ஒரு வானவில் போலே - 12
தொடர் கதை பாகம் 12
ஆள் நடமாட்டத்தை கவனித்து தயாராக எடுத்துச் சென்ற Cycle chain உடன் தமயந்தி அக்காவீட்டின் பின் மதிலால் உள்ளே குதித்தேன். உள்ளேயிருந்து பேயோட்டும் நிகழ்வுகளின் சத்தம் தெளிவாக கேட்டது. எனக்கான Signal வந்ததும் ஏற்கனவே மதில் சுவரோரத்தில் அஜந்தாவின் Daddy யினால் வைக்கப்பட்டிருந்த கொக்கையின் முனையில் அந்த Cycle chain னை மாட்டி பின்புற தொருப்பக்கமாக போகும் light post க்கு இடையில் ஓடும் மின்சார கம்பிகளுக்கு நடுவில் போட வேண்டும்…. அப்போது அந்த பகுதிக்கே மின்சாரம் போய்விடும். அது பேயோட்டும் நிகழ்வின் ஒரு முக்கிய பூஜை நடக்கும் போது நிகழ வேண்டும்…. அத்தோடு தயாராக வைத்திருக்கும் சில கற்களை தமயந்தி அக்காவீட்டு கூரைக்கும் பின்பக்க கதவையும் பதம்பார்க்க வீச வேண்டும். அதன் பின் சந்தடியில்லாமல் தப்பித்து நான் வீட்டுக்கு செல்ல வேண்டும்…. அந்த செயல்கள் பூஜை மீது கோபம் கொண்ட பேய் தனது ஆக்ரோஷத்தை காட்டுவதாக இருக்கும். அந்த நாடகம் இவ்வாறுதான் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிட்ட படியே சரியாக பதினொருமணி தாண்டி எனக்கான Signal வந்தது…. அதாவது பூசாரியின் உதவியாளன் ஏதோ சில பொருட்களை பின் கதவை திறந்து வீசிவிட்டு கதவை மூடி சில நிமிடங்களில் எனது விளையாட்டுகள் நடக்க வேண்டும்.
நான் வேறு எந்த வகையிலும் பயபட தேவையில்லை. ஏனென்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஆண்கள் பெண்கள் வேறு வேறாக இரண்டு room களில் அடைக்கப்பட்டு காவலிடப்பட்ட பின்பே பூஜை நடத்தப்படும்…. எனக்கான Signal வந்ததும் மின்னல் வேகத்தில் செயற்பட்டேன் மின்சார கம்பி மீது Cycle chain னை போட்டதும் சட்டிஸ் சட்டிஸ் என்ற சத்தத்துடன் Power Cut ஆகிவிட்டது. அந்த இருளில் கணித்திருந்த வகையில் கூரைக்கும் பின் கதவுக்கும் சில கற்களை வீசிவிட்டு அங்கிருந்து Escape ஆகிவிட்டேன். இந்த நிகழ்வோடு Bonus ஆக நாய்களும் ஊளையிடத் தொடங்கியது. அந்த Drama பற்றிய உண்மை நிலை தெரியாமல் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கும் பயம் வந்திருக்கும். எங்கள் வீட்டை அடைந்து சாத்தப்பட்ட பின் கதவை திறந்து சந்தடி இல்லாமல் உள்ளே சென்று கதவை மூடினேன். நடு நிசி நெருங்கிய நேரம்…. தெரு நாய்களின் ஓலம்…. பேயோட்டும் நிகழ்வு என சம்பவங்கள் நடக்க எங்கள் வீட்டிலும் பயத்துடன் அவரவர் உறங்கி கொண்டிருப்பதாக முடிவெடுத்தேன். அதிகமான பேய்க்கதைகளின் பின்னால் இப்படியான சில இலாபநட்ட கணக்குகள் இருக்கலாம் என்ற அறிவும் அனுபவமும் எனக்கு கிடைச்சிச்சு! ‘ thanks uncle’ என அஜந்தாவின் Daddy க்கு மனதால் நன்றி கூறினேன்.
மறு நாள் காலையில் எழுந்து காலைக் கடன் முடித்து வீட்டு Hall க்கு வந்ததும் அம்மா tea கோப்பையுடன் வந்து கண்களில் மிரட்சி தெரிய நேற்றிரவு நடந்த சம்பவங்களை வர்ணித்தார் அதற்கு காரணம் தமயந்தி அக்கா வீட்டில் வந்திருக்கும் பேய் எனவும் கூறினார்…. சிரிப்பை காட்டிக் கொள்ளாமல் நான்
“நல்ல நேரம் நான் ஒன்பது மணிக்கே படுத்திட்டன்” என்றேன். தங்கை செல்வி மட்டும் அதை நம்பவில்லையென தெரிஞ்சிச்சு. அதை நிரூபிக்கும் வகையில் எனக்கு அருகில் வந்து…..
“Ajantha had already told me that something like this was going to happen!” என்று அம்மாவுக்கு புரியாத வகையில் கூறி கண்சிமிட்டிவிட்டு சென்றாள். ஆனால் இந்த பேய்க்கதை ஊர் முழுதும் பரவி இருந்திச்சு.
தொடரும்….
எம்.யூ.அப்துல் ரஹீம்