ஒரு வானவில் போலே 18

ஒரு வானவில் போலே - 18

தொடர்கதை பாகம் 18

அதுக்கப்புறம் தமயந்தி அக்கா திருமணம் நடந்திச்சு. குணசேகரன் அண்ணா கொஞ்சம் மானஸ்த்தன். சீதனம் அது இது என எதையும் எதிர்பார்க்கவில்லை. கொழும்பில் நல்ல சம்பளத்தோடு வேலையில் இருந்தார். அவர் ஏற்கனவே ஏற்பாடுகளை செய்திருந்ததால் தமயந்தி அக்காவை கூடவே கூட்டிச் செல்லும் முடிவில் இருந்தார். அதன்படி அஜந்தாவின்  vacation முடியும் கட்டத்தில் அவர்களோடு சேர்ந்து பயணிக்க ஏற்பாடு. எனது காதல் குழப்படிகள் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்திச்சு. ஆனால் நிச்சயமா அஜந்தா மீதான எனது ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏதோ வயதுக் கோளாறு என்பதை என்னால் ஏற்க முடியாது. ஏதோ ஒரு ஊகத்தில் அஜந்தாவின் Daddy க்கும் கொஞ்சம் சந்தேகம்  வந்திருப்பதை புரிந்து கொண்டேன். அவர் 

“கதிர்! நீ மனதை control பண்ணி education ல forecast பண்ணு…. யாராலயும் எதிர்காலம் கெட்டுவிட கூடாது.” 

என பொதுவாக சொல்வது போல் புத்திமதி கூறினார். 

அவர்கள் Railway station போனபோது அங்கு தர்சனுடன் செல்வது போல் நானும் போயிருந்தேன். அஜந்தாவிடம் கலகலப்பு காணப்படவில்லை. ஆனால் முயன்று என்னுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சந்தோசமாக இருப்பதாக காட்ட நினைத்தாள்…..

“One line of parallel lines is going to go the distance!”  

சமாந்திரக் கோடுகளில் ஒன்று அப்பால் செல்கிறது! என்றுவிட்டு உதட்டோர trade mark சிரிப்பை தெரிக்கவிட்டாள். நானும் 

“It is an infinite journey like a railway” 

என்றவாறு தண்டவாளத்தை காட்டினேன். rail வரவும் reserve செய்யப்பட Compartment ல் அவர்கள் ஏறினர். ஒரு இறுக்கமான சுமை நெஞ்சை அழுத்துவது போல இருந்திச்சு. rail புறப்பட முதல் அங்கிருந்து நான் புறப்பட்டேன். அவளது முகத்தை பார்க்கும் தைரியம் வரவில்லை. வீட்டுக்குவீட்டுக்கு வந்ததும் எதுவுமே பிடிக்காத ஒரு மனோ நிலை. Hall ல் இருந்த கதிரையில் அமர்ந்தவாறு கூரை முகட்டை பார்த்து அந்த  சில நாட்களின் நிகழ்வுகளை மீட்டினேன். 

நான் படிக்க வேணும் என்பதில் அவள் ஆர்வமாக இருக்கிறாள். காத்திருப்பேன் என சொல்லாமல் சொல்கிறாள்…. இப்படி பலவாறு சிந்தனை குதிரை ஓடியது.

“அண்ணே! இந்தா tea ய குடி?”

என்ற தங்கையின் குரலுக்கு தான் நிஜ உலகுக்கு வந்தேன். 

“அண்ணே! உண்மையில அவளுக்கும் உங்கள பிடிச்சிருக்கு…. அத என்னட்ட ஏற்கனவே சொல்லிட்டாள். ஆனா முக்கியமா வயசு தான் விசயம்… அடுத்தது காலமும் சூழ்நிலையும் எப்படி அமையு மெண்டு தெரியாது என்றதால பயப்படுறாள்…. அடுத்தது அவளோட Daddy ட்டயும் சொல்லிட்டாளாம்.” 

என தங்கை சொன்னதும் அவளது Daddy பேசிய விதத்தில் நான் ஊகித்தது சரியென பட்டிச்சு. 

“அடுத்தது உனக்கு ஒரு gift தந்திட்டு போனாள். அதை room table ல வெச்சிருக்கன்” 

என்றதும் பாதி குடித்த tea யை வைத்துவிட்டு room க்கு சென்றேன். சின்ன பரிசு பொதி அதை திறந்து பார்த்தேன். அதில் ஒரு Walkman cassette player இருந்தது! இந்த கால mobile hand free ல் பாட்டு கேட்பது போல அந்த காலத்தில் Walkman பெறுமதியானது. அதில் ஒரு cassette in செய்யப்பட்டிருந்திச்சு. அது அவள் பாவித்துவந்த ஒன்றென தெரிஞ்சிச்சு. Earphone னை காதில் மாட்டி என்ன இருக்குமென பார்க்க on செய்ததும்…

‘ விழியில் விழுந்து இதயம் நுளைந்து உயிரில் கலந்த உறவே…. என்ற பாடல் தொடங்கிச்சு…. பின் திடீரென பாடல் இல்லாமல் போய் அஜந்தா அதில் பேச தொடங்கினாள்!!!!!

தொடரும்……

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!