒரு வீட்டை rent க்கு எடுக்க சொல்லி call பண்ணினாள். என்னோட அப்போதைய Salary அதற்கு இடம் கொடுக்காவிட்டாலும் முயற்சி செய்தேன்;சாத்தியமாகவில்லை. இரண்டு தடவை call பண்ணி கேட்டாள். முயற்சி செய்வதாக சொன்னேன். திடு திடுப்பென ஒரு நாள் வந்து முன்னால் நின்று….

“I know the practical Kathir இப்போ money தானே issue என்கிட்ட இருக்கு…. இப்பவே தேடு” 

என பிடிவாதமாய் நின்றாள். ஒரு மாதிரியாக சகல வசதிகளுடன் ஒரு வீட்டை rent க்கு எடுத்தாகிவிட்டது. மறுநாள் குடி புகவும் தயாரான போதுதான்….. 

“கதிர் எங்கள் காதல் real னா ஏன் திருட்டு தனமா வாழனும்? எப்படியும் இந்த கொஞ்ச நாளும் நாங்க சேர்ந்து ஒரே வீட்டில இருக்கிறது தப்பில்லையா?” 

என ஒரு சந்தேகத்தை கிழப்பினாள்!

“Well what to do now?” 

என்றேன் நான். எந்த பதற்றமும் இன்றி…..

“We will get married but in secret” 

என அவள் சொன்னதும் திடுக்கிட்டேன்!

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!