ஒரு வானவில் போலே 15

ஒரு வானவில் போலே - 15

தொடர் கதை பாகம் 15

“Sir anything problem?” என canteen Staff ஒருவர் கேட்கவும் தான் எனது பதின்ம வயதின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவங்களிலிருந்து வெளியேவந்தேன். அன்று இரண்டுநாள் விடுமுறைக்கு பின் மதுபாசினி வந்திருக்க வேண்டும் இன்னும் வரவில்லை. காலையுணவுக்காக வந்த நேரம்தான் என் காதல் வரலாற்றின் ஜென்ம நீரோட்டத்தில் அடிபட்டிருக்கிறேன். Order செய்த உணவுகள் மேசையில் இருக்க அதை உண்ணாமலே அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தேன். தங்கை செல்வியுடன் பேசினால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமென நினைத்தேன். Office க்கு சென்று mobile ல் தங்கையை அழைத்தேன்….

“Hai அண்ணே! எப்படி இருக்கே? உனக்கு call எடுத்தேன் switch Off னு வந்திச்சு…” என்றவும் தான் இரண்டு நாளுக்கு முன்னாடி charge ல் போடாமல் இருந்தது ஞாபகம் வந்திச்சு….

“எனக்கென் பொண்டாட்டியா பிள்ளையா குட்டியா? இதெல்லாம் ஞாபக படுத்த” என பதில் சொன்னேன்.

“அண்ணே! நீ எதையும் மறக்கல… அதுதான் பிரச்சினை! இப்ப கூட எதுவும் கெட்டு போகல நீ ஓமென்டு மாத்திரம் சொல்லு” 

என பதில் வந்தது”…. வழமை போலவே

“There is no objection if you can bring Ajanta itself” 

என சிரித்தவாறே சொன்னேன். மறுபக்கத்திலிருந்து…..

“போ அண்ணே! நீ எதையும் மறக்கவும் மாட்டே மாறவும் மாட்டே! ஆனா அவள் தான்….” என முடிக்க முன்னே…

“சரிம்மா next Sunday Lunch க்கு அங்க வாரேன்” என கூறி தொடர்பை துண்டித்தேன்.

துரோகம் செய்தால் கூட ஒரு வீம்புக்காக வாழ்ந்துகாட்ட தூண்டும். ஆனால் என்வென்றே தெரியாத ஒரு இனிய அன்பானவளின் ஒரு செயல் வாழ்க்கையின் மீளவே முடியாத பக்கவாதம். இதன் அர்த்தம் அப்படி அதிலிருந்து மீண்டவர்களை சந்தர்ப்பவாதிகளென சொல்லவில்லை…. நிச்சமாக அதிஷ்டசாலிகள் என்பேன்…. எனக்கு அந்த அதிஷ்டமில்லை. ஏனென்றால் எனது மகிழ்ச்சி அவளது நினைவுகளில் தங்கியிருந்தது. இன்று வேலையில் ஈடுபட மனசில்லை என்பதால் ஒரு duty leave போட்டுவிட்டு போக நினைத்த போது….. கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தேன் கண்ணாடி கதவின் மறுபுறம் மதுபாசினி நின்றிருந்தாள்…..

“yes come in…” 

என்றதும் உள்ளே வந்தவளை பார்த்து அசந்து நின்றேன். மெல் மஞ்சள் நிறமும் தூய வெண்மையும் கலந்த சல்வாரில் ஒரு தேவதை போல நின்றாள். எனக்கு பிடித்த நிறம்… ஏறத்தாழ இதற்கு நிகரான உடையில் அஜந்தாவை ரசித்திருக்கிறேன். தவிர பொதுவாக எந்த பெண்ணின் ஆடையையும் ஆழமாக ரசித்ததில்லை. எனது செயலை நினைத்து ஆச்சரியபட்டேன்! இது கூட தப்பாக தெரிய பார்வையை தாழ்த்திக் கொண்டேன். 

“Good morning Sir…. Sorry sir little delay” 

என்றவளிடம்…..

“Good morning. it’s ok nice to meet you” என்றதும் சம்பிரதாயமாக தனது file வேலைகளை செய்ய தொடங்கினாள் மதுபாசினி.

நானும் laptop இனில் எதையோ செய்வது போல் எனது கடந்த காலத்தை நோக்கி ஓடும் தேவை வந்தது. 

“Hai Kathir எப்படி இருக்கே?” என தர்சன் கேட்கவும்…. நானும்….

“Fine டா நீ எப்படி இருக்கே?” என்றேன்

” I’m fine too. Okay let’s go out a little bit” என்றதும் இருவரும் சேர்ந்து மற்றைய நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றோம். அன்றைய நாளை நண்பர்களோடு கழிப்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்திச்சு. ஆனால் நான் பயந்தது போல் தர்சன் எதையும் என்னிடம் கேட்கவில்லை. தங்கை சொன்னது சரி எனப்பட்டது. தமயந்தி அக்காவின் பேயோட்டும் நாடகத்தின் இறுதி கட்டத்தை அன்றிரவு செய்ய வேண்டும். அதில் எனது பாத்திரம் முக்கியமானது. அன்று எங்கள் வீட்டில் அப்பாவும் ஏதோ பயணம் போயிருந்தது நல்ல வசதியாக அமைந்தது எட்டு மணிக்கே பத்துமணிக்கு alarm வைத்துவிட்டு உறங்கிவிட்டேன். நான் அன்றிரவும் பதினொரு மணி போல சந்தடியில்லாமல் சென்று மதில் பாயந்து காத்திருந்தேன் Signal வந்ததும்…. அதே போல மின்சாரத்தை துண்டித்தேன் பின்னர் அங்கிருந்த முருங்கை மரத்தை தட தடவென உடைத்தேன். கதைப்படி பேயாக வந்த Hitler ன் அம்மா தமயந்தியின் விருப்பப்படி குணசேகரனை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்ததால் தமயந்தியை விட்டு போய்விடுவதாக ஒப்பந்தம். அவ்வாறு போவதை உறுதிப்படுத்த முருங்கை மரத்தை உடைப்பது அடையாளம். Mission complete நாய்களும் கோரமாக கத்தி ஊளையிட தெடங்கியது. நான் வீட்டுக்கு வந்து மெதுவாக கதவை திறந்து மறுபடி மூடிவிட்டு தங்கையின் room னை தாண்டும் போது அந்த பேச்சு சத்தம் மெதுவாக கேட்டது. ம்ம் அப்போதுதான் அஜந்தா தங்கையின் room ல் இருப்பது தெரிந்தது.

தொடரும்….

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!