ஒரு வானவில் போலே – 06

ஒரு வானவில் போலே - 06

தொடர் கதை பாகம் 06

கண்கள் சோர்ந்து போனது தவிர எனது தேடல்களில் எந்த பயனும் இல்லை! கவலையா இருந்திச்சு…. நண்பர்களின் அரட்டைகளிலும் மனம் போகவில்லை! அந்த பத்துவயசு முகத்தை கொஞ்சம் மாற்றி செதுக்கி பதின்நான்காக பார்த்தேன். சிங்கார வேலனில் கமல் குஷ்புவின் சின்ன வயசு Photo வை வைத்து Computer graphic செய்வது போல் computer இல்லாத அந்த காலத்தில் mind graphic design ல் ஒவ்வொரு விதமாக அவள் வந்து போனாள்! ஆனால் எல்லாவற்றிலும் English ல் திட்டியதும் துரு துருவென முறைத்த முறைப்புகளும் வந்து போனது! சோர்வுடன் வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தேன்…. தூக்கம் வரவேயில்லை. ம்ம்ம் என்ன செய்யலாம்? என யோசித்தவாறு அவள் பரிசளித்த அந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். தங்கையிடம் உதவி கேட்பதும் நாகரீகமாக படவில்லை. இந்த கல்யாண சூழ்நிலையை பயன்படுத்தி தமயந்தி அக்காவீட்டுக்கு மறுபடியும் சென்று முயற்சிக்கலாம் என்பது சரியாகபட்டது.

மறுநாள் மறுபடி தயாராகினேன். அம்மாவிடம் “செல்வி எங்க?” என கேட்டேன்.  ” அவள் தமயந்தி வீட்டுக்கு போயிருக்கிறாள்….. அது சரி கதிர் என்னடா நடந்திருக்கு உனக்கு? இரவு சாப்பிடயில்ல! காலையில tea குடிக்கல… இப்பவும் சாப்பிடாம போறாய்!” என அம்மா ஏசிய போதும் பசி தாகமெல்லாம் சத்தியமாக வரவில்லை. அப்போது “அம்மா அஜந்தா வந்திருக்கிறா!” என தங்கையின் குரல் கேட்க திடுக்கிட்டேன். “வாம்மா வா” என அம்மா வரவேற்க எனக்குள் பதற்றம் தொற்றிக் கொள்ள திடுக்கிட்டு வாசல் பக்கம் பார்த்தேன். தேவதை போல இருந்தாள் தங்க ரதம் போல் இருந்தாள்…. அப்படி இருந்தாள் இப்படி இருந்தாள்… என சொல்வதைவிட வர்ணிப்புகளுக்கு அப்பால் …. எனது mind graphic க்கு ஒரு Claymore குண்டை வைத்து சிதறடித்து நின்றாள்! வெகு இயல்பாக என் அருகில் வந்து “ஞாபகம் இருக்கிறதா?” என மிக நேர்த்தியான சுத்த தமிழில் வேறு கேட்டாள்! அவளது பத்து வயதில் சிங்களத்திடம் சிக்கி தவித்த கொச்சை தமிழ் காணாமல் போயிருந்தது!

அவளது வலது பக்க நெற்றியில் சற்று சிதைந்த Sticker பொட்டு வடிவில் ஒரு அடையாளம்… அதுவும் நான் வீசி பதம்பார்த்த வடு… அது திருஷ்டி கழிக்க குறையென சொல்ல எஞ்சி நின்றது. தவிர வார்த்தைகள் வராமல் குழம்பி நின்றேன். அதை புரிந்தவள் போல “கையில கல்லு எதுவும் இல்லையே!” என்றவாறு கல கலவென சிரித்தாள். எனக்கு என்னவோ போல் இருக்க அம்மா “டேய் பேசுடா ஊம கொட்டான் மாதிரி முழிச்சிட்டு நிக்கிறே!” என கூறவும் தான் 

” I am sorry…..” என்று தொடங்க 

“why sorry? some thing wrong happen here!?” என்றாள். 

“no no just I reversed back to old memories” என்றேன். 

“Occasionally Some mistakes Will bring benefits. But All mistakes Does not bring benefit. இதில் சில தவறுகளால் கிடைத்த இலாபம் தான் எங்கள் friend Ship…. so no formalities no old memories ok” என்றாள்.

நிறைய முதிர்ச்சி நிறைய அறிவு ஆளுமை மிக்க பேச்சு என்பன அவளை இன்னும் அழகுபடுத்திச்சு. இப்போது நான் ஓரளவு நிதானத்துக்கு வந்திருந்தேன்.

” தமிழ்ழ எப்படி இவ்வளவு அழகா பேசுறீங்க?” என்றேன்.

” செல்வியோட touch ல இருந்ததால படிக்கனும்னு ஒரு ஆர்வம் ம்ம்ம் அழகான மொழி!” என்றாள்.

“தர்சன் ஏன் வரல?” என்றேன்….

“அண்ணா இன்னும் இரண்டு நாளில் வருவார். ஒரு exam இருந்தது.” என்றாள்.

“சரி நான் ஏதாவது எடுத்துட்டு வாரன்” என அம்மா செல்லவும். ஒரு நாகரீகம் கருதி நானும்….

“அப்போ நானும் போயிட்டு வாரன்” என சொல்லவும்….

“அண்ணே! ஒரு முக்கியமான உதவி கேட்டு தான் இவ வந்திருக்கா!” என தங்கை ரகசியமாக கூற அவளும் அதை ஆமோதித்து தலையாட்டினாள். வார்த்தைகள் வராமல் என்ன? என்ற கேள்விக் குறியோடு பார்த்தேன்.

“Damayanti aunty Attempted suicide this morning. But no one knows.” என அவளும் மெதுவாகவே கூறவும்…. தமயந்தி அக்கா திருமண நாள் நெருங்கிய நிலையில எதற்கு தற்கொலை முயற்சி செய்யனும்!? என அதிர்ந்து நின்றேன்.

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!